Saturday 13 February 2016

ஆலய வலம்வரல் முறை

நாம் அனைவரும் கோவில்களுக்கு
சென்று வணங்கிவருகிறோம். ஆலயத்தில்
நாம் பிரகாரங்களை சாஸ்திரமுறைப்படி
வலம்வருவதால் நம் வேண்டுதல் உடனே
நிறைவேறும். ஆலயங்களை வலம்வரும் முறையை
இங்கு காணலாம்.
வினாயகரை - ஒருமுறையும்,
சிவனையும்,அம்மனையும் -  மூன்று முறையும்,
சித்தர், மகான்களின் சமாதியை - நான்கு
முறையும்,
பெருமாள்- அம்மனை - நான்கு
முறையும்,
அரசமரம், தலவிருட்சங்களை - ஏழு முறையும்,
நவகிரகங்களை - ஒன்பது முறையும் வலம் வர
வேண்டும்.
எக்காரணம் கொண்டும்
தன்னை தானே வலம் வர கூடாது.
தெய்வங்களை வலம்வரும்
பொழுது அந்தந்த
தெய்வங்களுக்குரிய ஸ்தோத்திர
பாடல்களை சொல்லி வலம்
வருதல் நலம் பயக்கும்.கோவில்
கொடிமரத்தின் முன்பு மட்டுமே
விழுந்து நமஸ்காரம் செய்யவும்.

No comments:

Post a Comment