Monday 30 November 2015

வைத்தீஸ்வரன் கோவில்

இத்திருக்கோவிலில்
உறையும் இறைவனின் திருநாமம் வைத்தீஸ்வரர்
என்பதாகும். வைத்தியநாதன், புள்ளிருக்கு
வேளூரான் என்னும் பிற பெயர்களும்
இறைவனுக்கு உண்டு. அம்பாள்
தையல்நாயகி ஆவாள்.
இப்புண்ணிய தலத்தில்தான் இறைவன்
முருகப்பெருமானுக்கு வேலாயுதம்
வழங்கியதாக கூறப்படுகிறது. ஐடாயுபுரி,
வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி என்னும் பிற
பெயர்களும் இத்திருத்தலத்திற்கு உண்டு.
இத்தலத்து உறையும் இறைவனான
வைத்தீஸ்வரன் மந்திரத்தால்,
தந்திரத்தால், மருந்துகளால் நீங்கிடாத
கொடிய நோய்களைத் தன்
பெயருக்கு ஏற்றாற்போல் போக்கிக்
குணமளித்திடுகிறார். அன்னை உமையவள் தம்
துணைவரான இறைவனுக்குத் துணையாகத்
தைலப்பாத்திரம் ஏந்தி உடனிருந்து பிணி
தீர்த்தமையால் தையல்நாயகி என்றும்,
தைலாம்பாள் என்னும் போற்றப்படுகின்
றாள்.
இத்தலத்தில் தன்வந்திரி பகவான்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருவது விசேஷ மாகும். இந்த புண்ணியத்
தலத்தில் தம் வலிமையை நவக்கிரகங்கள்
இழந்துவிடுகின்றன. மேலும் இத்தலம்
அங்காரகத் தலமும் ஆகும். இங்கு
அங்காரகனுக்குத் தனி சன்னதி
அமைந்துள்ளது சிறப்பாகும். சூரியனைத் தவிர
பிற கிரகங்கள் வழக்கமான பல திக்குகளைப்
பார்க்காது ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை
மாலை வேளையில் ஆட்டுக்கிடா வாகனம்
ஏறி அங்காரகன் ஆலயத்தின்
பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கும்,
அன்பர்களுக்கும் அருள்பாலிக்கின்றார்.
ராவணன் வஞ்சகமாக சீதாப்
பிராட்டியைக் கவர்ந்து சென்றபோது
அவனை ஜடாயு எதிர்த்து சண்டையிட்டது.
அப்போது ராவணன் ஜடாயுவின்
சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். இதன்
காரணமாக உயிர் நீத்த ஜடாயுவின்
அந்திமச் சடங்குகளை ராமபிரான் இங்கு
சென்று முடித்தார். இதனால்
இக்குண்டம் ஜடாயு குண்டம்
எனப்படுகிறது. ஒவ்வொரு வருடமும்
பங்குனி மாதம் இத்திருத்தலத்தில்
பிரம்மோற்சவம் நடைபெறும்.
உற்சவத்தினுடைய 5-ம் நாள் அன்று
செல்வமுத்துக்குமாரசுவாமி
வைத்தீஸ்வரரை பூஜித்து வேலினைப் பெற்றிடும்
திருக்காட்சி வைபவம் தத்ரூபமாக
நடைபெறும்.
இத்திருக்கோவில் இறைவனின் சன்னிதியில்
திருச்சாந்து உருண்டை பெற்று
நோயாளிகள் உண்டால் அவர்களை வருத்தி
வந்த நோய்கள் நீங்கிக் குணம் பெறுவர்.
இவ்வாலயத்தில் நடைபெறும்
அர்த்தஜாமப் பூஜை வெகு விசேஷமான
ஒன்றாகும். முதலில் செல்வ
முத்துக்குமாரசுவாமிக்கு பூஜை
நடைபெறும். அடுத்து இறைவனுக்கும்,
அம்பாளுக்கும் முறைப்படியான பூஜைகள்
நடைபெறும். அர்த்தஜாமப்
பூஜையின்போது செல்வ முத்துக்குமாரசு
வாமிக்கு சாற்றப்படும் நேத்திரப்படி
சந்தனப் பிரசாதம் மிகவும்
சிறப்புடையாதாகும்.
இது எண்ணிய காரியங்கள் அனைத்தையும்
ஜெயமுடன் முடித்து வைக்கும் மகிமையைக்
கொண்டது. இத்தலம் பற்றியப்
பாடலைப் பாட குமரகுருபரருக்கு
அடியெடுத்துக் கொடுத்தது
முத்துக்குமாரசுவாமி தான் எனவும்
கூறப்படுகிறது. இத்தலத்து சித்தாமிர்தத்
தீர்த்தத்தில் நீராடி முடித்து வைத்தீஸ்வரர்,
தையல் நாயகி, முத்துக்குமாரசுவாமி
ஆகியோரை பணிந்து பக்தியுடன் வழிபட்டால்
உடல் நோய் மட்டுமல்லாது மனத்துயரங்களும்
, பிறவித் துயரும் நீங்கும் என்பது நிச்சயம்.

பூரி ஜெகன்னாதர் ஆலய மகிமைகள்

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு
அற்புதங்கள் ...
1.கோயிலின் கொடி காற்றடிக்கும்
திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2.கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த
இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து
பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும்
சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே
இருக்கும் .
3.பொதுவாக காலையிலிருந்து
மாலை வரையான நேரங்களில் காற்று
கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை
முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை
நோக்கியும் வீசும்,ஆனால்
பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.
4.இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல்
பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு
தெரிவதில்லை.
5.இந்த கோயிலின் மேல் விமானங்களோ
அல்லது பறவைகளோ மறப்பதில்லை .
6.இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும்
உணவின் அளவு வருடத்தின் அனைத்து
நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்.
ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை
இரண்டு லட்சமானாலும் சரி இருபது
லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு
பத்தாமல் போனதும் இல்லை.
மீந்து போய் வீணானதும் இல்லை.
7.இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல்
ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு
விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள்
அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள
பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில்
உள்ள முதல் பானையில் உணவு
வெந்து விடும் அதிசயம்
8.சிங்கத் துவாராவின் முதல் படியில்
கோயிலின் உட்பறமாக காலெடுத்து
வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த
விதமான சப்தமும் நமக்கு கேட்காது .
ஆனால் ...
அதே சிங்கத்துவராவின் முதல் படியில்
கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது
கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும்
நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில்
தெளிவாக உணர முடியும்.

குழந்தை பாக்கிமுண்டாக

குழந்தை பேறு வரம். வழங்கும். ஒர் சிவன்
கோவில். பெயர் புத்ரலிங்கம். இடம்.
திருவாடுதுறை ஆதினம்.அருகில் உள்ள.
திருவாலங்காடு.எனும் ஊர் . தமிழ்
நாட்டில் உள்ள சிவன் கோவில்களிள் தனி
சிறப்பு உள்ளது.இங்கு மேற்க்கு நோக்கி
சிவலிங்கம். இருக்கும்
..தெற்க்குநோக்கி திருகுளம்.
புத்ரலிங்கம் தனிசந்நிதி.
எனக்குதெரிந்தவரை குழந்தை வரம்
அருளும் ஒரே சிவலிங்கம். மற்றவர்களுக்கு
உதவியாக இருக்கும் .உங்கள் முலம்
தெரியப்படுத்துங்கள்.
நம்பிக்கைத்தான் வாழ்க்கை
...ஓம்நமசிவாய.

திருவானைக்கா அம்பிகை

கோயிலில் அர்ச்சகர்கள் அவர்கள் நிலையில் பூஜை
செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால்,
அவரே சேலை அணிந்து, கிரீடம் தரித்து
பெண் தோற்றத்தில் சிவபூஜை
செய்வதைப் பார்த்திருப்போமா? இதைக்
காண நாம் திருஆனைக்கா செல்ல
வேண்டும்.
பஞ்ச பூதத் தலமாகவும் சக்தி
பீடமாகவும் திகழும் தலம் திருஆனைக்கா.
சக்தி பீட வரிசையில் வாராஹி பீடத்
தலமாக விளங்குகிறது. பூலோக
வைகுந்தமான திருவரங்கத்துக்கு அருகில்
காவிரிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்தத்
தலத்தில் அன்னை உலகைக் காக்கும்
ஈஸ்வரியாக அகிலாண்டேஸ்வரி என்ற
திருநாமத்துடன் கோயில்
கொண்டுள்ளார்.
இங்கே சிவபெருமான் ஜம்புகேஸ்வரர்
என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.
பஞ்ச பூதத் தலங்களில் நீர்த் தலமாக
விளங்கும் இந்தத் தலத்தில், ஈஸ்வரியே
லிங்கப் பெருமானை உண்டாக்கி
பூஜித்தாராம்.
"நீரின்றி அமையாது' உலகம் என்பர்.
அத்தகைய பெருமை வாய்ந்த நீரை
ஒன்றாக்கித் திரட்டி, லிங்கப் பிரதிஷ்டை
செய்து பூஜித்தார் அன்னை
அகிலாண்டேஸ்வரி. அமுதம் போன்ற நீரை
உமாதேவியார் திரட்டி லிங்கமாக்கி
பூஜித்ததால், பெருமானுக்கு
அமுதலிங்கம் என்று திருப் பெயர்.
ஜம்புகேஸ்வரர் என்றும் அழைப்பர். இங்கே
பெருமானின் கருவறையில் நீர் சுரந்து
கொண்டிருக்கிறது.
அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில்
ஜம்புகேஸ்வரரை உச்சிக் காலத்தில் பூஜை
செய்கிறாராம். எனவே மதிய வேளையில்
அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்,
அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும்
மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேள
தாளம் முழங்க சிவபெருமானின்
சந்நிதிக்குச் செல்வார்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்து,
கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள்
சந்நிதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே
நேரில் சென்று செய்வதாகக்
கூறுவர். எனவே, இந்நேரத்தில் அர்ச்சகரை
அம்பாளாகவே பாவித்து பக்தர்கள்
வணங்குவதைக் காணலாம்.
இங்கே ஆடி மாதத்தில்தான் அம்பாள்
சிவபெருமானை வேண்டி
தவமிருந்தாராம். எனவே, ஆடி
வெள்ளி இங்கே சிறப்பான திருவிழா.
அம்பாள் இங்கே மூன்று தேவியராகவும்
காட்சி தருவது சிறப்பான அம்சம்.
காலையில் லட்சுமியாகவும்,
உச்சிக்காலத்தில் பார்வதியாகவும்,
மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி
தருகிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி.
இந்தத் தலத்தில் சிவபெருமான்,
அம்பிகைக்கு குருவாக அமர்ந்து உபதேசம்
செய்தார் என்பர். எனவே, அம்பாளே
மாணவியாக இருந்து பெருமானிடம்
கற்றறிந்தார் என்பதால், மாணவர்கள்
தேர்வுக்கு முன்னர் அம்பாளிடம் மனமுருக
வேண்டிக் கொள்கிறார்கள்.
தேர்வு பயம் அகன்று, நல்ல மதிப்பெண்
பெற்று நல்ல மாணவனாக
விளங்க, அகிலாண்டேஸ்வரியின் அருளை
வேண்டுகின்றனர்.

தானங்களும் நன்மைகளும்

1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும்
நீங்கும்.
2. வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி
செய்யும்.
3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர
தரிசனத்தையும் கொடுக்கும்.
4. கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன்,
பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
5. தீப தானம் - கண்பார்வை
தீர்க்கமாகும்.
6. நெய், எண்ணை தானம் - நோய்
தீர்க்கும்.
7. தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.
8. வெள்ளி தானம் - மனக்கவலை
நீங்கும்.
9. தேன் தானம் - புத்திர பாக்கியம்
உண்டாகும்.
10. நெல்லிக்கனி தானம் - ஞானம்
உண்டாகும்.
11. அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.
12. பால் தானம் - துக்கம் நீங்கும்.
13. தயிர் தானம் - இந்திரிய விருத்தி
ஏற்படும்.
14. தேங்காய் தானம் - நினைத்த காரியம்
நிறைவேறும்.
15. பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும்
கிட்டும்.

விபூதி தத்துவம் Viboothi

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின்
சாணத்தை எடுத்து உருண்டையாக்கி,
காயவைக்க வேண்டும். பின் இதனை
உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க
வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே
உண்மையான திருநீறாகும்.
அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும்
உள்வாங்கும் திறன் கொண்டது.
எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன
என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த்
தான் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம். எமது
உடலானது இவ் அதிர்வுகளை
ஏற்றுக்கொள்ளுகின்றது.
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்
கொள்ளும் தன்மை வாய்ந்தது.
அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில்
திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம்
இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய
பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த
நெற்றியிலேயே வெப்பம்
அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது,
உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின்
சக்தியை இழுத்து சரியான முறையில்
உள்ளனுப்பும் அற்புதமான
தொழிலை திருநீறு செய்யும்.
அதனாலேயே திருநீறை நெற்றியில்
இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக்
குறைந்துவிட்டால், வெப்பமான
நாடுகளில் வளரும் கோழி இனங்கள்
சாம்பலிலே விழுந்து குளிப்பதைக்
கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை
தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே
போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி
தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை
உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு
செய்கின்றார்கள். மாடு அறுகம்புல்
போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு.
தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும்.
அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும்
இரசாயன மாற்றங்கள் உடலுக்கு
மருத்துவத்தன்மையைக்
கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள
பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை
உள்ளன. அதனால் அந்த இடத்தைப்
பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச்
செய்யமுடியும். அதனாலேயே
மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில்
திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.
சந்தனம் நெற்றியில்
வெளியிடப்படும் வெப்பத்தை
நீக்குகின்றது. அதிகமான வெப்பம்
கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில்
பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத்
தொழிற்படுகின்ற
நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex
என்னும் இடத்தில் அணியப்படும்
சந்தனமானது வெப்பம் மிகுதியால்
ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில்
இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில்
ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும்
Hippocampus என்னும் இடத்திற்கு
ஞாபகங்களை சிறப்பான முறையில்
அனுப்புவதற்கு இந்த frontal cortex
சிறப்பான முறையில் தொழிற்படும்.
உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை
நெற்றியிலும் உடலின் பல
பாகங்களிலும் இந்து சமயத்தவர்
அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப்
பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான
காரணமும் அதில் உண்டு
பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும்
இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே
பட்டும்படாமலும் சுண்டுவிரலை
நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை
உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே
வைத்துத் தியானம் செய்தால்
மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை
தெளிவுபெறும், எதையும்
தெளிவாகப் புரிந்து
கொள்ளும் நிலை தோன்றும். அந்த
நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன்
இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம்
சரியான மருந்து. இந்த உண்மைகளைச்
சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க
முடியாத மக்களுக்கு நிலையில்லா
வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை
உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள்.
மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை
மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம்
வென்றது, விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும்
இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்)
வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக்
கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்)
நமது சக்தியை அதிகரித்துக்
கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி
தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும்,
வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால்
எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே
மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச்
சொல்லலாம். நம் வாழ்வையே
கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

Sunday 29 November 2015

நட்சத்திரத்திற்குரிய வழிபாடு

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய
சிவரூபங்கள்
அசுவனி. … கேது. … கோமாதாவுடன் கூடிய
சிவன்
பரணி. … சுக்கிரன். … சக்தியுடன் கூடிய
சிவன்
கார்த்திகை. … சூரியன். … சிவன் தனியாக
ரோகிணி … சந்திரன். … பிறை சூடியப்
பெருமான்
மிருகசீரிஷம். … செவ்வாய். …
முருகனுடைய சிவன்
திருவாதிரை. … ராகு. … நாகம் அபிஷேகம்
செய்யும் சிவன்
புனர்பூசம். … குரு. … விநாயகர், முருகனுடன்
உள்ள சிவன்
பூசம். … சனி. … நஞ்சுண்டும் சிவன்
ஆயில்யம். … புதன். … விஷ்னுவுடன் உள்ள
சிவன்
மகம். … கேது. … விநாயகரை மடியில் வைத்த
சிவன்
பூரம். … சுக்கிரன். … அர்த்தநாரீஸ்வரர்
உத்ரம். … சூரியன். … நடராஜ
பெருமான்-தில்லையம்பதி
ஹஸ்தம். … சந்திரன். … தியாண கோல
சிவன்
சித்திரை. … செவ்வாய். … பார்வதி
தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்
சுவாதி. … ராகு. … சகஸ்ரலிங்கம்
விசாகம். … குரு. … காமதேனு மற்று,ம்
பார்வதியுடன் உள்ள சிவன்
அனுஷம். … சனி. … ராமர் வழிபட்ட சிவன்
கேட்டை. … புதன் … நந்தியுடன் உள்ள சிவன்
மூலம். … கேது. … சர்ப்ப விநாயகருடன்
உள்ள சிவன்
பூராடம். … சுக்கிரன். … சிவ சக்தி கணபதி
உத்திராடம். … சூரியன். … ரிஷபத்தின்
மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை
கானும் சிவன்
திருவோனம். … சந்திரன். … சந்திரனில் அமர்ந்து
விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்
அவிட்டம். … செவ்வாய். …
மணக்கோலத்துடன் உள்ள சிவன்
சதயம். … ராகு. … ரிஷபம் மீது சத்தியுடன்
உள்ள சிவன்
பூராட்டாதி. … குரு. … விநாயகர் மடியின்
முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து
காட்சி தரும் சிவன்
உத்திராட்டாதி … சனி. … கயிலாய
மலையில் காட்சி தரும் சிவன்
ரேவதி. … புதன். … குடும்பத்துடன் உள்ள
சிவன்

லிங்காஷ்டகம் lingastakam

நான்முகன் திருமால் பூஜை செய்
லிங்கம்
தூய சொல் புகழ் பெரும்
பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.
காமனை எரித்த பேரெழில் லிங்கம்
இராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.
திவ்ய மணம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.
படம் எடுத்தாடும் பாம்பணை லிங்கம்
கனகமும் நவமணி ஒளித்திடும் லிங்கம்
தட்சணின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.
குங்குமம் சந்தனம் பொழிந்திடும்
லிங்கம்
பங்கய மலர்களைச் சூடிடும் லிங்கம்
வந்ததொரு பாவத்தைப்
போக்கிடும்லிங்கம் வணக்கம் ஏற்ற
சதாசிவலிங்கம்.
அசுரர்கள் அங்கம் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.
எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.
வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்
வில்வமதை மலர் எனக்கொளும்
லிங்கம்
தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவலிங்கம்.

Saturday 28 November 2015

சக்கரத்தாழ்வார் யோகநரசிம்மர்

சக்கரத்தாழ்வார்
மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு
ஆயுதங்கள் இருக்கின்றன .அவர் வலது
கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம்
மிகவும் முக்கியமானது .
சக்கரம் என்பது சக்கரத்தாழ்வாரை
குறிப்பதாகும் .பகைவர்களை அழிக்கும்
ஆயுதமாக சக்கரத்தாழ்வார்
விளங்குகிறார்..கலியுகத்தில்மனிதன் ,
பிறவிப்பெருங்கடல் சுழலில் சிக்கி, சிறு
துரும்பு கிடைக்காதா கரை சேர, என
ஏங்கித்தவிக்கும் வேளையில், நான் இருக்கிறேன்
உனக்கு , நீ நினைக்கும் துரும்பாக இல்லை,
ஆழ்கடலில் நிம்மதியாக வழிநடத்தி
உன்னைக் கரை தேற்றும் ஞானக்கப்பலாக,
என கலியுக மாந்தர் அனைவரையும்,
அரவணைத்துக் கடைத் தேற்றும் அற்புத
காக்கும் தெய்வம் தான் ஸ்ரீ
சக்கராத்தாழ்வார்
சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ
சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம்
,திருவாழியாழ்வான் எனும்
திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர்
என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று
பொருள் .சுதர்சனம்
மங்களமானது .
"ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம "
என்று சொன்னால் கிரக தோஷம்
விரைவில் நீங்கி விடும் .
இவருக்கு உகந்த நாள் ----வியாழன் ,சனி
.
கொடிய முதலையிடம் மாட்டிக்
கொண்டு போரிட முடியாமல்
ஆதிமூலமே !என்று அலறிய
கஜேந்திரன் என்னும் யானையை
காப்பாற்ற முன் வந்ததும் இந்த சக்கரமே
.
சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு
அவன் செய்யும் 100 பிழைகளை
பொறுத்து கொள்வதாக
வாக்களித்தார் கிருஷ்ணன்.சிசுபாலன்
101 வது பிழைகளை புரிய ,கிருஷ்ணனின்
ஆணைப்படி ,சீறி எழுந்து அழித்ததும் இந்த
சக்கரம் தான் .
விஷ்ணு எப்போதெல்லாம் வைகுண்டத்தை
விட்டு மண்ணுலகில் அவதாரம்
செய்கின்றாரோ அப்போதெல்லாம்
இந்த சக்கராயுதமும் ஓர் அவதார
புருஷராகப் பிறவியை எடுப்பது
குறிப்பிடத்தக்கது. வராக
அவதாரத்தின்போது ஹிரண்யாட்சன்
என்னும் அசுரனை அழிக்க வராகத்தின்
மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார்.
ஹிரண்யகசிபுவை அழித்தபோது, நரசிம்மரின் கை
நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர்.
மகாவிஷ்ணு, ராமஅவதாரம் எடுத்தபோது
அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார்
பரசுராமர் அவதாரத்தின்போது அவரது
ஏர்க்கலப்பையின் சக்தியாக ஸ்ரீசுதர்சனர்
இருந்தார். கிருஷ்ண அவதாரத்தின்போது
நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து நீதி
நிலைக்கப்பாடுபட்டார் ஸ்ரீசுதர்சனர்..
சக்கரத்தாழ்வார் மகிமை
சொல்லில் அடங்காத
ஒன்றாகும். இவர் மந்திரங்களால் ஆன
மூர்த்தி ஆவார். மந்திரங்களால்
அதிகமாகத் துதிக்கப்படும் மூர்த்தி என்றும்
சொல்லலாம்..
தீயவர்களை அழிக்கவே ,விஷ்ணு கையில்
இருக்கும் சக்கரத்தாழ்வார் எனும் ஸ்ரீ
சக்கரம்
செயல்படுகிறது .சக்கரத்தாழ்வாரை
தினமும் தொடர்ந்து வணங்கி
வழிபட்டு வந்தால் கீழ்வரும் பலன்கள்
கிடைக்கும். கண்ணுக்கு தெரிந்த,
தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு
அழிந்து போவர். இவரை எவரும் எதிர்க்க
மாட்டார்கள். அனைவரும் இவர்கள் மேல்
அன்பைப் பொழிவார்கள்..எங
்கெல்லாம் அநியாயமும்,
அட்டகாசமும், அயோக்கியத்தனமும்
நிகழ்கின்றனவோ அங்கெல்லாம்
உதவிக்கு வரக்கூடிய மூர்த்தி யார்
என்றால் இந்தச் சக்கரத்தாழ்வார்
தான்.திருமோகூர் புராதனமான
சக்கரத்தாழ்வார் சன்னதியில் உற்சவர்
சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில்
மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும்
பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு
கைகளில் ஆயுதங்களுடன் அக்னி கிரீடத்துடன்,
ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ஶ்ரீ
சக்கரத்தாழ்வாரை சரணாகதி அடைந்து
அவர் தம் தாழ் பணிந்தால், நம் பாவ
வினைகளைப் போக்கி, நல் வாழ்வு
அமைத்துக்கொடுத்து , நற்கதி
அளிப்பார்.
சக்கரத்தாழ்வார்
(எதிரிகளை வெல்ல)
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்