Saturday 13 February 2016

பித்ரு தோசம்

🌼ஒரு ஜாதகத்தில்
பூர்வபுண்ணிய ஸ்தான பலம்
குறைந்தவருக்கு சுகமாக வாழ
துணைபுரிவது தெய்வாம்சம்
பொருந்திய முன்னோர்கள் தான்.
🌼 இவர்கள் வழிபடும் முறைக்கு
பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம்
என்று பெயர்.
🌼நம் குடும்பத்தில் வாழ்ந்து
மறைந்த முன்னோர்களை
பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி
அடையாததால் வருகிற தோஷம்
பித்ருதோஷம் எனப்படும்.
🌼ஜாதகத்தில் சூரியன் அல்லது
சந்திரன் ராகுவுடனோ அல்லது
கேதுவுடனோ எந்த இடத்தில்
சேர்ந்த்திருந்தாலும் பித்ரு
தோஷம் உண்டு.
🌼 லக்னம், பஞ்சமம், சப்தமம்,
பாக்கியம் இவ்விடங்களில் ராகு
கேதுக்கள் நின்றால் பித்ரு
தோஷம் ஏற்படுகின்றது.
🌼பிதுர் தோஷம் தன்னையும்,
தன் குடும்பத்தையும், குழந்தை
சம்பந்தமான பிரச்சினைகளையும்
கணவன்-மனைவி சம்பந்தமான
பிரச்சினைகளையும்
கொடுக்கும்.
🌼ராமேஸ்வரம் சென்று தில
ஹோமம் செய்வதும், கயா
சிரார்த்தம் செய்வதும், காசி,
அலகாபாத், பத்ரிநாத் சென்று
திவசம் செய்வதும்,
திருவெண்காடு சென்று திதி
கொடுப்பதும் இந்த
தோஷத்துக்குப் பரிகாரம்.
🌼குடும்பத்தில் யாரேனும்
விபத்துக்களில் இறந்திருந்தாலோ,
அல்லது தற்கொலை செய்து
கொண்டிருந்தாலோ மட்டுமே
தில ஹோமம் செய்யவேண்டும்.
அனைவரும் இயற்கை மரணம்
அடைந்திருந்தால், தில ஹோமம்
செய்யவேண்டியதில்லை.
🌼இந்த தோஷம் உள்ளவர்களுக்கு
திருமணம் நடக்காது.
🌼அல்லது மிகவும் தாமதமாக
நடக்கும். விவாகரத்து
ஏற்படலாம்.அல்லத
ு தம்பதியரிடையே
அன்னியோன்னியம் இருக்காது.
🌼 அல்லது குழந்தைப் பாக்கியம்
இருக்காது.
🌼ஒருசிலருக்கு கடுமையான
உடல் உபாதைகள், மனநோய்
காரணமாக தாம்பத்திய வாழ்க்கை
பாதிக்கும்.
🌼ஒரு சிலருக்கு பலமுறை
திருமணம் நடக்கவும்
வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம்
நடக்கவும், பெற்றொருக்குத்
தெரியாமல் ரகசியத் திருமணம்
நடக்கவும் வாய்ப்புண்டு.
🌼இந்த தோஷம் உள்ள சில
தம்பதிகள் ஒருவருக்கொருவர்
உண்மையானவர்களாக
நடந்துகொள்வதில்லை.
🌼இந்த தோஷம் வருவதற்கான
காரணங்கள்: கருச்சிதைவு
செய்துகொண்டால் இந்த தோஷம்
வரும்.
பெற்றோர்களின் இறுதி நாட்களில்
அவர்களை சரிவர கவனிக்காமல்
இருந்து அதனால் அவர்கள் மன
வேதனை அடைந்தால் பித்ரு
தோஷம் வரும்.
🌼 ஒருவரின் இளைய தாரத்துப்
பிள்ளைகள் மூத்த அன்னைக்கு
திதி கொடுக்காவிட்டாலும்
வரும்.
🌼தந்தைக்கு எத்தனை தாரங்கள்
இருந்தாலும் அவர்கள்
அனைவருக்கும் தவறாமல், திவசம்
செய்யவேண்டும்.
🌼ஆண்வாரிசு இல்லாத
சித்தப்பா, பெரியப்பா, அத்தை
சகோதரர் ஆகியோருக்கு திதி
கொடுக்காவிட்டாலும் வரும்.
🌼துர்மரணம் அடைந்தவர்களுக்க
ு திதி கொடுப்பதோடு
மட்டுமின்றி கயா சென்று கூப
சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு
தோஷம் வரும்.
🌼தோஷத்தில் மிகக் கொடிய
தோஷம் பித்ரு தோஷம்.இவர்களது
குடும்பம் ஜோதிட ரீதியில்
எவ்வளவு அதிர்ஷ்ட்டமான
கிரகநிலைகள் பெற்று
இருந்தாலும் அந்தப் பலனை
இவர்கள் அடைய முடியாமல்
பித்ருக்களும், பித்ரு
தேவதைகளும் தடை
செய்கிறார்கள்.
🌼பித்ருக்களின் சாபம் கடவுள்
நமக்குத் தரும் வரங்களையே
தடுத்து நிறுத்தும்
சக்தியுடையது.சிலர் ஏராளமான
பரிகாரங்கள் தானங்கள் செய்தும்
துன்பத்திலிருந்து
விடுபடுவதில்லை. தொடர்ந்து
கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
இதற்கான காரணங்கள் பல உள்ளன.
🌼அவற்றில் ஒன்று செய்ய
வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம்
போன்ற பித்ருக்களுக்கான
கடமைகளை செய்யாமல் இருத்தல்
அல்லது சிரத்தை குறைவுடன்
செய்தல் காரணமாகும்.
🌼ஜாதகத்தையும்,
நவகிரகத்தையும் நம்பி பலவித
வழிபாடுகளை - பரிகாரங்களை
செய்பவர்கள் தான் செய்யவேண்டிய
பித்ரு கடமையில் அவ்வளவாக
ஈடுபாடு காட்டுவதில்லை.
இதனால்தான் தொடர்ந்து
கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
🌼முறையாக பித்ரு பூஜை
செய்தால், ஜாகத்தில் உள்ள
தோஷங்கள் எல்லாம் நிச்சயம்
அகன்று விடும். பித்ரு பூஜை
வழிபாடு செய்யாமல், நீங்கள்
என்னதான் கோவில், கோவிலாக
அலைந்து பரிகார பூஜைகள்
செய்தாலும் நிச்சயமாக பலன்கள்
கிடைக்கப்போவதில்லை.
🌼நமது முன்னோர்களில் ஒருவர்
இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம்
அறிந்து, ஒவ்வொரு தமிழ்
வருடமும் அதே திதியன்று
(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு
ஆண்டும் மாறிவரும்)
குடும்பத்தார்கள் பிண்டம் செய்து
வைத்து படைப்பதே
சிரார்த்தமாகும்.இதனால்
குடும்பத்தில் சகல தோஷங்களும்
நிவர்த்தியாகின்றன.
🌼இந்த தர்ப்பணத்தை இதே போல
அமாவாசைத் திதிகளிலும்
செய்து வந்தால் மிகப்பெரும்
நன்மைகள் உண்டாகும்.
🌼ஒரு வேளை முன்னோர்களின்
இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி,
அமாவாசை அல்லது தை
அமாவாசையன்று இராமேஸ்வரம்
அல்லது சொந்த ஊரில் உள்ள
ஏதாவது ஒரு கோவிலில் அல்லது
வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது
நன்று.அதுவும் முடியாதவர்கள்
ஏதாவது ஒரு அமாவாசையன்று
(ஆண்டுக்கு ஒரு அமாவாசை என
நமது ஆயுள் முழுக்கவும்)
செய்து வருவது மிகவும்
நன்மையையும், அளப்பரிய
நற்புண்ணியங்களையும் தரும்.
🌼சாதாரணமான
அமாவாசையானது அனுஷம்,
விசாகம், சுவாதி நட்சத்திரங்களில்
வருமானால் அப்போது செய்கிற
சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய
திருப்தியை உண்டாக்குகிறது.
🌼திருவாதிரை, புனர்பூசம்,
பூசம் நட்சத்திரங்களில் வரும்
அமாவாசையன்று செய்யப்படும்
பிதர் தர்ப்பணம் பனிரெண்டு
ஆண்டுகள் பிதர்திருப்தி
ஏற்படுத்தும். அவிட்டம், சதயம்,
பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும்
அமாவாசையன்று செய்யப்படும்
பிதரு பூஜையானது,
பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும்
கிடைக்காத புண்ணிய
காலத்தைத் தரும்.
🌼மாசி மாதத்து
அமாவாசையானது சதய
நட்சத்திரத்தன்று வருமானால் அது
பித்ருக்களுக்கு மிகவும்
திருப்தியை அளிக்கக்கூடிய
காலமாகும். மாசி மாத
அமாவாசை அவிட்டம்
நட்சத்திரத்தில் வருமானால்
அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற
மனமகிழ்ச்சியைத்தரும்.
🌼மாதம் அமாவாசை அவிட்டம்
நட்சத்திரம் வரும் நாளில்
பித்ருக்களை நினைத்து அன்னம்
அல்லது தண்ணீர் தானம் செய்தால்
பதினாயிரம் ஆண்டுகள்
பிதுர்களைத் திருப்தி செய்த
பலன் கிடைக்கும்.
🌼மாசி மாதம் வரும் அமாவாசை
பூரட்டாதி நட்சத்திரத்தில்
அப்போது அந்த நன்னாளில்
சிரர்த்தம் செய்தால்,
🌼பித்ருக்கள் திருப்தி அடைந்து
ஆயிரம் யுகங்கள் சுகமாக
தூங்குவார்கள் என
விஷ்ணுபுராணம் கூறுகிறது.
🌼

No comments:

Post a Comment