Saturday 26 March 2016

உத்ராடம் நட்சத்திர தோச நிவர்த்தி

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
தாய் தந்தை மீது பாசம் உள்ளவர்கள்.
உறவினர்களுடன் அன்புடன் பழகுபவர்கள்.
பதவி மூலம் பணம் சம்பாதிக்கும் யோக
முடையவர்கள். தொழில் அல்லது
வியாபாரம் செய்தும் சிலர்
முன்னேற்றம் அடைவது உண்டு.
அறிவாற்றலும் சாஸ்திர ஞானமும்
உடையவர்கள். அழகான தோற்றமும்,
தேகபலமும் கொண்டவர்கள்.
மனதில் தைரியம் குடி
கொண்டிருக்கும். கலைகளில் ஆர்வம்
காட்டுவர். பொறுமையும், இனிமையும்
இவர்கள் பேச்சில் கலந்திருக்கும். தான்
நினைத்த விஷயத்தை எடுத்துச்
சொல்வதில் வல்லவர்கள். இந்த
நட்சத்திர அதிபதி சூரியன். இதன் நாழிகை
55. உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய
தெய்வம் சிவன் என்கிறார் ஈரோடு
மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய்
சுவாமிஜி அவர் மேலும் கூறியதாவது:-
பிரதோச வழிபாடு:
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பிரதோச
வழிபாடு செய்தால் சகல
செல்வம் பெறலாம்.பிரதோசம்
என்றால் குற்றமற்றது என்று
பொருள். குற்றமற்ற இந்தப்
பொழுதில் ஈசனை
வழிபட்டோமானால் நாம் செய்த
சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோச காலமென்பது மாலை 4 மணி
முதல் 6 மணிவரையான காலமாகும்.
பிரதோச காலம் தோன்றிய கதை என்ன என்பதை
பார்ப்போம். அமிர்தத்தைப் பெற வேண்டி
திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும்
சேர்ந்து கடைந்த போது ஆலகால விசம்
அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை
கடையத் தொடங்கியது தசமித்
திதியாகும். ஆலகால விஷம்
வெளிப்பட்ட நாள் ஏகாதசித்
திதியாகும்.
ஆலகால விஷத்தின் கடுமை தாங்க
முடியாமல் தேவர்களும், அசுரர்களும்
சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட
சிவனும் அந்த விஷத்தை அப்படியே எடுத்து
உண்டார். விஷம் முழுமையாக இறைவனின்
வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனின்
கண்டத்தை அழுத்த விஷமானது கழுத்திலேயே
தங்கிவிட்டது.
அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர்
என்று ஒரு திருநாமமும் பெற்று
அழைக்கப்படடு வரலானார். அதன்பின்பு
சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து
திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசியன்று
அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை உண்ட
தேவர்கள் அந்த சந்தோசத்தில் இறைவனை மறந்து
இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி
மகிழ்ந்திருந்தனர்.
மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை
உணர்ந்து சிவபெருமானிடம் தங்களை
மன்னிக்கும்படி மனமுருகி வேண்டினார்கள்.
பரம கருணா மூர்த்தியான
சிவபெருமானும் மனம் இரங்கி, மனம்
மகிழ்ந்து தம்முன் இருந்த ரிசப தேவரின்
கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை
பார்வதி தேவி காண திருநடனம்
புரிந்தார். இது பிரதோச வேளையாகும்.
அன்று முதல் பிரயோதசி திதியன்று மாலை 6-4
பிரதோச காலம் என வழங்கலாயிற்று.
அமாவாசையிலிருந்து 13-ம் நாளும்
பவுர்ணமியிலிருந்து 13-ம் நாளும் திரயோதசி
திதியாகும். தேய்பிறை பிரதோசம் ஞாயிற்றுக்
கிழமைகளில் வரும் போது ராகு காலமும்
பிரதோச வேளையும் கூடி வரும் 4.30 - 6.00 மணி
வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட
வழி முறையில் பஞ்சாட்சர மந்திரத்தை
ஜெபித்தபடி சிவனை வழிபடுபவருக்கு
முனிவர் சாபம், முன்னோர் சாபம், கிரக
தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
13 பிரதோசங்கள் தொடர்ந்து
முறைப்படி பிரதோச வழிபாடு
செய்பவர்களுக்கு வாழ்வில் சகல
நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூஜை
செய்து அவர்கள் செய்த சகல
பாவங்களும் நீங்கும் சிவனின் திருவடியில்
வசிக்கும் பலன் கிட்டும் என்கிறார்
விஜய்சுவாமிஜி.
சூரிய வழிபாடு:
சூரிய வழிபாடு மிகவும்
தொன்மையான வழிபாடு. நாம்
நமது இரு கண்களாலும்
பிரத்தியட்சமாகக் காண்பது
சூரியனையேயாகும். சிவாலயங்களில் சூரிய
பகவான் தனித்தும், நவக்கிரகங்களுக்கு
நாயகனாகவும் வீற்றிருக்கின்றார்.
ஏனைய ஆலயங்களில் நவ நாயகர்களுக்கு
நடுநாயகனாக வீற்றிருப்பதை நாம்
காண முடியும்.
சூரியனைச் சிவரூபமாக கொண்டு
வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில்
சிவசூரியனுக்கு தனிச்சந்நிதி உள்ளது.
சிவசூரியனுக்கு ஒரு முகம். இரு கைகளில்
வெண்தாமரையை வைத்திருக்கின்றார்.
ஏனைய இரு கரங்களும், அபய, வரத
ஹஸ்தங்களாக உள்ளன. சூரியன் ஏழு
குதிரைகளைப் பூட்டிய குதிரை வண்டியில்
சஞ்சாரஞ் செய்வார் என்பது
வேதவாக்கு. அவர் மாதுளம் பழ
நிறத்தவர்.
இவ்வாறு விக்கிரக வடிவில் சூரியனை
வழிபடும் நாம் தினமும் எமது இரு
கண்களாலும் பார்க்கும் சூரியனை விரத
அனுட்டானங்களுடன் வழிபடுவது வழக்கம்.
சூரிய தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில்
விரதம் இருந்து காலையிலேயே வீட்டில்
இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில்
ஏந்தி
சூரிய பகவானே எனது சூரிய தோஷத்தை
போக்கியருளும்''
என வேண்டி பூவையும், நீரையும் சூரியனைப்
பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு
வணங்கவும். 16, 36, 108 தடவைகள் இதனைச்
செய்யலாம். கோவிலில் சூரியனுக்கு
அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப்
பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத்
தானம் கொடுக்கலாம்.
சிவப்புப்பட்டு, சிவப்புப் பூமாலை
அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து
வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது
மிக்க பலனைத் தரும். சூரிய வழிபாட்டால்
தேக ஆரோக்கியம், உத்தியோகம், உத்தியோக
உயர்வு, நன்மதிப்பு முதலானவற்றை நாம்
பெற்று மங்கள வாழ்வு வாழ
முடியும்.

No comments:

Post a Comment