Saturday 7 May 2016

Indian hindu festivals reason பண்டிகைகளின் சூட்சமம்

இந்தியாவில் கொண்டாடப்படும்
அனைத்து முக்கிய பண்டிகைகளும் சூரியன்
சந்திரன் மையமாக வைத்து
கொண்டாடபடுபவைகள் ஆகும்.
உதாரணமாக, சூரியன் உச்சம்
பெற்று சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில்
இருக்கும் போது வருவது "சித்ரா பௌர்ணமி".
உச்ச வீடான ரிஷபத்தில் சந்திரன்
கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்க, சூரியன்
விருச்சிகம் ராசியில் இருக்க வருவது,
கார்த்திகை தீபமாகும்.
சூரியன் ஆட்சி பெற்று, சந்திரன்
கும்பத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் நிற்க
வருவது "ஆவணி அவிட்டம்".
குருவும் சந்திரனும் சிம்மத்தில் மகம்
நட்சத்திரத்தில் இருக்க, சூரியன் கும்பத்தில்
இருக்க, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
வரும் "மகாமகம் " ஆகும்.
ஆட்சி வீடு கடகத்தில் சந்திரன் பூசத்தில்
இருக்க, சூரியன் மகரத்தில் இருக்க வருவது
"தைபூசமாகும்."
கடகத்தில் சூரியனும் சந்திரனும் சேர வருவது
"ஆடி அமாவாசை".
மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில்
சந்திரனிருக்க, தனுசில் சூரியன் இருக்க
வருவது, ஆருத்ரா தரிசனம் ஆகும்.
இவ்வாறாக பண்டிகை வரும்
காலங்களில், சக்தி பெற்ற சந்திர
கிரணங்கள் நீர்நிலைகளில் சேர்ந்திருக்கும்
என்பதை முன்னோர்கள் அறிந்திருந்தனர். எனவே
கோயில்களை நீர்நிலைகள் (கடல், குளம், ஆறு, ஏரி,
அருவி) அருகில் அமைத்தனர். அந்த
நீர்நிலைகளில் பண்டிகை காலங்களில் குளித்து
சூரிய நமஸ்காரம் செய்ய, சூரிய
மற்றும் சந்திர கிரணங்களால், உடலும்
மனமும் புத்துணர்ச்சி பெற்று பலம்
பெறும். அதன் பிறகு கோயில் சென்று
கடவுளை வழிபட அங்கிருக்கும் தெய்வீக
அதிர்வலைகள் உடலெங்கும் பரவி
நோய்கள் நீங்கும். இதுதான் பண்டிகைகளின்
சூட்சமம்.
நன்றி,

No comments:

Post a Comment