Saturday 30 December 2017

ஐயப்பனின் அறுபடை வீடுகள்

தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அவை:

1 ஆரியங்காவு
2 அச்சன்கோவில்
3 குளத்துப்புழா
4 எரிமேலி
5 பந்தளம்
6 சபரிமலை

சிறிது விளக்கமாக பார்ப்போம் :

1. ஆரியங்காவு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில்  ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக அய்யப்பன் காட்சி தருகிறார்.

2. அச்சன்கோவில்

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்று விக்கப்பட்ட இந்த கோயிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும் கருப்ப னின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் அய்யப்பனை தரிசிக்கலாம்.  இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது  போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை  ‘கல்யாண சாஸ்தா‘ என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு  அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

3. குளத்துப்புழா
செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ள தால்  ‘பால சாஸ்தா‘ என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அள வுக்கே கட்டப்பட்டு உள்ளது.

4. எரிமேலி

கேரளாவில் உள்ள இத்தலத்தில் அய்யப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவி லேயே உள்ளது.

5. பந்தளம்

இந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய  கோயில் இங்கு உள்ளது. இங்கு  சுவாமி ஐயப்பனுக்குரிய உரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கரு தப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து  கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இதன் அருகில் செங்கனூர் ரயில் நிலையம் உள்ளது.

6. சபரிமலை

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி கேட்பவர்களுக்கு கேட்ட  வரம்  வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் அறுபடை வீடுகளான  இந்த 6 கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும்  சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

உப்புக் குளியல் தாந்த்ரீகம்

துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்றஅனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்

சன்முகி முத்திரை

நம் உடம்பின் இயக்கத்துக்குப் பிராண சக்தியே மூலகாரணமாக விளங்குகிறது . நம் உடம்பில் பிராண சக்தியின் இருப்பு குறைந்தால் சோர்வும், களைப்பும், நோய்களும் உண்டாகும் . எண்ணுதல், பார்த்தல், பேசுதல், சாப்பிடுதல், வேலை செய்தல் முதலிய பல பணிகளால் பிராண சக்தி செலவாகிறது .
மவுனம் : ஒரு நாளைக்கு மவுனமாக இருப்பதன் மூலம் பிராண சக்தியைச் சேமிக்கலாம் . மவுனம் 3 வகைப்படும் . அவை வாய் மவுனம், உடல் மவுனம், மனோ மவுனம் என்பன . பேசாமல் இருப்பது வாய் மவுனம் . சைகைகள் கூட இல்லாமல் இருப்பது உடல் மவுனம் . மனதில் எதுவும் எண்ணாமல் இருப்பது மனோ மவுனம் ஆகும் .
மவுன உண்ணா நோன்பு : பேசாவிரதமும், உண்ணாவிரதமும் சேர்ந்து மேற்கொள்வது மவுன உண்ணா நோன்பு ஆகும் . இதனால் பிராண சக்தியை சேமித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் .
முத்திரைகளால் மூச்சுப்பயிற்சி : கைவிரல்களால் எளிய முத்திரைகளுடன் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் பிராண சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம் . 2 கைகளிலும் மோதிர விரலின் 3ம் அங்குலாஸ்தியை கட்டை விரலால் தொட்டுக்கொண்டு செய்வது விஷம் நீக்கு முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் உடலின் கழிவுகள் வெளியேறும் .கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல், சுண்டு விரல் நுனியைச் சேர்த்து வைத்துக் கொண்டு செய்வது பிராண முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் மூச்சுப்பயிற்சி செய்தால் உடலில் பிராண சக்தி பெருகும் .
கைகளை கோர்த்துக் கொண்டு வலதுகட்டை விரலை மேலே நீக்கிவைத்துக் கொள்வது லிங்க முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் கைகளை மார்புக்கு நேரே வைத்துக்கொண்டு ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் மார்புச்சளி நீங்கும் . உடல் எடை குறையும் . உடல் சூடு அதிகமாகும் . நோய் எதிர்ப்புசக்தி பெருகும் .இரு கட்டை விரல்களால் காதுகளை அடைத்துக்கொண்டு ஆள் காட்டி விரல்களை கண்களின் மீதும், நடு விரல்களை மூக்கின் மீதும், சுண்டு விரல்களை கீழ் உதட்டின் மீதும் வைத்துக் கொண்டு செய்வது சன்முகி முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் மனதை உள்நோக்கிப் பார்க்கும் திறன் ஏற்படும் . இது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும் .கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரலின் நுனியைச் சேர்த்துச் செய்வது சின் முத்திரை ஆகும் . சின் முத்திரையில் மூச்சுப்பயிற்சி செய்தால் மனம் ஒருமுகப்படும் . நினைவாற்றல் பெருகும்.

அழகு கூட ஜெபிக்க வேண்டிய மந்திரம்:-

ஒவ்வொரு திங்கள் கிழமை இரவும் 8 முதல் 9 மணிக்குள் ஸ்ரீ சௌந்தர்யதேவியை வணங்கி கீழ்க்கண்ட மந்திரத்தை  கிழக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது 27 தடவை  அதிகமாக 108 தடவை வரை ஜெபித்து வர பெண்கள் மேலும் அழகாவதுடன்  ,முகத்தில் தேவையற்ற பரு,தழும்பு இவைகள் அற்ற மிருதுவான தோல் அமைவதுடன்,முக வசீகரம் உண்டாகும். இதைக் குறைந்தது 11 வாரங்கள் செய்யவும்.வளர்பிறை திங்கள்கிழமை அன்று ஆரம்பிக்கவும்.பௌர்ணமி அன்று செய்ய மந்திரம் விரைவில் சித்திக்கும்.

ஒம் சௌந்தர்யே சௌந்தர்ய ப்ரதே சித்திம் தேஹி நமஹ.

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்கள்

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்
ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடுவதின் பலன்....
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: (செல்வவளம்)
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)
5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)
6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)
7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்).
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)
18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)
19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)
20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)
21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை