Wednesday 27 January 2016

ஐந்தாம் அதிபதி

ஐந்தாம் அதிபதியின் அற்புதங்கள்
ஒவ்வொருவருக்கும் அமையக்கூடிய
வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும்
என்பதை விட மற்றவர்கள் அதாவது தங்களை
சுற்றியுள்ளவர்களை விட அதிகமான
வசதிகளை பெற்று வாழவே
விரும்புகிறார்கள். அப்படி வாழ
வேண்டுமாயின் ஜாதகத்தில் பூர்வ
புண்ணிய ஸ்தானமான ஐந்தாம்
இடத்தின் பலத்தை பொறுத்தே
வாழ்க்கை அமைகிறது. அதை நாம்
செய்யும் செயல்களே
தீர்மானிக்கிறது. முற்பிறவியில் செய்த
நன்மை தீமைகளை பொறுத்துதான்
இப்பிறவியும் அமைகிறது. மேலும் இப்பிறவியில்
செய்யும் நன்மை தீமைகளைக்
கொண்டும் இப்பிறவியில்
மாற்றங்கள் நிகழ்கிறது. அதை இந்த
கட்டுரையில் காண்போம்.
உதாரணமாக நான்கம் இடம்
சரியாக அமையப் பெறாதவர்கள்
அவர்களது தாயை மிகச் சிறப்பாக
பார்த்துக் கொள்வதுடன் அவரின்
அபிலாஷைகளை நிறைவேற்றி வைத்து தாயிடம்
ஆசீர்வாதம் வாங்கி எந்த ஒரு
செயலையையும் ஆரம்பித்தால்
அவர்களுக்கு நான்காம் இடத்தினால்
ஏற்படும் தடைகள் அகலும். மேலும் சில
ஜாதகங்களில் அனைத்து யோகங்கள் இருந்தும்
ஜாதகருக்கு அந்த யோகங்கள் கிடைக்கப்
பெறவில்லை எனில் அதற்கு காரணம்
ஐந்தாம் இடம் வலுக் குறைந்து இருக்கும்.
அந்த இடத்தை பலப்படுத்தி யோகங்களை
பெற வேண்டுமாயின் குல
தெய்வங்களை முறைப்படி வணங்க
வேண்டும், தான தர்மங்கள் தங்களால்
இயன்ற அளவு செய்ய வேண்டும். அது
மட்டும் இல்லாமல் வாழ்க்கையில்
கஷ்டப்படுவோருக்கு நிறைய உதவிகள்
செய்து புண்ணியங்கள் பெற
வேண்டும். பாவ புண்ணியங்களே ஐந்தாம்
இடத்தின் பலத்தை தீர்மானிக்கின்றன.
இன்று வாழ்க்கை செல்லும் வேகத்தில்
எது பாவம் எது புண்ணியம் என்று
தெரியாமலே செய்து
கொண்டு இருக்கிறோம். அதை
தெளிவாக தெரிந்து
கொண்டவர்கள் மட்டுமே
வாழ்க்கையை சிறப்பாக அமைத்து
புண்ணியத்தையும் தேடிக்
கொள்கின்றனர்.
வாழ்க்கையில் அடுத்தவரை துன்புறுத்துவதும்
அடுத்தவர் பொருளை அபகரிப்பது
பாவம் என்ற வைத்துக்
கொள்வோமானால், தான
தர்மங்கள் செய்வதும் தேவைப் பட்ட
நேரத்தில் உதவிகள் செய்வதும்
புண்ணியம் என்றால் முற்காலத்தில்
வாழ்ந்த ரிஷிகளும். முனிவர்களும்
பாவங்கள் செய்யவில்லைதான்
ஆனால் அதிகமான புண்ணியங்களும்
செய்யவில்லை. அவர்களிடம் அனைத்து
சக்திகள் இருந்த போதும் ஏன் உலக மக்களின்
துயரை துடைத்து அனைவரையும் ஒற்றுமையாக
வாழ வைக்க முடியவில்லை. ஏன்என்றால்
முக்காலத்தில் ஒன்றான எதிர்காலமும்
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
அவர்களால் கூட எதிர்காலத்தை மாற்ற
முடியாது. இருந்த போதிலும் அவர்கள்
மக்களுக்கு பாவங்களில் இருந்து விடுபடவும்
நற் செயல்களை செய்யவுமே
அறிவுறுத்தினார்கள். அப்படி செய்யும்
போது ஐந்தாம் இடம் வலுப்பெற்று
துன்பங்களில் இருந்து விடுபடலாம்
என்பதால்தான்.
ஆனால் நாம் ஒரு நாளை
எடுத்துக்கொண்டால் எத்தனை
இடங்களில் மனசாட்சியை மறந்துவிட்டு
அடுத்தவர்களிடமிருந்து நிறைய விசயங்களை
பலவந்தமாக பறிக்கிறோம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இராம
அவதாரம் ரகுவம்ச வழித்தோன்றல் ஸ்ரீ
ராமபிரான் கூட தர்மத்தின் வழியில் உலக
நியதியின்படி போர் புரிந்து இலங்கையை அழித்து
இராவணனை கொன்று சீதையை
மீட்டார் இது இதிகாசமாகியது.
இறைவனின் அவதாரத்தில் நடத்திய
லீலைகளில் நீதி நெறி தவறுமா? இல்லை
ஒரு போதும் வாய்ப்பில்லை. இருந்தபோதும்
இறைவனின் அவதாரமான ஸ்ரீ ராமர்
இராமேஸ்வரத்தில் சிவ லிங்கத்தை பூஜை
செய்து பாவங்களை கழித்தார்.
இறைவனே அவதாரம் எடுத்தாலும்
பாவங்களை தீர்க்க வேண்டியுள்ளது
மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம்.
அதனால் நாம் செய்யும்
செயல்களில் பாவங்களை நமக்கு
பிரித்தெறிய தெரிவதில்லை.
ஆனால் அவதாரப் புருஷரான ஸ்ரீ
ராமர் அனைத்தையும் உணர்ந்ததால்தான்
இப்பிறவியில் செய்த பாவங்களை
இப்பிறவியிலேயே தீர்த்தார்.
வாழ்க்கையின் இறுதியில் காசி மற்றும்
இராமேஸ்வரம் சென்று புனித
நீராடினால் பாவங்கள் அனைத்தில்
இருந்தும் விடுபட்டு முக்தி பெற
முடியுமா? ஐந்தாம் பாவத்தின் பலனையே
மாற்றக் கூடிய சக்தி படைத்த புண்ணிய
பூமிகளா அவைகள்? அல்லது குறைந்த அளவே
பாவங்களை மட்டுமே தீர்க்குமா? ஆனால்
நிச்சயம் மாற்றம் கிடைக்கும் என்பது மறுக்க
முடியாத உண்மை.
ஜாதகத்தை பார்க்கும் சில ஜோதிடர்கள்
மரணத்தை பற்றி கூற மறுக்கிறார்கள். அது
இறைவன் மட்டுமே அறிந்த உண்மை என்றும்
குறிப்பிடுகிறார்கள். விதவை
பெண்ணுக்கு வாழ்வு
கொடுத்தால் மரணத்தை கூட
தள்ளிப்போடலாம் என்பது பெரியோர்கள்
கண்டறிந்த உண்மை. வாழ்விழந்த
பெண்ணுக்கு வாழ்க்கை
கொடுக்கும் போது பூர்வ புண்ணியம்
அதிகமாகி பூர்வ புண்ணிய ஸ்தானம்
வலுப்பெறுகிறது அதனால் ஆயுள்
கூடுகிறது.மேலும் அவர்களுக்கு பிறக்கப் போகும்
குழந்தைகளின் பூர்வ புண்ணிய ஸ்தானமும்
வலுப் பெற்று அவர்கள் வாழ்க்கையை
வளமாக்கும்.
இராவணன் பிறந்தது கூட அவன் தந்தை
செய்த பாவங்களுக்கு பிண்டம்
கொடுத்து பாவங்களை
கழித்ததால்தான்
ஆனால் இராவணனும் முக்தி அடைய
வரம் கேட்காமல் மூவுலகையும் ஆள்வதையே
லட்சியமாக கொண்டு மென்
மேலும் பாவங்களை செய்ததால்தான்
அந்த பாவங்களே அவனை அழித்தது.
புண்ணியங்களை பார்க்கும் போது கால
புருஷ தத்துவத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு
அதிபதியாக இருக்கும் சூரிய
பகவானுக்கும் குந்தி தேவிக்கும் மகனாகப்
பிறந்த கர்ணன் புண்ணிய நதியாகிய
கங்கையிலே பூர்வ புண்ணியகாரன் குருவின்
உலோகமான தங்கப் பேழையிலே வைத்து
அனுப்பப் பட்டான். எத்தனை பூர்வ
புண்ணியங்கள் இருந்திருந்தால்
கர்ணனுக்கு இவ்வளவு பாக்கியங்கள்
கிடைத்திருக்கும்.அது மட்டும் இல்லாமல்
துரியோதனனின் சாபத்தை போக்கியதும்
கர்ணனின் பிஞ்சு விரல்களே. சபையில்
அவமானப் படுத்தப் பட்டபோது
துரியோதனால் அங்கத நாட்டுக்கு
மன்னனாக முடி சூட்டப் பட்டான்.
நண்பர்களின் இடமான ஏழாம்
இடத்திற்கு பதினொன்றாம்
இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம்
மானத்தை காத்ததோடு மட்டுமல்லாமல்
அங்கத நாட்டையே அளித்து அதற்கு
மன்னனாக்கி அழகு பார்த்தது. இதுவே
பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் மகிமை. அதே
கர்ணனை நிரயுதபாணியாக்கி
தாக்கியபோதும் அவன் உயிரை காத்து
நின்றதும் அவன் செய்த தான
தர்மங்களால் பெற்ற புண்ணியமே.
இப்பூவுலகில் சிறப்பாக வாழ
வேண்டுமெனில் ஐந்தாம்
பாவமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம்
வலுப்பெற்று இருப்பது அவசியம்.
ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி வலுப்
பெற்றும்,ஐந்தாம் இடத்தில் சுப
கிரகங்கள் அமைந்தும், ஐந்தாம் இடத்தை சுப
கிரகங்கள் பார்த்தும், ஐந்தாம் இடம் சுப
கர்த்தாரி யோகத்தில் அமைந்தும், ஷட்
பலத்தில் ஐந்தாம் அதிபதி அதிக பலம்
பெற்றும், அஷ்டவர்க்கத்தில் ஐந்தாம்
இடத்தில் அதிக பரல்கள் அமைந்தாலும்
ஜாதகருக்கு வாழ்க்கையில் வெற்றி
மேல் வெற்றிகள் குவியும்.

No comments:

Post a Comment