Thursday 12 May 2016

ஜாதக கட்டம் 9 கிரகம்

ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட
வீடுதான் முதல் வீடு எனப் படும்.
அதாவது அதுதான் இலக்கினம்
எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில்
மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு
2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-
ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக்
கொண்டு வந்தால் தனுசு தான்
12-ம் வீடு ஆகும். அதாவது எந்த
ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை
முதல் வீடாகக் கொண்டு எண்ண
வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில
காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் பலன்
சொல்ல முடியும்.
முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம்,
உருவம், உயரம், குணாதிசயங்கள்
முதலியவற்றை அறியலாம். ஜாதகர்
ஒல்லியானவரா, இல்லை
பருமனானவரா, கோபம் உள்ளவரா,
இல்லை சாந்தமானவரா என்றும்
அறியலாம். அவர் உடல் நலத்தைப்
பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில்
உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை
தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது
பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில்
தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர்
சொந்த ஊரில் வாழ்வாரா
அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா
என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான்
சொல்ல வேண்டும். முதல் வீட்டில்
யார், யார் இருக்கிறார்கள், முதல்
வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார்
அதாவது இலக்கினாதிபதி எங்கு
இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த
கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும்
பலன் சொல்ல வேண்டும்.
இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக்
குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற
பொருளாதாரத்தையும் இது
குறிக்கிறது. அதைத்தவிர நகைகள்,
வெள்ளிப் பாத்திரங்கள், Securities
போன்ற சொத்துக்களையும் கூறலாம்.
ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக்
கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை,
Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை
வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம்
வீட்டை வாக்குஸ்தானம் என்றும்
அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப்
பேசுவாறா, அல்லது கடினமாகப்
பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா
அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும்
இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக்
கூறலாம். ஒருவர் கண்ணாடி
அணிபவரா அல்லது இல்லையா
என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம்.
பொதுவாக எந்த வீடாக
இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல
கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக்
குறிப்பன நல்லதையே செய்யும். தீய
கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக்
குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு
விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக்
கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக்
குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக்
கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம்
அல்லவா! சனி எதையும் குறைவாகவும்,
தாமதமாகவும் கொடுப்பார்.
குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு
குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும்
குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?
மூன்றாம் வீடு : இந்த வீட்டைக்
கொண்டு ஒருவரின் இளைய சகோதரம்,
ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள்,
குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம்.
கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல்
பரிவர்த்தனைகள், வீடு மாறுதல்
ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக்
கூறலாம். இந்த வீட்டில் கேது
இருப்பாரேயாகில் அவர் கலகங்களை
விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும்
நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக்
"கலியுக நாரதர்" எனவும் கூறலாம்.
உடல் பாகங்களில் காதுகள்,
தொண்டை, கைகள், நரம்பு மண்டலம்,
ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த
வீட்டை தைரிய ஸ்தானம் என்றும்
கூறுவார்கள். இந்த வீட்டில்
செவ்வாய் இருந்தால் அவர் மிக்க
தைரியசாலியாக இருப்பார்.
ஏனெனில் செவ்வாயானவர்
வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக்
கொடுப்பவர் செவ்வாய்
தான். அங்கே சனி இருந்தால் அவர்
அவசரப் படாமல் நிதானத்துடன்
செயல் படுவர். யோஜனை செய்து
தான் முடிவு எடுப்பார். அவசரப் பட
மாட்டார்.
நான்காம் வீடு : இது தாயாரைக்
குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு,
வீடு, வாசல் போன்ற ஸ்திர
சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும்
புதையல், கால்நடைகள், பசுக்கள்,
விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும்
தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும்
இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-
ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார்
என்க் கொள்ளுங்கள். அவர்
நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில்
செவ்வாய் பூமிகாரகன். பூமிகார
கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன்
சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு
கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு
அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு
தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு
தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய்
பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து ,
ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும்
வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக
இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும்
எனக் கூறலாம். என்ன புரிகிறதா?
5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று
அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய
ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம்.
அதாவது போன ஜென்மத்தில் ஒருவர்
நல்லது செய்தவரா இல்லையா என்று
இந்த வீட்டைக் கொண்டு முடிவு
செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள்
உண்டா அல்லது இல்லயா என்றும்
முடிவு செய்யலாம். ஒருவருக்குக்
கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா
அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த
வீட்டைக்கொண்டு முடிவு
செய்யலாம். அதே போன்று, சினிமா,
டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம்,
ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும்.
ஒருவர் காதலித்துத் திருமணம்
செய்வாரா இல்லையா என்பது
பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு
முடிவு செய்யலாம். ஆன்மீக
வாழ்க்கையையும் இந்த வீட்டைக்
கொண்டு தீர்மானம்
செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள்
ஆகியவற்றையும் இந்த வீட்டைக்
கொண்டு தீர்மானம்
செய்யலாம்.
6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும்
உணவு , வேலை செய்யும் இடம்,
ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும்
இந்த வீட்டைக் கொண்டு
சொல்லலாம். கவலைகள்,
துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக்
குறிப்பது இந்த வீடு தான்.
உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா
இலக்கினம் எனக் கொள்ளுங்கள்.
இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான
கும்பத்தில் இருக்கிறார் எனக்
கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு
அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார்.
அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு
இருக்கும். ஏனெனில் புதன் 1-ம்
வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக
இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக்
கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின்
அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார்
எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு
Employment என்று சொல்லுகின்ற
வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக்
குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச்
சென்று பணம் சம்பாதிப்பர் எனக்
கொள்ளலாம். இவ்வாறாக 6-
ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன்
சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை
வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.
7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு
இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும்
வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக்
குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக்
குறிக்கும் வீடும் இது தான். ஒருவர்
ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது
எனக் கொள்ளுங்கள். சனிதான்
எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக
இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக்
கூறலாம். உதாரணமாக கடக
இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம்
இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக்
கொள்வோம். சனியானவர் 7-ம்
வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல்
இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப்
படுத்துவதோடு சில சங்கடங்களையும்
திருமணத்திற்குப் பிறகு
கொடுப்பார். ஏனெனில் சனி
8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி!
சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு
அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக்
கொள்ளுங்கள். திருமண வாழ்வு
எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம்
வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண
வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள்
நிறைந்ததாக இருக்கும்.
8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு
இது தான். பிதுரார்ஜித
சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ
¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ்
ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான்.
ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது
துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக்
கொண்டு அறியலாம். துன்பம்,
துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள்,
ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும்
வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்"
எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி
இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக்
கொள்ளலாம். குரு இருந்தாலும்
தீர்க்காயுசு எனக் கொள்ளலாம்.
பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள
கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ
தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச்
செய்யாதென்பது பலரின்
அபிப்பிராயம்.
9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில்
ஒருவர் செய்த பூர்வ ஜென்ம
புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட
பயணம், தெய்வ தரிசனம்
செய்தல், உயர்கல்வி, முன்பின்
தெரியாதவர்கள், ஆகியவற்றைக்
குறிப்பது இந்த வீடு தான்.
உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு
சனி, செவ்வாய் போன்ற பாப
கிரகங்கள் இருக்கிறது எனக்
கொள்ளுவோம். நிச்சயமாக
அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக
இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர
சூரியனின் நிலையையும் நாம் கணக்கில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் சூரியன்
பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப
கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின்
காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு
விடும்.
10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம்,
கெளரவம், சபைகளில் முக்கியத்துவம்
ஆகியவற்றை 10-ம் வீட்டைக்
கொண்டுதான் சொல்ல
வேண்டும். தொழிலில் முன்னேற்றம்,
பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக்
கொண்டேதான் சொல்ல
வேண்டும். ஒருவருக்கு அரசியல்
நல்லபடியாக இருக்குமா அல்லது
இருக்காதா என்றும் இந்த வீட்டைக்
கொண்டுதான் சொல்ல
வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும்
கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச்
செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக்
கொண்டுதான் சொல்ல
வேண்டும். ஒருவரின் எஜமானர்,
அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான்
குறிக்கிறது.
11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று
கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய
லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக்
கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப்
பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான்
கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில்
இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற
வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில்
இருந்தால் நல்ல நண்பர்கள்
கிடைப்பார்கள். பொதுவாக
வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த
வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம்
வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால்
புத்திரத்தால் லாபம் எனக்
கொள்ளலாம். அதே 11-ம்
வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல
ஜீவனம் எனக் கொள்ளலாம்.
அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக்
கொள்ள வேண்டும்.
12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று
சொல்லுவார்கள். இதை விரய
ஸ்தானம் என்றும்
சொல்லுவார்கள். நமக்கு
வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள்
எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே
சொல்லவேண்டும். துன்பம்,
பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும்
இந்த வீட்டை வைத்தே சொல்ல
வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை
வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு
ஜெயில் வாசம், உள்ளதா அல்லது
இல்லையா என்பதையும் இந்த வீட்டை
வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக்
கொடுத்தலையும், முதலீடு
செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான்
கூற வேண்டும்.

No comments:

Post a Comment