Saturday 19 December 2015

கிரகங்களும் அவற்றின் காரகங்களும்

கிரககாரகங்கள்
சூரியன் :
கிரகம் என்ற குடும்பத்திற்கு
சூரியன் தான்
தந்தை, எனவே
ஜாதகத்தில் ஜாதகரின்
தந்தையை பற்றியும்
தந்தை
வர்க்கத்தினரையும் சூரியன்
குறிக்கும்.
நாட்டு தலைவர்கள் , அரசியல்
தலைவர்கள் ,நம்மை
ஆளும் அனைத்து நபர்களையும்
,பணிபுரியும் இடத்தில் உள்ள
மேலாளர்கள்,
சூப்பர்வைசர், போர்மேன் போன்ற
மேலதிகாரிகளையும் குறிக்கும்
காரகன்
சூரியன் ஆகும் .
மேலும் தலைமை
தாங்குதல், மனோதிடம்,
ஆளுமைதிறன்,
நிர்வாகத்திறன்,ஒருவருடைய
தனித்தன்மை,
அந்தஸ்தான உத்தியோகம்,
கம்பீரமான
தோற்றம், சுய கௌரவம், தான்தான்
எல்லாம் என்ற
கௌரவம், அரசியல்,அரசாங்க
ம்,அதிகாரம்,
மற்றும் நமது உடலில் உள்ள
முக்கிய
உறுப்புகளுக்கு
சூரியன் காரகம் ஆகும், அதாவது
தலை,மூளை,இருதயம்,
முக்கிய எலும்புகள்,உடலின்
உஷ்ட்னம்,
காய்ச்சல்,தலைவலி,
கண்நோய், மஞ்சகாமாலை நோய்,
மூளைக்காயச்சல்
அதாவது ஒருவரின் விதியை
நிர்ணிப்பது சூரியனே ஆகும்
மேலும் பகற்பொழுது
,மாலை,பாறை,காடு
,சிங்கம்,கோதுமை,
தாமிரம்,செந்தாம
ரை,சுவைகளின்காரம்,சிவப்பு
நிறம்,
மாணிக்கம்,சிவபெ
ருமான்,கிழக்கு
திசை போன்றவைகள்
சூரியனின் காரகங்கள் ஆகும்
,நவகிரகங்களின் நாயகன் சூரியன்
என்றுசொல்லலாம் .
சந்திரன் :
எல்லாகிரகங்களும்
சூரியனைமையமாக
கொண்டு சுற்றிவருகிறது
,ஆனால் சந்திரன்
மட்டும் பூமியை
மையமாகக்கொண்டு
சுற்றிவருகிறது
,ஒரு ஜாதகத்தில்
[சந்திரன் எந்தராசியில் உள்ளதோ
அந்தராசியைதான் ஜென்மராசி
என்கிறோம்]
சந்திரன் எந்த
நட்சத்திரத்தில் உள்ளதோ
அதுதான் ஜென்மனட்சதிரம் ஆகும்
, சந்திரனை
வைத்துதான்
தசா,புக்திகள் கணக்கீடு
செய்யப்படுகிறது
மூளையின் காரகன் சூரியன்
என்றாலும்
மூளையை சிந்திக்கும்
ஆற்றலுக்கு
சந்திரனே காரகன் ஆகும்
தாய்க்கு காரகன்
சந்திரன்,தாயவர்க்கத்தினரையும்
,வயதில்
மூத்தபென்களையும் ,தாய் மாமன்
போன்றவர்களையும்
அத்தை,அண்ணி,மூத்தசகோதரி
ஆகியோரையும் குறிக்கும் .
சந்திரன் வேகமாக நகரக்கூடிய
கிரகம்
என்பதால் இடமாற்றங்கள்
,வெளிநாட்டு
பயணம்,அதிக அலைச்சல்கள்,
அடிக்கடி வாழ்க்கையில் ஏற்ப்படும்
மாற்றங்களை
ஆகியவற்றிற்கு சந்திரன் காரகர்
ஆவார்
சந்திரன் நீர்கிரகம் என்பதால்
வெண்மையான நிறத்திற்கும் ,
உணவு
பொருளான பால்,
தயிர்,குளிர்பானம்,
சந்திரன் உடல்காருகன் என்பதால்
உடலுக்கு தேவையான
உணவுக்கும் காரகன் ஆவார்,
மேலும்
குளம்,குட்டை ,ஏறி,
ஆறு,கடல்,போன்றவற்றிர்க்கும்
சந்திரனே காரகன்
மேலும் அமைதியான
தோற்றம்,மனக்குழப்பம்
மனபேதளிப்பு, பைத்தியம்
பிடிப்பது, சளி,ரத்தஅழுத்தம்,
நீரழிவு நோய்க்கும் சந்திரன்
ஒருகாரணம்,
முத்து,அலுமினியம்,ஈயம்,நீர்வாழ
்வன,வெண்பட்டு,
சுறுசுறுப்பு, பார்வதி அம்சம்
தெய்வம்,
செவ்வாய் :
செவ்வாயை பூமிகாரகன் என்று
சொல்லுவார்கள், எனவே காலி
நிலம்,அசையா
சொத்துக்கள்,
கரடு முரடான பாறைகள்,
மலைகள்,
கூர்மையான ஆயுதம்,
போன்றவற்றிற்கு செவ்வாய்
காரகன் ஆகும் .
நிலம் மீது ஆசையை
உண்டாக்குபவர்
செவ்வாய் , அதனால் தன்நிலத்தை
பாதுகாத்து கொள்ளவும்
அடுத்தவர் நிலத்தை
அபகரிக்கவும் செவ்வாய்
காரகன்ஆகும்
மன்னர்கள் பயன்படுத்தும் போர்
ஆயுதம்,சண்டை, கத்தி,
வேல்,அம்பு,துப்
பாக்கி,போன்றவை செவ்வாயின்
காரகம்
கோபத்திற்கு காரகன், சட்ட
ஒழுங்கை சீர்குலைக்கும்
தீவிரவாதி, அடக்குமுறையை
கையாளும் காவல்துறை,
இராணுவம்,தீயணைப்பு படை,
சீருடை அணிந்தவர்கள் ,
வலிமையானவர்கள் ,
மனவலிமை உள்ளவர்கள்
எல்லாவற்றிர்க்கும் செவ்வாய்
காரகன் ஆகும்
உறவு முறைகளில்
சகோதர்களுக்கும்,பெண்களுக்கு
அவர்களை அடக்கியாளும்
கணவரையும்
குறிக்கும்
செவ்வாய் தைரியம், முன்கோபம்,
முரட்டுத்தனம்,
பிடிவாதம் , மற்றவர்களுக்கு
கட்டுபடாமை ,
புரட்ச்சி செய்தல்,
உடல்வலிமையை பயன்படுத்தல்,மற
்றவர்கள்
படும் துன்பத்தை கண்டு
ரசித்தல், மற்றவர்களுக்கு ரண
வேதனையை
உண்டாக்குதல் போன்றவை
செவ்வாய்
கராத்தே,குத்துசண்டை,
மஞ்சுவிரட்டு,போன்ற வீர
சாகசங்களுக்கு
செவ்வாய் காரகன் ஆகும் மேலும்
வலிகளுக்கு
காரகன் என்பதால்
அறுவைசிகிச்சை,
கடுமையானநோய்கள்,
கோரவிபத்துகள்
,கொடுரமான மரணம்,கொலைகள்,ம
ற்றவர்களால்
தண்டிக்கபடுதல்
மன உளைச்சல், மன அமைதின்மை,
பதற்றம்,கடன்,
வழக்கு,துரோகம்,மற்றவர்களால்
மிரட்ட
படுத்தல்,
ஆயுதம்
வைத்திருத்தல்,ஊழல்கள்
போன்றவற்றிற்கு
செவ்வாய் காரகன் ஆகும்
எல்லாவகையான இயந்திரங்கள்,பெ
ரிய
தொழிற்சாலைகள், கருவிகள்,
கட்டுமான
தொழில்,
கனரக வாகனம், ஆபத்தான கொடிய
விளங்கு,
முட்செடி, புதர்,கரடு முரடான
பாதைகள்,செம்பு,பவளம்,
மிளகாய்த்தூள், தெய்வங்களில்
முருகன்
புதன் :
புதனை
ஜோதிடத்தில் புத்தி
காரகன் என்று
கூறுவார்கள் ,புதன் ஆதிக்கம்
உள்ளவர்கள்
கணிதத்தில்
சிறப்பாக இருப்பார்கள்,மேலும்
சுறுசுறுப்புடன்
இருப்பதற்கு
புதன் காரகன் ஆகும் , சமயோசித
புத்தி புதனின் காரகம்
புதன் கல்வி காரகன், கணிதம்
,புள்ளி விவரம்,சிற்பம்,
ஜோதிடம், மேலும் எழுத்து,
தகவல் தொடர்பு, அஞ்சல்,
தந்தி, தொலைபேசி,
தொலைகாட்ச்சி,
பத்திரிக்கை,
கம்பியூட்டர் , நூல்கள்,
போக்குவரத்து, நரம்பு
மண்டலம்
உறவு முறைகளில் தாய்
மாமன்,ஸ்ரீ கிர்ஷ்ணபகவான்
புதனின்
உரிய தெய்வம் , பச்சை நிறம் ,
உலோகங்களில்
பித்தளை, இலக்கண புலமை
புதனின் காரணம் .ஒரே சமயத்தில்
பலவேலைகளை செய்வது
புதன் , தரகு வேலை
புதுமையை விரும்புவது ,
வியாபாரிகள்
அனைத்திற்கும்
புதனே காரகன் ஆகும்
குரு :
சூரியனுக்கு ஐந்தாவது
வட்டத்தில் குரு உள்ளார்,
சூரிய குடும்பத்தில் குரு மிக
பெரியகோல் , குரு தனகாரகன்
ஒருவரை மற்றவர்கள்
மதிப்பளிப்பது,மரியாதை
கொடுப்பது
எல்லாம் குருவின் காரகன் ஆகும்.
குரு என்றால் ஆசான்,
ஆசிரியர்,குருமார்கள்,
ஆன்மிகவாதிகள்,சமய குருமார்கள்,
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு
உள்ளவர்கள்,சமய போதகர்,
நவகிரகங்களில் குருவே
பேரின்பத்தை கொடுப்பவர், தான
தர்மங்கள், பொதுமக்கள் பொது
பணம்,பொது வாழ்வு, அரசாங்க
கருவுலம்
,குழந்தைக்கு காரகன் குரு
உடலில் வயற்று பகுதிக்கு குரு
காரகன்,
மேலும் உடலில்
கொழுப்பு உண்டாவதற்கு
குருவே
காரகன் ,குரு சட்டம் ஒழுங்கு,
நீதிபதி, நீதிமன்றம், நேர்மையான
சட்ட
நடவடிக்கை போன்றவற்றிர்க்கும்
குருவே
காரகன் .
பூர்வீகம், பாரம்பரியம், மத
நம்பிக்கை, கோவில், சாஸ்திரம் ,
கல்வி நிறுவனம், பருத்த உடல்,
மந்திர
உச்சான்டினம் ,
பிறர்க்கு ஆலோசனை கூறுபவர்
குரு காரகன்
.மஞ்சள் நிறம்
தங்கம், ஜோதிடம் வாக்கு பலிக்க
குரு காரகன் ஆகும்.
சுக்கிரன்:
குருவை இரண்டு
விதமாக சொல்லுவார்கள்
தேவகுரு, அசுரகுரு,
அசுரகுரு என்பவர்தான் சுக்கிரன்
தேவகுரு
பேரின்பத்தை கொடுப்பார் ,
அசுரகுரு சிற்றின்பத்தை
கொடுப்பவர் அதாவது சுக்கிரன் .
சுக்கிரன் அழகு, கவர்ச்சி,நளினம்,
மென்மை,
காதல்,சுகம்,
வாகனம், பெண்கள் சுகம், தூக்கம்,
போதை, அதிக காம
இச்சை, ஆண்மை,
பணம்,பொன்,பொருள், சுகபோகம்,
அந்தஸ்த்து, புதையல் ,
ஆண்களின் திருமணம் பற்றி அறிய
பொதுவாக பெண்களை
குறிக்கும்
காரகன், எல்லாவித
உடல்சுகங்களுக்கும் ஆண்,பெண்
இருவருக்கும் ஆடம்பரம்,
சொகுசு, பகட்டு, உல்லாசம்,
போன்ற
மனதிற்கு மகிட்ச்சி
அளிக்கும் அனைத்திற்கும்,
சுக்கிரனே காரகன் ஆகும்.
வெள்ளி உலோகம் இவரின் காரகன் ,
இனிப்புக்கு
இவரே .
கள்ளத்தொடர்பு, விபச்சாரம்,
அடுத்தவர்களை மயக்கும்
கலைஞர்கள் போன்றவர்களுக்கும்
சுக்கிரனே காரகர்
இயல்,இசை,நாடகம்,உயர் ரக
மதுபானம்,ஆட்டம்,பாட்டம்,
கொண்டாட்டம் இவை
அனைத்திற்கும் சுக்கிரனே
காரகன்
மகாலக்சுமி உரிய தெய்வம் ஆகும்
, குரு
என்பது பொதுப்பணம், சுக்கிரன்
என்பது சொந்த பணம்
சனி கிரகம் :
நவகிரகங்களில்
சூரினநிளிருந்து மிக
தொலைவில் உள்ள கோல் சனி ,
மற்ற
கிரகங்களைவிட
சூரியனை சுற்றிவர அதிக கால
நேரம் சனி
எடுத்து கொள்கிறது
அதனால்தான் சனி ஆதிக்கம்
உடையவர்களும்,
சனி தசா,புத்தி நடக்கும்
போதும் ஜாதகருக்கு எல்லாமே
கால தாமதம் ஆகிறது . வேலை,
புத்தி ,சிந்தனை, செயல்
எல்லாமே காரகன் சனி, மந்த
காரகன்
,சோம்பேறி, வயதானதோற்றம், உடல்
ஊனம்,பொதுவாக கால் ஊனமாக
இருப்பதற்கு சனிதான் காரகன்,
ஆயுள் காரகன்
சனி ஆகும்
சனி இருட்டு கிரகம், கரிய நிறம்
இவருக்கு
சொந்தம் ,
சனி மந்தகிரகம் என்பதால்
வாழ்க்கையில் மிக
விரைவில் முன்னேற்றம், மாற்றம்
இருக்காது,
பிறந்தது முதல் இறுதிவரை
ஒரே மாதிரியான வாழ்க்கைதான்
வாழ்வார்கள்
பழமையானவற்றை
விரும்புவார்கள், மிக கட்டான
உருவம் உள்ளவர்கள்
, அழுக்கான தோற்றம், விகார
தோற்றம்,,
கீழ்த்தரமான
நடத்தை,பேச்சு, செயல்
இவையெல்லாம் சனியின் காரகம் ,
அடித்தட்டு மக்களுக்கு
சனியே காரகன்
தாழ்வுமனப்பான்மை , பிறர்க்கு
அடிமையாய் வாழ்தல்,
அழுக்கு நிறைந்த இடங்களில்
வசிப்பது, பழைய வீடு,
இடிந்த வீட்டில் வசிப்பது, மற்றவர்கள்
பயன்படுத்திய பொருளை
பயன்படுத்துவது , கடினமான
உழைப்பாளி,
ஆளும் வர்க்கத்தினரை எளிதில்
காணமுடியாதவர்கள்,
இரவு நேரம் என்பது இருட்டு
இது சனியின் காரகன் என்பதால்
திருட்டு போன்றவைக்கு
சனிதான்
காரகன்
பழைய பொருட்கள், கழிவு,
அசுத்தம்,
மனச்சோர்வு,
போன்றவைகளுக்கும் சனியே
காரகன் , கடின
உழைப்பு இருந்தால்தான்
தொழிலில்
முன்னேற முடியும் எனவே சனி
தொழில் காரகன்,
அதிகாரம் இல்லாத சீருடை
அணிந்த
வாட்ச்சுமேன், பாதுகாவலர்,
ஆபிஸ்பாய், வீட்டு
வேலைக்காரன், போன்ற
கடைநிலை
ஊழியர்கள் சனியின் காரகன் ஆகும்
, ஆண்,பெண்
மலட்டு தன்மைக்கு சனியே
காரகன் ,
கஞ்சத்தனம்,வறும
ை,பொய்,ஏமாறுதல்,ஏக்கம்,
ஊனம்,தாழ்ந்தஜாத
ி,இழப்பு,தன்னிலை
தாழ்தல், பக்கவாதம்,
போன்றவை ஆகும், தெய்வம்
ஐயனார்
ராகு :
ராகு ஒரு நிழல்கிரகம் ஆகும்,
ராகு
பெரும்பாலான காரகங்களை
சனியின்
காரகங்களை போன்றே
கொடுள்ளது, ராகுதிசை
18வருடம் நடக்கும்
ராகு நிழல்கிரகம் என்பதால்
கண்ணுக்கு
புலனாகாத ஆவி
பேய்,பிசாசு,மாந்திரிகம்,செய்வி
னை,பில்லி,சூன்ய
ம்,ஆகியவற்றிற்கு
ராகுதான் காரகன், எதையும்
பெரிது படுத்துவது
ராகுவின் காரகம் ஆகையால்
பிரமாண்டம், விகாரம்,
விஷதன்மைக்கு ,விஷ
உணவுகளுக்கும்,
(புட்பாய்சன்)போன்ற வர்ரிர்க்கும்
ராகுவே காரகன்
போதை, அதாவது
போதை கொண்டு அவன்
மனதை விகாரபடுத்தி
அகங்காரனாக கெட்டவனாக
ஆக்குவது
ராகுவே, போதைபொருள்
விஷத்தன்மை கொண்டது
ஆகும்,
ராகு மலட்டுத்தன்மை உடைய
கிரகம் ஆகும், ராகு மனதை
விகாரபடுதுவதால்
சமுதாயத்திற்கு மாறான
ஓரினச்சேர்க்கை, முரண்பாடான
உடலுறவு,கூட்டுகலவி,
ரத்தபந்தங்களில் தகாத பாலின
உடலுறவு போன்றவை ராகுவின்
காரகம் ஆகும் ,
வெளிநாட்டையும்,அன்னிய
மதங்களையும்,
அன்னியர்களையும்,அயல்நாட்டு
தொடர்பையும்,அன்னிய
மொழிகளையும்
,ராகுவே காரகன் .
ராகு நிழல்கிரகம் என்பதால்
சினிமா, போட்டோ, கிராபிக்ஸ்,
மின்சாரம்,மாயை
போன்றவற்றிற்கு ராகுவே
காரகன்
சிறிய அளவில் உள்ள திருட்டு சனி
காரகன்,
பெரிய அளவில் உள்ள திருட்டு
ராகு காரகன்
ஆகும்
மரணத்திற்கு சனி காரகன் ,
அதைபோல் இயற்க்கை சீற்றம்,
பேருந்து ,புகைவண்டி மூலம்
உண்டாகும் பெரிய அளவில்
உண்டாகும் மரணம்
ராகு காரகன் ஆகும்,
சிறைச்சாலை, சுவாசம், அலர்சி,
உடலில்
ஏற்ப்படும் தடிப்பு,
அகன்ற பாத்திரம், வெளிநாட்டு
தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி,
எதையும் மிகைபடுத்தி
சித்தரித்தல், மோசடி,
வழக்கத்திற்கு மாறான சிகை,
புற்று நோய்,
தாத்தா,பாட்டி,
தெய்வங்களில் துர்க்கை ,
கோமேதகம் போன்றவை
ராகுவின்
காரகங்கள் ஆகும்
கேது கிரகம்
ராகுவைபோல் கேதுவும்
ஒரு நிழல்கிரகம்
ராகு எப்படி கிட்டத்தட்ட
சனியை போன்று உள்ளதோ
அதேபோல் கேது
செவ்வாயை போன்று அதனிடைய
காரகங்களை கொண்டுள்ளது ,
கேதுவின் தசா காலம் ஏழு வருடம்
ஆகும்.
செவ்வாயின் தசா காலம் ஏழு
வருடம் ஆகும்
கேதுவின் காரகம் எதையும்
சிறியதாக ஆக்குவது,
சிதைப்பது,அல்லது
துண்டிப்பது கேதுவின் காரகம்
ஆகும்.
தன்னை பெரிதுபடுத்தி
தான் என்ற அகங்காரத்தை
கொண்டது ராகு, தன்னை
சிறுமை படுத்தி எல்லாம்
இறைவன்
என்பது கேது ,எனவேதான்
கேதுவை ஞானகாரகன் என்று
சொல்கிறோம் , ராகுவை
போன்றே
கேதுவும் விஷத்தன்மை
கொண்டது ,போதைபொருள் ,
அபின்,கஞ்சா,போன்றவை
கேதுவின் காரகன்
ஆகும் .
தன்னை வெளிக்காட்டுவது
ராகுவின்
காரகம்,
தன்னை வெளிக்காட்டாமல்
இருப்பது
கேதுவின் காரகம்
தன்னடக்கத்துடன் இருக்கும்
முனிவர்கள் கேதுவின் காரகம்.
உடைப்பது,சிதைப்
பது,துண்டிப்பது,கேதுவின்
காரகம் என்பதால் நாட்டை
சீர்குலைப்பது,கலகக்காரர்கள்,
வெடிகுண்டு ,பட்டாசு,
ஜல்லி,அமிலம்,மிரட்டுவது,
சட்டத்திற்கு புறம்பான செயல்
போன்ற
அனைத்தும் கேதுவின்
காரகம் ஆகும், குறுகிய
பாத்திரம்,குறுகிய
குழாய்கள்,கம்பிகள்,நார்களும்,க
யறுகளும் , உடலில் உள்ள குடல்
போன்றவை கேதுவே .குறுகிய
பாதைகள்,சந்துகள்
போன்றவை கேதுவே ,
கேது ஒரு
மலட்டுத்தன்மை உடைய கிரகம்
ஆகும்.
ரகசியம், ரகசிய சதிவலை,
புலனாய்வு
துறை போன்றவை
கேதுவே , ஏழ்மை,
மதநம்பிக்கை,தத்துவம்,தத்துவ
ஞானம்,
மோட்ச்சம்,வேதாந்தம்,மனோபலம்,தன
ிமையில்
இருத்தல்,
தவம்,ரணம்,புண்கள்,உடலில் உள்ள
அமிலம்,மருத்துவம்,
மவுனவிருதம்,,பில்லி,சூன்யம்,மா
ந்திரீகம்,ஆவியுலக
தொடர்பு,விவாகரத்து, எளிதில்
கண்டுபிடிக்க முடியாத
போலிகள்,நெருக்கடி போன்றவை
கேதுவின் காரகம் ஆகும்
விநாயகர் தெய்வம், வைடுரியம்
நவரெத்தினம்.

No comments:

Post a Comment