Friday 15 July 2016

ராகு காலம் கேது காலம்

ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை
4.30 முதல் 6 மணி வரை
திங்கட்கிழமை ராகு காலம் காலை 7.30
முதல் 9 மணி வரை
செவ்வாய்க்கிழமை ராகுகாலம்
மதியம் 3 முதல் 4.30 மணி வரை
புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 முதல்
1.30 மணி வரை
வியாழக்கிழமை ராகு காலம் மதியம் 1.30
முதல் 3 மணி வரை
வெள்ளிக்கிழமை ராகு காலை காலை
10.30 முதல் 12 மணி வரை
சனிக்கிழமை ராகு காலம் காலை 9 முதல்
10.30 மணி வரை
இதே போல,கேது காலம் என்று ஒன்று உண்டு;
கேது காலமும் ஒரு முகூர்த்தகாலம் வரை
செயல்பட்டு வருகின்றது;ராகு காலம்
முழு விஷ காலமாக இருப்பதால்,கேது
காலம் முழு யோகம் தரும் மற்றும்
சுபக்காரியங்களுக்கு ஏற்ற காலமாக
இருக்கின்றது;
ஞாயிற்றுக்கிழமை கேது காலம் இரவு 10.30
முதல் 12 மணி வரை
திங்கட்கிழமை கேது காலம் மதியம் 1.30 முதல்
3 மணி வரை
செவ்வாய்க்கிழமை கேது காலம் இரவு
9 முதல் 10.30 மணி வரை
புதன்கிழமை கேது காலம் மாலை 6 முதல் 7.30
மணி வரை
வியாழக்கிழமை கேது காலம் இரவு 7.30
முதல் 9 மணி வரை
வெள்ளிக்கிழமை கேது காலம் மாலை
4.30 முதல் 6 மணி வரை
சனிக்கிழமை கேது காலம் மதியம் 3 முதல் 4.30
மணி வரை
கேது ஒரு சுபக்கிரகம் என்பது நம்மில்
பலருக்குத் தெரியாது;உங்கள்
வாழ்வில் முன்னேற்றம் அடைய கேது
காலத்தைப் பயன்படுத்துங்கள்;சகல
வெற்றிகளையும் அடையுங்கள்;
ராகு காலம் பிரபலமாக இருப்பதைப்
போல,கேதுகாலமும் பிரமடையும் என்பதை தமிழ்
மொழியின் தந்தையும்,சித்தர்களின்
தலைவரும்,சித்த மருத்துவத்தின் தலைமை
மருத்துவருமாகிய அகத்தியமகரிஷி
தெரிவித்திருக்கின்றார்;
ராகு காலத்தில் இருந்து சரியாக 6 மணி
நேரம் அதிகப்படுத்தினால் வருவது கேது
காலம் என்பதை உணருங்கள்;
கேது காலத்தைக் கணித்து எழுதியவர்:திரு.
எஸ்.எம்.நெப்போலியன்,ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம்;
நன்றி:பக்கம் 59,60;ஞானசிந்தா
மணி,தாரண ,ஆடி 2004

No comments:

Post a Comment