Monday 1 February 2016

சந்தானராமன் கோவில்-வெண்ணி

மழலை வரம் தரும் சந்தான ராமன் கோவில்
முதலாம் நூற்றாண்டில், பதினாறு வயது
இளைஞனாக இருந்த போதே சோழ மாமன்னன்
கரிகால் பெருவளத்தான்,
பாண்டிய
சேரர்களையும் ஒன்பது வேளிர் குலத்
தலைவர்களையும் போரிட்டு வென்ற
பூமிதான் வெண்ணிப் பறந்தலை என்று
இலக்கியங்கள்
புகழும் இன்றைய கோவில் வெண்ணி.
அதற்கு அடையாளமாக அவ்வூரைச் சுற்றிலும்
உள்ள ஊர்களின் பெயர்களும்
அமைந்துள்ளன. போரில் வென்று
வாளுக்கும் நீராட்டி,
வீரர்களும் நீராடியதால் அந்த ஊர்
‘நீராடு மங்கலம்’ எனப்பட்டு இன்று
‘நீடாமங்கலம்’ என்று அழைக்கப்படுகிறது.
அதற்கேற்றாற் போல காவிரியின் கிளை
நதியான பெரிய வெண்ணாறு
இங்கே ஓடிவந்து வெண்ணாறு,
கோரையாறு, பாமணி ஆறு
என்ற மூன்று சிற்றாறுகளாகப்
பிரிகின்றன.
வெண்ணாறும், கோரையாறும்
மாலைபோல் சுற்றிச் செல்ல தீவு போல
திகழ்கிறது நீடாமங்கலம்.
ஆன்மிகச்
சொற்பொழிவாளர்
கிருஷ்ணமூர்த்தி, தவில் வித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முன்னாள்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்
சுவாமி
போன்ற சான்றோர்கள் பிறந்த மண் இது.
தஞ்சையிலிருந்து கிழக்கே 30 கி.மீ தூரத்திலும்,
திருவாரூரிலிருந்து மேற்காக 30 கி.மீ
தூரத்திலும், தெற்கு வடக்காக
குடந்தையிலிருந்து
25 கி.மீ, மன்னார்குடியிலிருந்து 12 கி.மீ
தூரத்திலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
இன்றைய திருவாரூர் மாவட்டத்தில்
தாலூகா
தரம் பெற்ற ஊர் இது.
மகப்பேறு :
சோழப் பேரரசு நலிவடைந்த பிறகு பிற்காலத்தில்
நாயக்கர் வம்ச ஆட்சியும், அதன் பின்னர்
மராட்டிய மன்னர்களின் ஆட்சியும்
நடைபெற்றுள்ளதாக வரலாறு
சொல்கிறது. சரபோஜியின் தாத்தா
பிரதாப சிம்மன் என்னும் மராட்டிய
மன்னன் தஞ்சையை ஆண்ட
போது (கி.பி 1739–கி.பி 1763) அவரது
மனைவியருள் ஒருவரான யமுனா பாய்
சிறு அரண்மனை கட்டி நீடாமங்கலத்தில்
வாழ்ந்து
வந்தார். அது இன்றும் இருக்கிறது.
அதனால் ‘யமுனாம்பாள்புரம்’ எனவும்
இவ்வூர் மறுபெயர் பெற்றிருந்தது.
யமுனாபாய்க்கு நெடுங்காலம்
மழலைப்பேறு இல்லை.
அதனால் வருத்தமுற்றிருந்த போது
திருமாலின் ஏழாவது அவதாரமான
ராமபிரான் கருணையினால் மகவு
வாய்த்தது. எனவே அரண்மனை இருக்கும்
இடத்தின் அருகிலேயே 1761–ல் ராமனுக்குக்
கோவில்
கட்டி, தமக்கு சந்தான பாக்கியத்தைத்
தந்ததற்காக ‘சந்தான ராமன்’ என்று
சிறப்புடன் பெயரிட்டு வழிபாடுகள்
நடத்தினார்.
அதுமுதல் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள்
திருக்குளத்தில் நீராடி ராமனைத் துதிக்கும்
பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.
இன்றும்
இவ்வூரில் வேண்டுதலின் பேரில்
பிறந்தவர்களில் பலர் சந்தான ராமன்,
சந்தான கோபாலன் என்றே பெயர்
வைத்துக் கொண்டுள்ளனர்.
நகரின் நடுவே கிழக்கு பார்த்த ஆலயம்.
எதிரே சாகேத புஷ்கரணி என்ற
நாமகரணத்துடன் திருக்குளம். ராம
அவதாரம் நிகழ்ந்த
அயோத்தியின் ஒரு பெயரான
சாகேதபுரியை பிரதிபலிப்பதாக
அமைந்துள்ளது. குளம் அருகே தேரடியும் உள்ளது.
ராமர் கோவில் :
ஆலயத்தின் தோரணவாயிலைக் கடந்து உள்ளே
போனால் முன் மண்டபமும், அதில் வசந்த
மண்டபமும், கச்சேரி மண்டபமும் உள்ளன.
அங்கே மூன்று நிலை ராஜகோபுரத்தைத்
தாண்டினால் கொடி மரமும், பலி
பீடமும் காட்சி தருகின்றன.
மகா மண்டபத்தில் மேற்கு நோக்கி மூலவரை
சேர்க்கும் கருடாழ்வார் சன்னதி, வடபுறம்
தெற்கு நோக்கிய ஆஞ்சநேயரும்,
விஸ்வக்சேனர் சன்னிதிகள் உள்ளன.
ஆஞ்சநேயர் இருப்பிடம் எல்லா திசைகளையும்
விட தெற்கு நோக்கி இருப்பது
சிறப்பானதாகவே
கருதப்படுகிறது. ஏனென்றால்
தெற்கே உள்ள இலங்கையில் தான்
ஆஞ்சநேயரின் ராம காரியமும்,
ராமனின் அசுர வதமும்
நடைபெற்றன.
கர்ப்பக்கிரகத்தில் திரயங்க விமானத்தின்
கீழ் சீதை, லட்சுமணர் சமேத சந்தான
ராமசுவாமி நின்ற திருக்கோலத்தில்
அருட்காட்சி
அளிக்கிறார்கள்.
மூலவருக்கு முன்னே சந்தான ராமர், சீதை,
லட்சுமணர், அனுமன், சயன சந்தான
கோபாலர் உற்சவர்களாக தோன்றுகின்றனர்.
திருச்சுற்று வரும்போது கோஷ்டத்தில் தெற்கு
நோக்கிய தும்பிக்கை ஆழ்வாராக கணபதியும்,
வடக்கு பார்த்த விஷ்ணு துர்க்கை
சன்னிதியும் விளங்குகின்றன. பிரகாரத்தில்,
மேற்கு வாகன மண்டபத்தில் கன்னி
மூலையில் ஒரு பெரிய சன்னிதியில்
நம்மாழ்வார்,
திருமங்கை ஆழ்வார், ராமானுமர், தேசிகன்
திருஉருவங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
கீர்த்தனை :
திருமாலின் அவதாரமாக ராமன்
மனிதனாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து,
வென்று, சாதித்து தெய்வமாகத்
திகழுகிறார். பல்வேறு
ஆலயங்களில் கோதண்ட ராமன், வல்வில்
ராமன், பட்டாபி ராமன், தசரத
ராமன், சீதா ராமன் என்று கோலோச்சும்
ராமபிரான்
நீடாமங்கலத்தில் சந்தான ராமனாக
அருள் பாலிக்கிறார்.
இத்திருக்கோவிலின் கிழக்கு ராஜ வீதியிலேயே
பிரதாப சிம்மனால் கட்டப்பட்ட
விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலும்,
அருகே
சுந்தரமூர்த்தி நாயனார்
வழிப்பட்டதாகச் சொல்லப்படும்
கோமுகேஸ்வரர் என்று சிவாலயமும் ஆன்மிக
ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன.
இத்திருக்கோவிலில் மாதம்தோறும்
நடைபெறும் புனர்பூச நட்சத்திர
வழிபாடும், ஆண்டு தோறும் நடைபெறும்
ராமநவமி தினத்தில் பத்து
நாட்கள் உற்சவமும் பிரசித்தி
பெற்றவை.
தினசரி நான்கு கால பூஜைகள்
நடைபெறும் இவ்வாலயம் தினமும்
காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி
வரையும், மாலை 5 மணி
முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருந்து சேவை
சாதிக்கிறது.

No comments:

Post a Comment