Tuesday 19 January 2016

புதன் சேர்க்கை+கையெழுத்தும்

ஒருவரின் எழுதும் எழுத்துக்கள் வைத்தே அவரின்
ஜாதகத்தில் புதன் நிலை அறியப்படும்.
புதன் கேது சேர்க்கை - எழுதும் எழுத்துக்கள்
நிலையாக இருக்காது ஒன்றுடன் ஒன்று
கோர்த்து இருக்கும்.
புதன் ராகு சேர்க்கை - எழுதும் எழுத்துக்கள்
சற்று பெரியது சற்று சிறியது என்று
இருக்கும்.
சூரியன் புதன் சேர்க்கை - எழுதும் எழுத்துக்கள்
குண்டு குண்டாக தெளிவாக
இருக்கும்.
சுக்கிரன் புதன் சேர்க்கை - எழுதும் எழுத்துக்கள்
அடுத்தவர்களை ஈர்க்கும்.
குரு புதன் சேர்க்கை - எழுதும் எழுத்துக்கள்
தெளிவாக புரியும்படி இருக்கும்.
புதன் செவ்வாய் சேர்க்கை - எழுதும்
எழுத்துக்கள் அதிகம் அடித்தல் திருத்தல்
இருக்கும்.
புதன் சனி சேர்க்கை - எழுதும் எழுத்துக்கள்
சீராக இருக்காது.
புதன் சந்திரன் - எழுதும் எழுத்துக்கள்
அழகாக இருக்கும்.

No comments:

Post a Comment