Saturday 30 January 2016

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம் என்ற சொல்லுக்கு
சந்திரன் எட்டில் இருப்பது என்று
பொருள். ஒரு கிரகம் எட்டில்
இருக்கும்போது தனது வலிமையை இழக்கின்றது.
பிறந்தபோது உள்ள சந்திரனிற்கு அதாவது
உங்கள் ராசிக்கு எட்டில் கோள்சார சந்திரன்
வரும் காலம் சந்திராஷ்டமம் ஆகும்.
இதனால் சந்திரனின் முக்கிய
காரகத்துவமான மனம் குழப்பநிலை
அடைகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
அமாவாசையன்று கட்டுப்படுத்த
இயலாதவர்கள் ஆவது நமக்குத்
தெரிந்ததுதான். இவர்களிற்கு
பெரும்பாலும் சந்திரன் முற்றிலும்
வலுவிழந்து வர்கோத்தமம், சுயசாரம் போன்ற
சூட்சுமபலம் கூட இல்லாதிருக்கும்.
சந்திராஷ்டம காலத்தில் புதிய முடிவுகள்
எடுத்தல், நீண்ட பிரயாணம் போன்றவற்றை
தவிர்ப்பது நலம். இக்காலத்தில்
கவனக்குறைவு, முட்டாள்தனமான
காரியங்கள் செய்தல் ஆகிய
நிகழ்வுகள் ஏற்படக்கூடும். இது ஏறத்தாழ
இரண்டேகால் நாட்கள் ஒருவரிற்கு
இருக்கும். சந்திரன் ஒருவரின் ராசிக்கு
எட்டில் இருக்கும் ஏறத்தாழ இரண்டேகால்
நாட்களும் கெடுதலான
நாட்கள்தான். நட்சத்திரப்படி உள்ள
நாளில் அதிக பாதிப்பு நேரும்.
சந்திராஷ்டம சந்திரனை வலிமை பெற்ற
குருபகவான் பார்த்தால்
கெடுதல்கள் நடக்காது.

No comments:

Post a Comment