Sunday 24 January 2016

ஆங்கில மாதங்கள் பிறந்த கதைகள்

ஜனவரி மாதம், “ஜானஸ் ”ன்ற ரோமக்
கடவுள் பெயரை கொண்டது”.

பிப்ரவரி மாதம் ”ரோமத்திருவிழாவான
“பிப்ரேரியஸ்”ன்ற வார்த்தைல இருந்து
வந்தது”.

மார்ச் மாதம் , ரோமக்கடவுளான
”மார்ஸ் ” பெயரில் அழைக்கப்படுது.

ஏப்ரல் மாதம், ” ஏப்ரலிஸ்” என்ற
லத்தீன் மொழில இருந்து வந்தது.
“திறப்பது” என்பது இதன் அர்த்தம்.
முன்னலாம் ஏப்ரல் மாசம்தான் வருட்
தொடக்கமா இருந்துச்சாம். 15
நூற்றாஆண்டுல வாழ்ந்த
போப்பாண்டவர் ஒருத்தர்தான்

”ஜனவரி”யை புத்தாண்டு
தொடக்கமா மாத்தினதா
சொல்றங்க. இதை ஐரோப்பியர்கள்
மட்டுமே ஏத்துக்கிட்டாங்க. அவங்களை பகடி
செய்யவே ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள்
தினமா கொண்டாட ஆரம்பிச்சு
இருக்காங்க.

மே மாதம், ”மேயஸ்”ன்ற பெண்
கடவுளின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூன் மாதம், ரோம கடவுளான
”ஜூனோ”வின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூலை மாதம், மன்னர் ”ஜூலியஸ் சீசர்”
பெயரால் அழைக்கப்படுது.

ஆகஸ்ட் மாதம், மன்னர் “அகஸ்டிஸ்
சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர்,
நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு
மாதங்களும் 7,8 ,9,10 என்ற லத்தீன்
எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட
வார்த்தைகள். அதுமட்டுமில்லாம,
அப்போலாம்  மாதங்களின் நாட்கள்
ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும்
31 நாள்களுமாய் மாறி மாறி வந்தன.
அதாவது, ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி
30 நாள்கள், மார்ச் 31 . . .
இதை, ”ஜூலியஸ் சீசர்” ஏத்துக்கல. பிப்ரவரி
மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன்
பெயரில் உள்ள மாதத்திற்கு,
அதாவது ஜூலை மாதத்துக்குச் சேர்த்தார்.
அதனால்  அதுவரை 30 நாளாக இருந்த
ஜூலை மாதம் 31 நாளாக மாறிச்சு.
இதனால, காலண்டர்
மொத்தமும் மாற
வேண்டியதாகிடுச்சு.
இப்படியே ஆகஸ்ட் 30 நாளுன்னு
போய்க்கிட்டிருந்துச்சு. ” அகஸ்டிஸ் சீசரி” ன்
ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31
நாளாக இருக்கனும்ன்னு ஆசைப்பட்டு,
பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள்
பிடுங்கி ஆகஸ்டில் சேர்த்தாங்க.
ஆக இத்தனைக் குழப்படிகளுக்கு
பின்னாடிதான் நாம இப்போ யூஸ்
பண்ணுற காலண்டர் உருவாகிச்சு.
இந்த காலண்டருக்கு
பேரு, ‘கிரீகோரியன்’ (Gregorian)
காலண்டர் ன்னு படிச்சவங்க
சொல்றாங்க!

No comments:

Post a Comment