Thursday 21 January 2016

கெங்கவராகநதீஸ்வரர்

பித்ரு தோஷம் நீக்கும் திருக்காஞ்சி
கெங்கவராக நதீஸ்வரர் கோவில்
வேதம் தழைக்கும் வேதபுரி எனும் புதுச்சேரி
மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள
வடகாசிக்கு மேலான வீசம் அதிகம்
பெற்ற
புண்ணிய பூமி திருக்காஞ்சி. இந்த
புண்ணிய பூமி அகத்தீஸ்வரம், திருகாசி
என்றும் அழைக்கப்பெற்ற
சிறப்புத்தலமாகும்.
இங்குள்ள கெங்கவராக நதீஸ்வரர்
கோவில் சரித்திர புகழ்மிக்க கோவிலாகும்.
இந்த கோவிலில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள்
பழமை
வாய்ந்த சிவலிங்கம் உள்ளது. இந்த
சிவலிங்கம் மாமுனிவர் அகத்தியர்
திருக்கரத்தால் பிரதிஷ்டை
செய்யப்பட்டது. இந்த கோவிலில்
சிவன் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி
அருள்பாலித்து வருகிறார்.
இந்த புண்ணியபூமி நவகிரக மூர்த்திகளான
ராகு பகவான் மற்றும் கேது பகவான்
பூஜித்த தலமாகும்.
இந்த கோவிலில் வீற்றிருந்து
அருள்பாலித்து வரும் கருணாமூர்த்தி
கெங்கவராக நதீஸ்வரரை மனதார
பூஜித்து வழிபட்டால், நமது முன்னோர்களின்
சாபம் நீக்கி, நாம்
நீண்ட ஆயுளும், 16 வகையான
செல்வங்களும் பெற்று
வாழலாம். இந்த கோவிலில் உள்ள 16
பட்டைகள் உடைய ஷோடசலிங்கத்தை
வழிபடுபவர்கள் நோயற்ற வாழ்வு
வாழலாம் என்பது பக்தர்களின்
நம்பிக்கையாக உள்ளது.
அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை
செய்யப்பட்ட இந்த சிவலிங்கம் போன்று
ரிஷிகள், மாமுனிகள் பிரதிஷ்டை செய்து
மேற்கு திசை
நோக்கி சிவன் எழுந்தருளிய திருத்தலங்களாக
சென்னை திருவான்மியூர், ஆந்திர
மாநிலம் காளஹஸ்தி, தஞ்சை மாவட்டம்
பாபநாசம்
ஆகியவை விளங்குகின்றன.
முன்பு ஒரு காலத்தில் மரணமடைந்தவரின்
அஸ்தியை கங்கை நதியில் கரைப்பதற்காக
காசிக்கு எடுத்து சென்றபோது,
திருக்காஞ்சி
எல்லையில் அந்த கலசத்தில் உள்ள அஸ்தியை
மலர்களாக மாறிய அதிசயம் நிகழ்ந்தது.
அப்போது காசியைவிட வீசம் அதிகம் உள்ள
தலம் என அசரீரியும் ஒலித்தது. அதனால்
நமது முன்னோர்களுக்கு காசியில்
செய்யும் பிதுர் கர்ம காரியங்களை
இங்கே செய்யலாம்.
எனவே இது பித்ரு தோஷம் நீக்கும்
திருத்தலமாக விளங்குகிறது.

No comments:

Post a Comment