Saturday 14 October 2017

Lord shiva namavali

*சைவ முழக்கம்*

மெய்யன்பர்களே திருக்கோவிலில் வழிபாடு செய்வதற்கு முன்பு பரம்பொருளின் ( சிவபெருமானின்) நாமாவளி சொல்ல வேண்டும் சொல்லிய பின் வழிபாடு தொடங்கலாம்

நாமாவளியைப் பற்றிப் பார்ப்போம்

1. அரகர நம பார்வதி பதயே அரகர மகாதேவா

2. தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

3. ஏகம்பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி

4. அண்ணாமலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி

5. ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி

6. பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

7. குற்றாலத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி

8. அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி

9. ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்குரு மணி போற்றி

10. தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆளாய் போற்றி

11. அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி

12. மண்ணிய திருஅருள் மலையே போற்றி
சென்னியில் வைத்த சேவக போற்றி

13. காவாய்க் கனகதிரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

இந்த போற்றி துதிகளை சொல்லி வழிப்பாட்டை நிறைவு செய்ய வேண்டும் மெய்யன்பர்களே

திருச்சிற்றம்பலம்

தலயாத்திரை செல்லும் போதும் வழிபாடு செய்யும் போதும் இந்த சிவ நாமத்தை சொல்லலாம் இது மேலும் சிவனடியார்களுக்கு புத்துணர்ச்சி வரும் மெய்யன்பர்களே

1. சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்

2. அண்ணாமலை சிவ சிவாய நம ஓம்
அருணாசல சிவ சிவாய நம ஓம்

3. ஆலங்காடா சிவாய நம ஓம்
ஆரூர் அரசே சிவாய நம ஓம்

4. இன்னம்பர் ஈசா சிவாய நம ஓம்
இன்றெனக் அருள்வாய் சிவாய நம ஓம்

5. ஈங்கோய் மலையாய் சிவாய நம ஓம்
ஈங்கெழுந்தருள்வாய் சிவாய நம ஓம்

6. உண்ணாமுலை சிவ சிவாய நம ஓம்
உண்மைப்பொருளே சிவாய நம ஓம்

7. ஊனம் ஒன்றில்லாய் சிவாய நம ஓம்
ஊழி ஏழானாய் சிவாய நம ஓம்

8. எழுத்தறி நாதரே சிவாய நம ஓம்
என்றும் இளையாய் சிவாய நம ஓம்

9. ஏகம்பம் மேயாய் சிவாய நம ஓம்
ஏடகத்துறைவாய் சிவாய நம ஓம்

10. ஐந்தெழுத்து உருவாய் சிவாய நம ஓம்
ஐயாறு மேயாய் சிவாய நம ஓம்

11. ஒற்றியூர் உள்ளாய் சிவாய நம ஓம்
ஒண்பொருளே சிவ சிவாய நம ஓம்

12. ஓண காந்தேஸ்வர சிவாய நம ஓம்
ஓலம் அடிகேள் சிவாய நம ஓம்

13. சிவாய நம ஓம் அபாயம் யாவும் போம்
அபாயம் யாவும் போம் உபாயம் அறிவோம்

14. உபாயம் அறிவோம் உள்ளம் அது தெளிவோம்
உள்ளமது தெளிவோம் சிவாய நம ஓம்

15. சிவ சிவ என்போம் சிவகதி பெறுவோம்
அர அர என்போம் அவன் தாள் பணிவோம்.

இந்த சிவ நாமாவளியை நாள் தோறும் வழிப்பாட்டில் சேர்த்துக் கொள்வோம் சிவயின்பம் பெறுவோம்....

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment