Thursday 28 January 2016

நான் அறிந்த பரிகார முறைகள்

1,மிகக்கொடிய கடன்
தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரை
வழிபடுவதும் மற்ற கடன்
தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி
நரசிம்மரை வழிபடுவதும் மிக சிறந்த
பரிகாரமாகும்.
2,ஹோமங்களில் சிறப்பு வாய்ந்தது
மிருத்யுஞ்ஜய ஹோமம்.சிவாலயங்களில்
ஈசான்ய பகுதியில் வீற்றிருக்கும்
காலபைரவரை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30
முதல் 6.00. மணி ராகு காலத்தில்
வழிப்பட்டு மிருத்யுஞ்ஜ ஹோமம்
நடத்துவதால் பெறும் பயனைப்
பெற்று நோய்,மரண பயம் நீங்கி நீண்ட
ஆயுள் பெறலாம்..
3, குடும்பத்தில் தாங்க முடியாத
கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக
அருகிலுள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி
வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள்
குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய
பரிகாரமாகும்.
4,வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு
மாப்பொடியால் அபிசேகம்
செய்தால் செல்வ வளம்
பெருகும்.கடன் தொல்லைகள்
அகலும்.
5,வெள்ளெருக்கு விநாயகரை விட்டு
அறைகளில் உயரத்தில் வைக்க வீட்டில் ஏதும் பூத
கண சேஷ்டைகள் இருந்தால் விலகி விடும்
6,சக்கரத்தாழ்வார் சன்னதியில்
நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி
48 நாட்கள் வழிபட
தொழில்,வழக்கு சாதகமாகும்.21
செவ்வாய்க்கிழமை நெய்தீபம்
ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.
7,இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல
உள்ள நாகராஜ சிலைக்கு
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல்
12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம்
செய்து மஞ்சள் குங்குமம் வைத்து
செவ்வரளி பூக்கள் சாற்றி
நெய்தீபம் ஏற்றி தம்பதியினர்
பெயருக்கு அர்ச்சனை செய்தால்
தம்பதியினர் ஓற்றுமையுடன்
அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
8,பித்ரு தோசம் உள்ளவர்கள்
தொடர்ந்து
அமாவாசைக்காலங்களில்
நெய்தீபம் ஏற்றி பெருமாளை
சேவிக்க பித்ரு தோசம் விலகும்.
9,வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு
அகல் விளக்கில் கற்கண்டு போட்டு
நெய்தீபம் எற்றி வழிபட கணவன்
மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்
10,திங்கள் கிழமை காலை 6.00 மணிக்குமேல்
7.00 மணிக்குள் நந்திக்கு ஜோடி அகல்
விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர.
குடும்பத்தில் அமைதி பிறக்கும்.
வாழ்க வளமுடன் எளிய பரிகாரங்கள்.!!
11,எழரை சனி,அஷ்டமத்து சனி நடப்பவர்கள்
தீய பலன்களை குறைய திங்கட்கிழமை
சிவபெருமானுக்குப் பால் அபிசேகம்
செய்து வழிபட கெடுபலன்கள்
நீங்கும்.வேத சாஸ்திரத்தில்
சொல்லபட்டது.சனிபகவான்
சன்னதியில் தேங்காய் உடைத்து இரண்டு
முடியிலும் நல்லெண்ணெய்யில்
தீபம் போடுவது சக்தி வாய்ந்த பரிகாரம்.
12.சிவன்கோவிலில் அமைந்துள்ள
வன்னிமரம்,வில்வமரத்தினை 21 முறை வலம்
வந்து நமது குறைகளை கூற உடனடியாக பலன்
கிடைக்கும்.
13,ஹஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில்
துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி வாங்கி
சாற்றி 27 எலுமிச்சை கனி மாலை
சாற்றி,சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து
துர்க்கையை குங்குமம் வைத்து அர்ச்சனை
செய்து அந்த குங்குமத்தை
நெற்றியில் வைத்து வர திருமணத்தடை
அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.
14,விழப்புரம் அருகே சிங்கிரி கோவில்,பூவரசங்க
ுப்பம்,பரிக்கல்,ஓரே நேர்கோட்டில் அமைந்த
இம்மூன்று நரசிம்மர்களை ஓரே நாளில்
தரிசித்தால் தீராத பணகஷ்டமும் கடனும்
தீரும்,
15,புத்திர பாக்கியமில்லாத தம்பதியினர்
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு
சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால்
புத்திர பாக்கியம் கிட்டும்.
16,கலியுகத்தில் காரியசித்திக்கு துர்க்கையை
இராகு காலங்களில் வழிபட காரியசித்தி
உண்டாகும்.
17,மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள
இடைகாட்டூர் ஸ்தலத்தில் நவகிரகங்கள்
முதன் முதலில் இந்த பூமிக்கு வந்ததால்
இங்கு வந்து வழிப்பட்டால் நவகிரக தோஷம்
நீங்கும்.
18,ராமேஸ்வர ஆலயத்தில் இருப்பவை 22
தீர்த்தங்கள்.இவை எல்லாவற்றிலும்
தீர்த்தமாட இயலாதவர்கள்,கடல்நீரின்
பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தத்திலும்
,ஸ்ரீ ராமன் உருவாக்கிய கோடி
தீர்த்தத்திலும் நீராடினால் பாவங்கள்
அகலும்.
19,சிவன் கோவிலில் காலபைரவரையும்,விஷ்ணு
கோயிலில் சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால்
செய்வினை தோசம் விலகும்.
20,ஆயிரமாயிரம் தேவதைகள் உறைந்து
அருள்பாவிக்கும் கோயில் அபிசேக கோமுக
தீர்த்தத்தை விசாக நட்சத்திரம் வரும்
நாளில் தங்கள் வியாபார தலங்களில்
தெளித்து வர வியாபார விருத்தி
ஏற்படும்.
21,பிரதோச காலத்தில் ரிஷிபாரூட
மூர்த்தியான மகேசனை தேவியுடன் வழிபடுவோர்
ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த
பலனடிவார்கள்.குறிப்பாக ஈசான்ய.
மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும்
தீபாரதனையைக் கண்டால் எல்லா
நோய்களும் வறுமையும் நீங்கும்.
22,மாதா மாதம் உத்திர
நட்சத்திரத்தன்று சிவனுக்கு
தொடர்ந்து 11 மாதங்கள் பால்
அபிசேகம் செய்ய விரைவில் திருமணம்
நடைபெறும்.
23,ஓவ்வொரு மாதமும் வரும் மகம்
நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி
பெற்ற அகத்திய கீரையை எமதர்மனின்
வாகனமான எருமை மாடுகளுக்கு
கொடுது வழிபட மரண பயம்
நீங்கும்.
24,பஞ்சகவ்ய கலவையை
பால்,தயிர்,நெய்,கோமூத்திரம்.,ச
ாணம்,வாரம் ஓரு முறை தெளிக்க தீட்டு
தோசம்,நிக்கி லட்சுமி கடாட்சம் கிட்டும்
25,,நூறு வருஷம் வாழ நினைப்பவர்கள்
தினமும் சூரிய நமஸ்காரம்
எளிய பரிகாரங்கள்.!!
21,பிரதோச காலத்தில் ரிஷிபாரூட
மூர்த்தியான மகேசனை தேவியுடன் வழிபடுவோர்
ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த
பலனடிவார்கள்.குறிப்பாக ஈசான்ய.
மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும்
தீபாரதனையைக் கண்டால் எல்லா
நோய்களும் வறுமையும் நீங்கும்.
22,மாதா மாதம் உத்திர
நட்சத்திரத்தன்று சிவனுக்கு
தொடர்ந்து 11 மாதங்கள் பால்
அபிசேகம் செய்ய விரைவில் திருமணம்
நடைபெறும்.
23,ஓவ்வொரு மாதமும் வரும் மகம்
நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி
பெற்ற அகத்திய கீரையை எமதர்மனின்
வாகனமான எருமை மாடுகளுக்கு
கொடுது வழிபட மரண பயம்
நீங்கும்.
24,பஞ்சகவ்ய கலவையை
பால்,தயிர்,நெய்,கோமூத்திரம்.,ச
ாணம்,வாரம் ஓரு முறை தெளிக்க தீட்டு
தோசம்,நிக்கி லட்சுமி கடாட்சம் கிட்டும்
25,,நூறு வருஷம் வாழ நினைப்பவர்கள்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்து
அதற்குறிய மந்திரங்களை சொல்லி
வர நூறு வருஷம் வாழ வாய்ப்புண்டு.
26,,சிறிது பச்சரிசியும் சிறிது எள்ளையும் சிறிது
தினையும் சேர்த்து மாவாக்கி எறும்பு
புற்றுகளில் தூவ வாயில்லா ஜீவன்கள்
உண்டு மகிழம் போது அவற்றின் வயிறு
வாழ்ந்த புண்ணிய லோகத்தை அடையலாம்.,
27,,கொடுத்த கடன் திரும்பி வர
அருகில் உள்ள பைரவர் சன்னதியில்
தொடர்ந்து 8 செவ்வாய்
கிழமை நெய்தீபம் ஏற்றி சகஸ்ரநாம
அர்ச்சனை செய்து வழிபடவும்,
28,உயிரையும் உடலையும் பாதுகாக்கக் கூடிய
உடனடி நிவர்த்தி பரிகாரங்கள்,1,ம
காமிருத்யுஞ்ஜய ஹோமம் திருக்கடையூரில்
செய்வது,2,ஸ்ரீவாஞ்சியம்
சென்று வாஞ்சிநாதரை
வழிபடுவது,3,லட்சுமி நரசிம்மரை
வழிபடுவது,யோக நரசிம்மரை வழிபடுவது,ஆஞ்சி
நேயரை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
29,ஈசான்ய மூலையில் ஓரு செம்பில் நீர்
ஊற்றி அதன் மேல் ஓரு தேங்காயை வைத்து
கலசம் ஏற்றி வைக்க வீட்டின் வாஸ்து
குறைபாடு நீங்கும்.
30,இராகு காலத்தில் கடைசி அரைமணி
நேரமான அமிர்தகடிகை நேரமே சிறந்த பரிகார
நேரம்,துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்ற சகல
கஷ்டங்களும் மறையும்..!!
31,சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு
அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை
செய்து வழிபட சங்கடங்கள் தீரும்.
32,அருகிலுள்ள ஆஞ்சநேயரை 27 நாட்கள் 9
முறை வலம் வந்து முடியும் அன்று வடை மாலை
சாற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.
33,,செவ்வாய்க்கு அதிபதியான
முருகனை செவ்வாய் தோறும் நெய்
தீபம் ஏற்றி வழிபட 3 மாதத்தில் வேலை
கிடைக்கும்.
34,வெள்ளிகிழமை காலை 10.30 முதல்
12.00 மணி ராகு காலத்தில் துர்க்கைக்கு
தாமரைத்தண்டு திரி கொண்ட
நெய் தீபம் ஏற்றி வழிபட தெய்வ
குற்றம் குடும்ப சாபம் அகலும்..
35,இரட்டை பிள்ளையாருக்கு ரோகினி
நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு
செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.
36,வாகன விபத்து வாகனம் வைத்து
தொழில் செய்பவர்கள்
அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில்
முருகனுக்கு வேலில் எலுமிச்சை பழம்
சொருகி அர்ச்சனை வழிப்படலாம்.
27,ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் வலது திருவடி
கால் விரலில் அதர்வண வேத மந்திரம்
அனைத்தும் அடங்கியுள்ளதால் அவரை
உள்ளன்புடன் பூஜிப்பவர்கள் வீட்டிலிருந்து 5
மைல் சுற்றளவிற்கு செய்வினை
மந்திரங்கள் செயல்ழந்து நிற்கும்.
38,அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும்
பெருமாள் லட்சுமி நரசிம்மர்,லட்சுமி
ஹயக்ரீவர் ஆகியோரை தரிசித்து
கேசரி,பாயாசம்,நைவேத்யம் செய்ய
தொழில் வியாபாரம் நிரந்தர
வேலை லட்சுமி கடாட்சம் கிட்டும்.
39,விஷ்ணுபதி புண்ணிய காலமான
வைகாசி,ஆவணி, கார்த்திகை,மாசி மாத
பிறப்பு நாளன்று தேவர்களும்,அசுரர்களும்
மகிழ்ச்சியுடன் இருக்கும் காலமாவதால்
பெருமாள் கோவிலுக்கு சென்று
வழிப்பட்டால் நாம் செய்யும்
பிரார்த்தனை உடனே நிறைவேறும்..
40, தரித்திரருக்கு அளிக்கும் தானம்,பூஜை
நடக்காமலிருக்கும் கோயிலுக்கு பூஜை ஏற்பாடு
செய்தல்,அநாதைப் பிணங்களின்
தகனத்துக்கு உதவுதல் ஆகிய மூன்றும்
அசுவமேத யாகம் செய்வதற்கு
சமமாகும்.
41,ஆலயத்தில் உள்ள திரிசூலத்தில் குங்குமம்
இட்டு எலுமிச்சை பழத்தை
சொருகினால் திருஷ்டி
செய்வினை தோசங்கள் நீங்கும்..
42,,பெருமாள் கோயிலில் உள்ள
கருடாழ்வார் சன்னதியை சுற்றி வந்து
நெய் தீபம் ஏற்றி வழிபட சர்ப்ப
தோசம்,கால சர்ப்பதோசம்,நீங்கும்.
43,வியாழக்கிழமை ஓரு வேளை விரதமிருந்து
மாலையில் ஆலயத்தில் தட்சிணாமுர்த்திக்கு
நெய் தீபம் தொடர்ந்து ஏற்றி
வர 6 மாதத்திற்கு மேல் கருத்தரிப்பு ஏற்படும்.
44,ருத்ராட்சம்,சாளகிராமம்
துளசி,வில்வம்,உள்ள இடத்தில் இருந்து 10
கி.மீ க்கு துரத்திற்க்கு செய்வினை
அணுகாது.
45,ஞாயிற்றுகிழமை மாலை 4.30 மணி முதல்
6.00 மணிக்குள் துர்க்கையை வழிப்பட்டால்
நாம் பிரார்த்தனை உடனே நிறைவேறும்.
46,வாழைத்தண்டு நூல் திரியினால் வீட்டில்
தீபம் ஏற்றினால் குலதெய்வ
குற்றமும்,குலதெய்வ சாபமும் நீங்கும்.
47,புதன்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00
மணிக்குள் புதன் ஹோரையில் ஓரு தட்டில்
பாசிப்பயிறு வைத்து அதன் மேல் கற்பூரம்
வைத்து 17முறை வலம் வந்து வழிபட கல்வித்தடை
நீங்குவதுடன் நினைவாற்றல் பெருகி
கல்வியில் மிகுந்த நாட்டம் ஏற்படும்.
48,எத்தகைய கிரக தோசமானாலும் தினமும்
சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாத்தைப்
பாராயணம் செய்தால் தோசங்கள்
விலகும்.
49,ஸ்ரீ நரசிம்மரின் எந்த கோலத்தை
தரிசித்தாலும் கடன் தொல்லைகள்
பில்லி,சூன்யம்,திருஷ்டி,திருமணத்தடை,விலகி
நன்மை பெறலாம்.
50,தேங்காயை வாங்கி நன்றாக கழவி
மஞ்சள் பூசி வீட்டிலுள்ள பூஜை அறையில் வைத்து
தினமும் சூடம்,சாம்பிராணி.,பத்தி
காண்பித்து வழிபட்டு வந்தால்
திருஷ்டி,வாஸ்து தோசம் நிவர்த்தியாகும்..!!
வாழ்க வளமுடன்
51,ஸ்ரீ முஷ்ணம் பூவாரக முர்த்தி பூ
தேவியுடன் எழந்தருளியுள்ள சன்னதியில்
நெய் தீபம் ஏற்றி வழிபட கடுமையான
புத்திர தோசம் நீங்கி புத்ர பாக்கியம் கிட்டும்.
52,சுகப்பிரசவமாக திருச்சி
தாயுமானவர் மலைக்கோவிலுக்கு நேர்ந்து
சுகப்பிரசவமானவுடன் நேர்த்தி கடன்
செலுத்த வேண்டும்.
53,திங்கள்கிழமை வரும் அமாவாசை
அமாசோம வாரமாகும். அன்று
மரங்களுக்கு சிறந்ததாக கருதப்படும்.அரச
மரத்தை அபிசேகம் செய்து அலங்கரித்து
பூஜித்து 108 முறை வலம் வர புத்திர
பாக்கியம் கிட்டும்.
54,நினைத்த காரியம் நடக்க மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலில் துர்க்கை சன்னதி அருகில்
உள்ள சித்தர் சன்னதியில் 11 நாட்கள்
தொடர்ந்து சூடம் ஏற்றி வழிப்பட்டு
நினைத்த காரியம் நடந்தவுடன் சித்தருக்கு
மலர் கீரிடம் வைக்க வேண்டும்.
55,மாரகம் அல்லது அதற்கு இணையான
கண்டம் ஏற்படும் காலங்களில் திருச்சி அருகே
திருபைஞ்சீலி திருக்கோவிலுக்கு சென்று
அங்குள்ள எமதர்மனுக்கு மகம் நட்சத்திரம்
வரும் நாளில் அபிசேகம் செய்தால்
நீண்ட ஆயுள் ஏற்படும்..மரணப்படுக்கையில்
அவதிப்படுபவர்களுக்கு இக்கோயிலில் உள்ள
காணப்படும் மணிகர்ணிகை தீர்த்தத்தை
தந்தால் வேதனை இன்றி
56,திருக்கடவூர் பெருமைக்கு இணையானது
திருவீழிமிழலை என்ற புகழ் பெற்ற
திருத்தலம்.மார்க்கண்டேயர் மட்டுமா.?என்
திருவடியை பற்றிய எவருக்கும் எம பயம்
இல்லை.!! என்று காட்டியருளிய
தலம்.திருவீழிமிழலை திருத்தலம் ஆயுள் பாவ
தோஷத்தை போக்குவதில் முதன்மையான
திருத்தலம்.
57,நாச்சியார்கோவிலில் பூர்விக
சொத்து விவாகரம்,பங்காளி
பகை,தொழில்
இழப்பு,அவப்பெயர்,கனவு
பயம்,நாகதோச பாதிப்பு நீங்கவும்,நாச்ச
ியார்கோவில் ஸ்ரீ நிவாச பெருமாள்
ஸ்தலத்தில் உள்ள கல் கருடனுக்கு 7
வியாழக்கிழமை அர்ச்சனை செய்தால்
பிரார்த்தனை நிறைவேறும்.
58,மணப்பாறை குளித்தலை சாலையில் ஜயர்
மலையடிவாரத்தில் உள்ள கம்பத்தடியில்
கட்டுக் கட்டினால் பில்லி,சூனியம்,
ஏவல்,செய்வினை முதலியவை நீங்கி நலம்
கிட்டி வருகிறது என்பது நம்பிக்கை..
59,திருவண்ணாமலையில் சதுர்த்தி திதியன்று
திருவண்ணாமலையை கிரிவலம் வந்து
கிரிவலப் பாதையில் காமக்காட்டை
கடந்தவுடன் அங்குள்ள தேயு நந்தீஸ்வரரின்
கொம்புகள் வழியாக
அருணாசல ஈசனை தரிசனம் செய்வது
சதுர்முக தரிசனம் ஆகும்.இவ்வாறு
செய்துவந்தால் விரைவில் நல்ல வேலை
கிடைக்கும்.
60,இராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமி
தீர்த்தத்தில் நீராடிய பிறகுதான் குபேரன்
அளவிலாச் செல்வம் அடைந்ததாக
வரலாறு..அமாவாசை அன்று
நீராடினால் வறுமைகள் அகலும்
61,சிதம்பரம் தில்லை வடக்கு பார்த்து
அமர்ந்துள்ள தில்லை காளியை
நல்லெண்ணெய் குங்குமம்
வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி
அபிஷேகம் செய்தால் கடன்,பிணி,ரோகம்
,நீங்கும்,
61,,திருத்தேங்கூர் வெள்ளிமலை நாதரை
வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள அனைத்து
தோசங்களும் நீங்கும்.செல்வம் சேரும்.
62,செய்த பாவத்திற்க்கும்
,செய்யாத பாவத்திற்கும்
பரிகாரமாக காஞ்சீபுரம்.சித்ரகுப்தர்
கோயிலுக்கு கொள்ளு உளுந்து அவல்
படைத்து அவற்றை பசுக்களுக்கு அளித்தால்
பாவங்கள் நீங்கும்.
63,இராமேஸ்வரம் திருத்தலத்தில் உள்ள 22
தீர்த்தங்களில் குளித்து ராமநாத
சுவாமியை வழிபாடு செய்தால்
சர்ப்பதோசம்.,செவ்வாய் தோசம்,புத்திரதோ
சம்,களத்திரதோசம்,யாவும் விலகி வீடும்
64,திருமோகூர் சக்கரத்தாழ்வாருக்கு 21
செவ்வாய் கிழமை நெய்தீபம் ஏற்றி
வழிபடக் கொடுத்த கடன் திருப்பி
வரும்.
65,ஞாயிற்றுகிழமை மாலை ராகு
காலத்தில் அருகில் உள்ள ஆலயத்தில்
காலபைரவருக்கு செவ்வரளி மாலை
நெய் தீபம் 27 வாரம் ஏற்றிவர
திருமணம் நடக்கும்.48 வாரம்
நெய்தீபம் ஏற்ற எதிரி,பில்லி,சூ
ன்யம்,சனி நாகதோசம்,மரணபயம் நீங்கும்.
எளிய பரிகார ஸ்தலங்கள்.!!
66,சனிதிசை ஏழரைசனி,அஷ்டமத்து சனி
நடப்பவர்கள் தொடர்ந்து 7 வாரம்
அருகில் உள்ள ஆஞ்சிநேயர் கோயிலில்
வென்னெய் சாற்ற சனியால்
ஏற்படும் தோஷங்கள் விலகும்.
67,ராமபிரானால் பிரதிஷ்டை
செய்யப்பட்ட ராமபிரான் தனக்கு
ஏற்பட்ட சனிதோசம் நீங்க கடல் நடுவே அமைத்த
நவகிரகங்கள் உள்ள ஸ்தலம்
தேவிப்பட்டினம்.இந்த நவபாஷாண
சிலைகளுக்கு 9 நவதானியங்கள்
கொண்டு வழிபாடு
செய்தால் நவகிரக தோஷம் நீங்கும்.
68,கடன் தொல்லையில் இருந்து
விடுபட எளிய வழி எந்த தெய்வத்திற்க்கு
அபிசேகம் செய்தாலும் அரிசி
மாப்பொடியால் அபிஷேகம்
செய்தால் விரைவில் கடன்கள்
அடைப்படும்.குறிப்பாக
தெட்சிணாமுர்த்திக்கு
மாப்பொடியால் அபிஷேகம்
செய்தால் செல்வ வளம்
பெருகும்.கடன் தொல்லை
நீங்கும்.
69,கும்பகோணம் சுவாமிமலை அருகிலுள்ள
திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர்
கோயிலில் சூரியன் சனி நேருக்கு நேர் ஓரே
நேர்கோட்டில் உள்ளது. இங்கு வந்து அர்ச்சனை
செய்தால் தந்தை மகன் கருத்து
வேறுபாடு நீங்கும்.
70,,எந்த திசை நடந்தாலும் ஏற்ற பலன்களை
அடைய திருவாரூர்..குன்றக்குடி ஓரே திசையில்
உள்ள நவக்கிரக வழிபாடு செய்வது
நல்லது.
71,நேரம் காலம் சரியில்லாதவர்கள்
தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கண்டியூர்
பிரம்ம சிரகண்டிஸ்வரர் ஆலயத்தில்
வழிபாடு செய்வது உத்தமம்.
72,மாரடைப்பு இதய சம்பந்தமாக நோய்கள்
நீங்க சென்னை பூந்தமல்லியிருந்து 54 ஏ
பஸ். இராமர் கோயில் ஸ்டாப் திருநன்றவூர்
இருதயபாலீஸ்வரர்.
73,பதவி உயர்வு காஞ்சிபுரம் ஸ்ரீ வாமன
உலகளந்த பெருமாள் விழப்புரம்
அருகிலுள்ள பரிக்கல் நரசிம்மர் ஆலயம்.
74,விரும்பிய இடத்திற்க்கு இடம் மாறுதல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை
அருகிலுள்ள அணைப்பட்டி ஆஞ்சிநேயர்
ஆலயம்..
75.கடன் நிவர்த்தி ஸ்தலம் கும்பகோணம்
அருகிலுள்ள திருச்சேறை ருண விமோசன
லிங்கேஸ்வரர் 11 திங்கள் கிழமை அர்ச்சனை.!!
எளிய பரிகார ஸ்தலங்கள்.!!
76. திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில்
உள்ள ருண விமோசன.லிங்கேஸ்வரர்.
72,மதுரை ஓத்தக்கடை நரசிங்கம் யோக நரசிம்மர்.
77.திண்டுக்கல் தாடி கொம்பு
சௌந்திரராஜ பெருமாள் கோயில் ஸ்வரன
ஆகர்ஷன பைரவர் தேய்பிறை அஷ்டமி
வழிபாடு.
78. வேலூர் மாவட்டம் சோளிங்கபுரம் யோக
நரசிம்மர் வழிபாடு.
79. திருவாரூர் கும்பகோணம் அருகிலுள்ள
திருச்சேறை ருண விமோச லிங்கேஸ்வரர் 11 திங்கள்
கிழமை அர்ச்சனை.
திராத கடன் தொல்லைகள்,நீக்கும

1 comment: