Sunday 6 March 2016

முகூர்த்த நாள் குறிக்கலாம் வாங்க

1.ஆண்,பெண் இருவருக்கும்
ஜென்மம்,அனுஜென்
மம்,திரிஜென்ம நட்சதிரமாக மூகூர்த்த
நாள் இருக்க கூடாது.
2 முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழு,எட்டாமிடம்
சுத்தமாக இருக்க வேண்டும்.பாபிகள்
பார்வை ஏழு, எட்டுக்கு இருக்க கூடாது.
3.எந்த தேதியில் பிறந்திருந்தாலும் திருமண
நாள் அன்று ஆங்கில தேதியின் கூட்டு எண்
4,5,6 ஆக வரக்கூடாது.
4.வளர்பிறை காலம் சிறப்பு என்றாலும்
தேய்பிறையிலும் செய்யலாம், திதிகளில்
துவிதியை, திருதியை, பஞ்சமி,சஷ்டி,சப
்தமி,தசமி,துவாதசி, திரயோதசி போன்றவை
சிறப்பு.
5 . நட்சதிரங்களில் ரோகிணி, மிருகசீரிடம்,
மகம்,உத்திரம்,அஸ்தம், சுவாதி, அனுசம்,
மூலம், உத்திரட்டாதி, திருவோணம், ரேவதி
போன்ற நட்சதிர நாட்களும்.
6.லக்னங்களில் ரிஷபம், மிதுனம்,
கடகம்,கன்னி,துலாம்,தனுசு,கும்பம்,
போன்றவை.
7 மாதங்களில் சித்திரை, வைகாசி, ஆனி, தை,
பங்குனி போன்றவை.
8. கிழமைகளில் புதன்,வியாழன்,
வெள்ளி சிறப்பு, ஞாயிறு,திங்கள்
மத்திமம், செவ்வாய் , சனி கூடாது.
9.முகூர்த்த லக்னத்திற்க்கு புதன், குரு,
சுக்கிரன் 6,8,12 ல் இருக்க கூடாது.
10.மூகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடத்து
அதிபதி பலம் பெறுவதும், ஏழாமிடத்தை
குரு பார்ப்பது சிறப்பு.
11. மூகூர்த்த நேரத்திற்க்கு சுக்கிரனுக்கோ,
செவ்வாய்க்கோ, 1,2,3,5,7,9,11,12 ல் குரு
இருந்தால் திருமண வாழ்வு சிறப்பு
பெறும். 1,5,9 ல் கேது இருப்பது
சிறப்பானது அல்ல!!

No comments:

Post a Comment