Tuesday 1 December 2015

ராகு கேது தரும் பலன்கள்

குரு கேது சேர்க்கை பெற்றவர்கள்
என்றாவது ஒருநாள் சரித்திரம்
படைக்கிறார்கள்.
புத்திரஸ்தானத்தில் (ஐந்தில்) இராகு
கேது இருப்பது கடுமையான புத்திரதோஷம்
ஆகும். பிள்ளைகள் இவர்களுக்குப்
பிறக்காது. மீறிப் பிறந்தாலும் அந்தப்
பிள்ளைகளை ஏன் பெற்றோம் என்று
சொல்லும் அளவுக்கு இருப்பார்
கிரகணம் தோன்றும் நாளில் உடலுறவு
கொள்வது கடுமையான தோஷத்தை
உண்டாக்கும். மேலும் குழந்தை
ஊனமுற்றதாகப் பிறக்கும்.
இராகு கேதுவால் புத்திரதோஷம்
உண்டால் சர்ப்பசாந்தி நாகப்பிரதிஷ்டை
செய்ய வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி
சென்று தோஷப் பரிகாரம்
செய்தாலும் புத்திரதோஷம் நிவர்த்தி
ஆகும்.
5ம் இடத்தை இராகு பார்த்தால்
கருச்சிதைவு உண்டாகும் அல்லது
குறைப்பிரசவம் ஏற்படும்.
7ம் அசுபதி இராகு (அ) கேது இவர்களுடன்
கூடி 6 8 12ல் நிற்க தன் குலத்திற்கு முற்றிலும்
மாறுபட்ட மாதரை மணப்பர்.
சுக்கிரன் நீசம் பெற்று ராகு (அ)கேது
இவர்களுடன் சேர்ந்தால் திருமணம்
தாமதமாகும்.
எல்லா கிரகங்களும் இராகு கேதுக்குள்
அமைந்திருக்கும் அமைப்பு உள்ளவர்களுக்கும்
திருமணம் தாமதமாகிறது. இதனை
(காலசர்ப்ப தோஷம் என்கிறோம்)
பெண் ஜாதகத்தில் 8ல் சனி
செவ்வாய் ராகு இருக்க எளிதில்
திருமணம் நடைnறுவதில்லை.
7ம் இடம் ராகுவால்
பார்க்கப்பட்டால் மனைவி- கணவன்
சொல் பேச்சு கேட்பவளாக
இருக்கமாட்டாள்.
மேஷம் மிதுனம் சிம்மம் கன்னி ஆகிய
ராசிகள் மலட்டு ராசிகள் இந்த
இடங்களில் ராகு இருந்தால்
எவ்வளவுதான் பரிகாரம்
செய்தாலும் புத்திரபலன்
உண்டாவது இல்லை.
ஒருவர் ஜாதகத்தில் 5ல் ராகு இருந்து
குரு பார்வை பெற்றால் புத்திரதோஷம்
பரிகாரம் ஏற்படுகிறது. புத்ரபாக்கியம்
உண்டாகிறது.
ராகு பகவான் புத்திரஸ்தானத்தில்
இருந்தாலும் குரு சாரமாகிய புனர்பூசம்
விசாகம் பூரட்டாதி ஆகிய நட்சத்திர
சாரங்களில் அமையப் பெற்றாலும்
புத்திர தோஷத்திற்கு பரிகாரம்
உண்டாகிறது.
  ராகுவும் சனியும் இணைந்து லக்கனத்தில்
காணப்பட்டால் கணவன் மனைவிக்குள்
கண்டிப்பாக பிரிவு உண்டாகிறது.
7ஆம் வீட்டில் ராகுவும்
செவ்வாயும் காணப்படின் கலப்புத்
திருமணம் நடைபெறுகிறது.
ராகு பகவான் சனியைப் போலவும் கேது
பகவான் செவ்வாயைப் போன்றும்
பலன் தருவார்.
பெண் ஜாதகத்தில் 4ல் ராகு
அமையப் பெற்றால் விதிவசத்தால்
கற்பிழக்கின்றனர்.
2ல் (அ) 7ல் ராகு கேது அமையப்
பெற்றவர்கள் விவாகரத்து கோரி
வழக்கு மன்றம் செல்கின்றனர்
அல்லது திருமணமே செய்து
கொள்வதில்லை. (அ)
மணவாழ்க்கையில் சிறிது கூட சந்தோஷம்
உண்டாவதில்லை. இருதார யோகம்
உண்டாகிறது.
12ல் கேது அமையப் பெற்றவர்கள்
கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்
பாக்கியம் உண்டாகிறது. மறுபிறவி
அடைவதில்லை.
  10ம் வீட்டில் ராகு அமைப்பும் 10ம் அதிபதி
ராகு சாரம் பெற்றாலும்
கெமிக்கல் மருந்து தெய்வீகத்
தொழில் போன்றவை அமையப்
பெறும்.
  இராகு பகவான் கொடுப்பதில்
வல்லவர் என்பதை யாராலும் மறுக்க
முடியாது. அவரே மேஷம் ரிஷபம் கடகம்
கன்னி மகரம் ஆகிய இடத்தில் வீற்றிருக்கும்
போது யோகப் பலனை அள்ளி அள்ளிக்
கொடுக்கிறார்.
ராகு ஒருவர் ஜாதகத்தில் உச்சம்
பெற்றுக் காணப்படின் அரசியல்
வாழ்க்கை ஏற்படுகின்றது.
ஒருவர் ஜாதகத்தில் 6-ம் வீட்டில் ராகு
வீற்றிருக்கும் போது, குரு லக்ன கேந்திரம்
பெற்றால் “அஷ்டலெட்சுமி
யோகம்” ஏற்படுகின்றது. இதனால் புகழ்
பெருமை செல்வம்
செல்வாக்கு உண்டாகிறது.
ராகு 7-ல் வீற்றிருந்து அசுபரால்
பார்க்கப்படும் போது மணவாழ்வில் சிறிது
கூட சந்தோஷம் இருப்பதில்லை.
ராகு 7-ல் வீற்றிருந்து 12-ம் வீட்டில்
இரண்டு பாவிகள் அமையப்
பெற்றிருந்தால் கணவன் - மனைவி
உறவில் சிறிது கூட சந்தோஷம்
உண்டாவதில்லை. கட்டில் சுகத்தில் சிறிது
கூட திருப்தி ஏற்படுவது இல்லை.
ராகு 12-ம் வீட்டில் அமையப் பெற்று 2
7 ஆகிய வீடுகளில் பாவிகள் அமையப்
பெற்றால் அந்த ஜாதகருக்கு தார
தோஷம் ஏற்படுகிறது.
ராகு செவ்வாய் சனி ஆகிய
கிரகங்கள் சேர்க்கை பெற்று 7-ம் வீட்டில்
அமைய பெற்றால் அவன் மனைவி
எப்பொழுதும் நோயாளியாகவே
திகழ்வாள்.
ராகு சுக்கிரன் 7-ம் வீட்டில் அமையப்
பெற்றாலோ அல்லது லக்ணத்தில்
காணப்பட்டாலோ அவனுடைய
மணவாழ்வு சிறிது கூட சந்தோஷம்
இருக்காது.
ராகுவும் சனியும் இணைந்து 7-ம் வீட்டில்
காணப்பட்டால் அவன் விதவையுடன்
உடல் உறவு கொள்வான்.
களத்ரதோஷம் உண்டாகும்.
சனியும் கேதுவும் சேர்ந்து இருக்கப்
பெற்றவர்கள் வாழ்வில் பற்று
இல்லாதவர்களாக வாழ்கின்றனர்.
காலசர்ப்பயோகம் இருந்தால் ராகு
அல்லது கேது திசையில் உச்ச புகழ் அடைந்தால்
அந்த திசை முடியும் போது திடீர் மரணம்
ஏற்படலாம். சந்திரனுக்கு 3 6 11 ராகு
அமையப்பெரின் மிகப்பெரிய
ராஜயோகம் ஆகும்.
ராகு பகவான் சுபர்கள் வீட்டில்
இருந்தால் சுப பலனும் அசுபர் வீட்டில்
இருந்தால் அசுப பலனும் உண்டாகும். 4
7 10-ல் காணப்படின் செல்வம்
செல்வாக்கு உண்டாகும்.
ராகு பகவான் செவ்வாய் சனி
இவர்களுடன் சேர்க்கை பெற்று
தசாபுத்தி நடைபெறும் போது திடீர்
மரணம் உண்டாகும்.
ராகுவோடு குருபகவான் சேர்ந்து
காணப்பட்டால் குரு சண்டாள யோகம்
ஏற்படுகிறது. இந்த யோகம்
அமையப்பெற்று ராகுதிசை
நடைபெறும் போது பெரும்
செல்வமும் செல்வாக்கும்
உண்டாகிய படி இருக்கிறது.
3 6-ல் ராகு (அ) கேது இருக்க
வெற்றிகளை அள்ளித்தருவார். 2-ல்
ராகு (அ) கேது இருக்க விஷக்கடியால் மரணம்

2 comments:

  1. என் ஜாதகத்தில் ராகு 6 ஆம் இடத்தில உள்ளது. ( 6 ல் துலாம் ராசியில் சுக்கிரனின் சேர்க்கை பெற்றுள்ளது).

    ReplyDelete