Saturday 12 March 2016

நோய் தீர்க்கும் திருக்குற்றால நாதர் கோவில் தைலம்

குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால
நாதருக்கு தினமும் தைல அபிஷேகம்
செய்யப்படுகிறது. அகத்தியர் கையால்
அழுத்தியதால், சிவனுக்கு தலைவலி
ஏற்பட்டதாகவும், அதனைப் போக்கவே இந்த
தைல அபிஷேகம் நடத்தப்படுவதாகவும்
கூறப்படுகிறது. தினமும் காலை 9.30 மணிக்கு
தைல அபிஷேகம் நடைபெறும்.
பசும் பால், இளநீர், சந்தனம் மற்றும் 42
வகையான மூலிகைகளை 90 நாட்கள் வேக
வைத்து, அந்தச் சாற்றில்
நல்லெண்ணெய் சேர்த்து தைலம்
தயாரிக்கப்படுகிறது. இந்த அபிஷேக தைலம்
பிரசாதமாக வழங்கப்படுகிறது.
வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு
வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண்
வலி உள்ளவர்கள் இதனை தடவி வந்தால்
சுகம்பெறலாம்.
மேலும் தினமும் அர்த்த ஜாம பூஜையில்
குற்றால நாதருக்கு குடுனி நைவேத்தியம்
செய்யப்படுகிறது. அதாவது சுக்கு,
மிளகு, கடுக்காய் மற்றும் சில மூலிகைகளைக்
கொண்டு கசாயம் தயாரித்து
நைவேத்தியம் செய்கிறார்கள்.
அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு வழங்கப்படும்
இந்த கஷாயத்தை வாங்கிக் குடித்தால்
நீரிழிவு, புற்று நோய், அல்சர், சளி, இருமல்,
வயிறு சம்பந்தமான நோய்கள்
குணமாகின்றன.

No comments:

Post a Comment