Sunday 7 February 2016

நட்டாற்றீசுவரர் ஆலயம் ஈரோடு

ஈரோடு மாவட்டம் ஈரோடு-கரூர்
ரோடு சாவடிப்பாளையம்
நால்ரோட்டில் இருந்து சுமார் 2
கிலோ மீட்டர் தொலைவில்
உள்ளது காவிரி ஆற்றின்
நடுப்பகுதியில் உள்ள
பாறைமீது அமைந்து உள்ளது
நட்டாற்றீசுவரர் கோவில்.
இந்தக்கோவில் அகத்திய
முனிவரால் உருவாக்கப்பட்டது
என்று அதன் தல புராணம்
கூறுகிறது. அகத்தியர்
உருவாக்கியதால் இந்த
கோவிலுக்கு அகத்தீசுவரர் என்ற
பெயரும், காவிரியின் நீள
வாக்கிலும், அகல வாக்கிலும்
நடுவில் இருப்பதால்
நட்டாற்றீசுவரர் என்றும் பெயர்கள்
உள்ளன.
அகத்தியரின் தோஷம் தீர்த்த இந்த
கோவிலில் வழிபடும்
அனைவரின் தோஷங்களும் தீரும்
என்பது நம்பிக்கை. தவம்
முடிந்ததும் அகத்தியர்
கண்விழித்த நாள் சித்திரை
மாதம் முதல் தேதி என்பதால்
இந்தக்கோவிலில் சித்திரை
மாதம் முதல் தேதி
லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து
சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அப்போது பக்தர்களுக்கு
பிரசாதமாக கம்பங்கூழ்
வழங்கப்படும்.

No comments:

Post a Comment