Friday 4 March 2016

அயனாம்ச கணக்கீடு

அயனாம்சம் கணிக்க சூத்திரம்
வாக்கியப்படி ,
வாக்கிய பஞ்சாங்கம்
சாலிவாகன சகாப்தத்தின் வருஷத்தில்
421ஐக் கழித்து 3ஆல் பெருக்கி வந்த
தொகையை 200ஆல் வகுத்து வந்த
பாகை கலை விகலை அயனாம்சம் ஆகும்
இதற்கு உதாரணமாக நடப்பு
ஆண்டான மன்மத வருஷத்துக்குண்ட
ான அயனாம்சம் கணிப்போம் (2015 -
2016)
சாலிவாகன சகாப்தம் 1937
இதில். 421ஐக் கழிக்க. (1937 – 421 = 1516 )
""""""""'"""'
1516 இதை (1516 * 3 = 4548 )
3ஆல் பெருக்க
4548 இதை 200ஆல் வகுக்க
ஈவு 22 மீதி 148 (148 * 60 = 8880 )
மீதியை 60ஆல் பெருக்க 8880இதை
200ஆல் வகுக்க ஈவு 44 மீதி 80
இந்த மீதியை 60ஆல் பெருக்க 4800
இதை 200ஆல் வகுக்க ஈவு 24
ஆக மன்மத வருஷத்துக்குண்டான
அயனாம்சம் 22 பாகை 44 கலை 24 விகலை
(சூரிய சித்தாந்தம் )

No comments:

Post a Comment