Thursday 10 March 2016

அமாவாசையில் குழந்தை பிறந்தால்

ஆண் முலம் அரசாலும் ,
பெண் முலம் நிர்முலம் ,
பூராடம் நூல் ஆடாது,
வீட்டிற்க்கு ஒரு பிள்ளை உத்திராடத்தில்,
கேட்டை கோட்டை ஆழ்வார்கள் ,
இது போல பல பழமொழிகள் சோதிட
நூல்களில் உள்ளது ,
இதன் உண்மையான விளக்கம் ஆராய்ந்து
அறிந்து கொள்ளுதல் அவசியம்.
நான் சோதிடம் பயில எந்த வகுப்பிற்கும்
செல்லவில்லை சில நூல்கள் படித்து
உண்டு மற்றும் சோதிட நண்பர்களின்
அனுபவம்கள் அவர்கள் சொல்லிய
சில தகவல்கள் மற்றும்
குருதேவர் அகத்தியர் ஆசியால் சில ரகசியம்
புரிந்து கொள்ளபட்டது அதை இங்கே
பதிகிறேன் ...
அமாவாசை பற்றி சில தகவல்களை நாம்
தெரிந்து கொள்ளவேண்டும் ,
சூரியனும் ,பூமி,சந்திரன் இவைகள் சார்ந்த
விவரம் தான் பௌர்ணமி அமாவாசை ...
அகத்தியர் அவர்கள் தான் விண்ணுலக
தகவலை நமக்கு அருளி உள்ளார்.
இவர் ஞானத்தால் வின் கடந்து பிரபஞ்ச
ஞானம் அடைந்து சுத்த வெளியில்
உள்ள தேவர்களை அறிந்து நமக்கு ஒரு
கணிதமாக தந்தது
சோதிட நூல்கள் .
அவர் கொடுத்த தகவலை நாம்
படித்து புரிந்து கொண்டோம்
என்றால் இன்று
அறிஞர்கள் தரும் தகவல்கள் அன்றே இவர்
கொடுத்த விவரம்கள் என்று புரிய
வரும் .
ஆண் சக்தி -- சூரியன்
பெண் சக்தி --சந்திரன்
பத்தினி என்பது பூலோகம் (பூமி )(உயிர்கள்
உறைவிடம் )
சூரியனும் சந்திரனும் ஒரே பார்வையாக
சமமாக பார்ப்பது பௌர்ணமி
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைவெளி
விட்டு நடுவில் பத்தினி நின்றால் அமாவசை.
சூரிய, சந்திர, பூமிக்கு உள்ள இடைவெளி
திதி என்பதாகும் .
சூரியன் என்பது ஆன்மாவை குறிக்கும்
சந்திரன் என்பது உடலை குறிக்கும்
சோதிட நூல்களில் விதி மதி கதி என்பார்கள்
,இவைகளின் பலன் என்பது
உயிர் ,உடல் ஆன்மா என்பதாகும் .
(லக்னம் ,சந்திரன் ,சூரியன் )
உடலில் இருந்து உயிர் பிரிந்து செல்லும்
பொழுது ஆன்மாவும் பிரிந்து
செல்லும் (ஆன்மாவும்
உயிர்காற்றும் பாம்பை போல் பின்னி
இருக்கும் )
இந்த நிலையை சவம் என்கிறோம் ,
இதைபோல சூரியனை(ஆன்மா ) சுற்றும் உயிர்
என்ற பூமி சந்திரனின் பார்வை இழந்தால்
(உடல் ) சவம்
(அமாவசை) என்று பொருள் படும் .
உண்மையில் "அம்மாவின் ஆசை என்ற
வார்த்தை அமாவசை" என்று மருவியது --ஒரு
பெண்ணை தாயாக்கிய ஆன்மாவை
அதில் இருந்து உண்டான உயிர் எள்ளு நீரை
தரவேண்டும் என்பது தான் அவளின் ஆசை .
இதை போல சூரியனும் சந்திரனும் ஒரு கோட்டில்
அதாவது ஒன்றாக சேர்வது /பார்ப்பது
பௌர்ணமி .
இன்று ஆண்சக்தியும் பெண்சக்தியும்
நிறைந்து கலந்து நிற்கும் ,
இதை உணர்ந்த ஞானிகள் /சித்தர்கள் இந்த
நாளில் அம்மை அப்பனை தரிசனம் கண்டு
மகிழ்வார்கள் ,மக்கள் இன்று மகேச பூசை
செய்யவும் என்று
சொன்னார்கள் .
அமாவசை /பௌர்ணமியை பற்றிய தகவல்
அறிந்து கொண்டோம் இனி
அமாவாசையில் பிறந்தால் தீய பலனா
என்றால் கண்டிப்பாக இல்லை ..
சூரிய கதிர்கள் அதிகமாக இருக்கும் நாள்
அமாவசை ,
தீர்க்க ஆயுளை ஆரோக்கியத்தை
கொடுக்கும் நாள் அமாவசை ,
கூர்மையான அறிவை தரும் நாள் அமாவசை ,
இப்படி தன்மைகளை உடைய அமாவசை திதி
குருட்டு/இருட்டு திதி என்கிறது சோதிட நூல்கள் .
திருடர்கள் இருட்டை நம்பி தான்
கொள்ளையில் ஈடு படுவார்கள் .
சில திருடர்கள் அமாவசை அன்று
கருப்புசாமிக்கு பூசை போடுவார்கள் ,
சூரியனின் பலம் அதிகம் உள்ள நாள்
என்பதால் அன்று நன்மை என்பது திருடர்கள்
நம்பிகை .
மேலும் சூரியன் ஆன்மா என்பதால் ஆவி
உலகில் உள்ள ஆன்மாக்கள்
அமாவசையன்று பூமிக்கு வரும் என்று சோதிட
நூல்கள் சொல்கிறது .
முன்நோர்களுக்கு திதி,படையல் போன்ற
காரியம்களை இன்று செய்ய
சொல்கிறது திதி நூல்கள் .
கிட்னி செயல் இழந்த பல நபர்களின்
பழக்க வழக்கத்தை நான்
ஆராய்ந்தபொழுது அவர்கள்
முன்னோர்கள் வழிபாட்டை செய்வது
இல்லை ,
மருத்துவ நூல்கள் சொல்கிறது
கிட்னிக்கும் மனதிற்கும் சம்பம்தம் உண்டு
,மன நோயாளியாக இருக்கும் நபருக்கு
அமாவசை பௌர்ணமிக்கு
தான் அவர்கள் செயல்
மாறுபடுகிறது என்று
சொல்லபடுகிறது .
அமாவசை திதி கிட்னி ,மனம் ,தேவதைகள்
சார்ந்து செயல்படும் என்று
கவனித்தால் புரியும் ,இதை கண்டுபிடித்த
சித்தர்கள் இந்த செயல்பாட்டுகளை
கட்டுபடுத்த அமாவாசைக்கு பூசணியை
படையலில் சேர்த்து உன்ன
சொல்வார்கள் ,
இன்று இந்த காய் திருஷ்டிக்கு பயன்பட்டு
வருகிறது .
அமாவசை பிறப்பு தனித்துவம் வாய்ந்தது
என்று அவர்கள் வாழ்வில் விந்தையான
வெற்றிகளை அடையும் பொழுது
உணரலாம் .....

1 comment:

  1. அறிவியல் ரீதியாக உண்மை...

    ReplyDelete