Saturday 13 February 2016

சுக்ரன் அமர்ந்த பாவங்களின் குணங்கள்

சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளான
ரிசபம்,துலாமில் இருந்தால்
பெரும் செல்வம்,புகழ் அரசாங்க
ஆதாயம் எல்லாவற்றையும்
அடைவார்.இசையில் நாட்டம்
காட்டுவார்.பெருமையோடு
மதிக்கப்படுவார்.நோயற்ற
வாழ்க்கை அமையும்,நல்ல இல்லற
துணை கிடைக்கும்..
சந்திரன் வீடான
கடகத்தில் இருந்தால்,அவர்களுக்கு
அகங்காரம் இருக்கும்.சிலருக்கு
இரு தாரங்கள் அமைய
கூடும்.திருமணமே நடக்காமல்
போக கூடும்.
புதன் வீடான
மிதுனத்தில் இருந்தால்
புத்திசாலியாகவும்
இருப்பார்.அரசு வேலை
கிடைத்து நிறைய செல்வம் சேர்க்க
வாய்ப்புண்டு.
சிம்மத்தில் இருந்தால் மனைவி
மூலம் நிறைய வருமானம்
வரும்.இவரை விட இவர் மனைவி
புகழ் உடன் இருப்பார்.
குருவின் வீடான தனுசுவில்
சுக்கிரன் இருந்தால் பெருமை
உடன் இருப்பார்
நல்ல இல்லற வாழ்கை
அனுபவிப்பார்..
சனி வீடான
மகரம்,கும்பத்தில்
சுக்கிரன் இருந்தால் அவர் தப்பான
ஆசை கொண்டவராக
இருப்பார்.இல்லற வாழ்வு இதமாக
இருக்காது...
சனி வீட்டில் சுக்கிரன் இருப்பதால்
நீச பெண்கள் பழக்கம் ஏற்படும்.
மீனத்தில் சுக்கிரன் இருந்தால்
கலையில் வல்லவராக இருப்பார்.
புகழும்,செல்வாக்கும் இருக்கும்.
நல்ல நிலையில் வாழ்வார்.
கன்னியில் சுக்கிரன் நீசம்
அடைவதால் அங்கு
அமைந்தால் ஏழ்மையாக
வாழ்வார்.தவறான வழியில் போய்
துன்ப்படுவார்.
செவ்வாய் வீடான
மேஷம் மற்றும் விருச்சிகத்தில்
சுக்கிரன் அமைந்தால் ,அவரது
பெயர் பெண்களால் கெடும்.
காம எண்ணம் அதிகம் இருக்கும்.

No comments:

Post a Comment