Monday 5 September 2016

எண்ணெய்க் குளிப்பு!


எண்ணெய்யை சாதாரணமாக பலர்
நினைத்துள்ளனர் தண்ணீரைப் போல். அரபு
நாடுகள் இன்று தலை நிமிர்ந்து நிற்க
காரணம் எண்ணெய்.
ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும்
போய்விடும்.
திங்கள் குளித்தால் அதிகப்
பொருள் சேரும்.
செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்
புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.
வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.
வெள்ளி குளித்தால் செல்வம்
மிகும்.
சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.
* மேற்கண்டவை யாவும் பெண்களுக்கு.
ஆண்கள் சனி , புதன் எண்ணெய்
தேய்த்து குளிப்பது நல்லது
* ஆண்களுக்கு, திங்கட் கிழமை
எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு
வாதம் வரும்
செவ்வாய் கிழமை எண்ணெய்
தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.
விழாயக்கிழமை எண்ணெய் தேய்த்து
குளித்தால் கால் குடைச்சல் வரும்.
வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து
குளித்தால் முட வாதம் வரும்.
[ இதனை.'' அறப்பளீகர சதகம் '' கூறுகிறது.]
* இனி எண்ணெய் தேய்த்து குளிக்க
முயலும் - அல்லது நினைக்கும் இணைய
அன்பர்கள் தனக்கு தேவையான - தனக்கு
வேண்டிய நாட்களை தேர்தெடுத்துக்
கொள்ளவும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால்
ஏற்படும் பலன் இணைய அன்பர்கள் பலரும்
அறிந்திருப்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.
நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன்
தேர்தெடுத்தார்கள். மற்ற
செல்வங்களை விட
அறிவினையும், உடல் நலத்தினைத்தான்
உயர்வாக நினைத்தார்கள் -
மதித்தார்கள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது
குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.
வெதுவெதுப்பான
சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்.

No comments:

Post a Comment