Thursday 12 October 2017

அஷ்டலட்சுமிகள் நமது உடலில்

சித்த அஷ்டலக்ஷ்மி ரகசியம்

அகத்தியர், போகர் உரையாடல்

அகத்தியர்: ''நம் ஒவ்வொருவர் உடலிலும்அஷ்டலக்ஷ்மிகள் வசிக்கும்போது, நாம் எப்படி ஏழைகளாவோம்?

போகர்: ''நம் உடலில் அஷ்ட லஷ்மிகள் வசிக்கிறார்களா? மக்கள் அறிய ஆவலாக இருக்கிறார்கள் குருவே!
அகத்தியர்: ''மனிதனுடைய உடலில் வசிக்கும் அஷ்டலக்ஷ்மிகள் மகிமையைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக. முதலாவதாக, நம் பாதங்களில் வசிப்பவள் “ஆதிலக்ஷ்மி” என்று நீ அறிவாயாக
போகர்: “அதனால்தானா குருவே, கிருஷ்ண பரமாத்மா குழந்தையாக இருக்கும்போது கால்கட்டை விரலைச்சூப்பினான்?

அகத்தியர்: “சரியாகச் சொன்னாய் போகா... கிருஷ்ண பரமாத்மா ஒன்றைச் செய்கிறான் என்றால்..... சும்மாவா....? அப்படி அவன் கால்கட்டை விரலைச் சூப்புவதன் மூலம் ஆதிலக்ஷ்மிக்கு முத்தம் தருகிறானாம், ஐயனே....

போகர்: ''ஐயனே! ஆதிலட்சுமி ஒருவனை விட்டு எப்பொழுது விலகுகிறாள்?
அகத்தியர்: ''பிறர் மீது தெரிந்தோ அல்லது தெரியாமலோ நம் கால் படும்போதும், மது, மங்கை, சூதாட்டம்...இவைகளை நாம் நாடும்போதும் ஆதிலட்சுமி நம்மை விட்டு விலகுகிறாள். ''பிறர் மீது தெரியாமல் கால் பட்டு விட்டால் சிவ சிவ எனக்கூற இலக்குமி விலகமாட்டாள்.

போகர்: ''ஜயனே, கலியுகத்தில் திருமணங்கள் நடக்கும் இடங்களில் கூட சூதாட்டம் மலிந்து விட்டதே... !
அகத்தியர்: “ஜயனே, இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்திதான்... திருமணம் நடக்கும் இடங்களில் சூதாடுவதால் மனமக்களுக்கு ‘சில்மிஷ’ புத்தியோடு கூடிய மக்கள் பிறக்கின்றன. ஆகவே திருமண வைபவங்களில், இரு வீட்டாரும் ஒன்று கூடி, சூதாடுவதைத் தடுத்து நிறுத்த வேணடும்

போகர்: 'சத்குருநாதா, மனிதன் ஆதிலக்ஷ்மியின் ஆசி பெற என்ன செய்ய வேண்டும்?

அகத்தியர்: “நம் தாய் தந்தையர்க்கும், குருவுக்கும், பெரியோர்களுக்கும் பாத பூஜை செய்து வணங்குவதன் மூலம், நாம் ஆதிலக்ஷ்மியின் அருளைப் பெறலாம். அடுத்து, காலை நீட்டியபடி புத்தகத்தை வைத்துக்கொணடு படிப்பதாலும், நெல், அரிசி, தானியம் இவைகளைக் கால்களால் மிதிப்பதாலும் பால் கறக்கும்போது, பசுவினுடைய கால்களைக் கட்டிவிட்டுக் கறப்பதாலும் நம்மை விட்டு முக்கியமான ஒரு லட்சுமி விலகுகிறாள். அவள்தான் “கஜலக்ஷ்மி” ....மனிதனுடைய முழங்கால் பகுதியில் அவள் வசிக்கிறாள்... ''

போகர்: ''ஜயனே, கஜலக்ஷ்மி நம்மிடமிருந்து விலகாமலிருக்க என்ன வழி?
அகத்தியர்: ''நான் முதலில் சொன்ன தவறுகளை செய்யாமலிருப்பதாலும், கணவன், குரு, பெரியவர்கள் ஆகியோருடைய முழங்கால்களை, வலி தீர பிடித்து விடுவதாலும் கஜலக்ஷ்மி நம்மை நாடி வருகிறாள்....அடுத்து வருபவள் வீர்யலக்ஷ்மி
போகர்: ''குருவே, வீர்யலக்ஷ்மி நம் உடலில் எங்கு வசிக்கிறாள்?

அகத்தியர்: ''ஜயனே, மனிதனுடைய இடுப்புக்குக் கீழ் பகுதியில் அவள் வசிக்கிறாள். குடுமி வைத்தவர்களை என்றுமே கேலி செய்யக்கூடாது. அப்படிச் செய்வதால் மனிதன் 'கானப்புரட்டி’ என்ற சாபத்திற்கு ஆளாகிறான். அச்சாபத்தின் மூலம் ஒருவன் எவ்வளவு முயன்று படித்தாலும், அவன் மண்டையில் படிப்பு ஏறாது... குடுமியைக் கேலி செய்வதாலும், சாதுக்களையும் மகான்களையும் கேலி செய்வதாலும், வீர்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள்.

போகர்: ''குடுமியில் அப்படி என்ன விசேடம்?
அகத்தியர்: ''சீடனே, குடுமி மகிமையைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், அதற்கு முடிவே கிடையாது.. ஆகவே, ‘குடுமி மகிமை’யைப் பற்றிப் பிறகு பேசுவோம். ஆனால் ஒன்றை மட்டும் நீ தெரிந்து கொள்ள வேண்டுமடா... குடுமி வைத்துள்ள ஒருவன், சாதாரண மனிதனைவிட 100 மடங்கு அதிகமாக, சீலத்தையும், குணத்தையும், நாணயத்தையும் பெற்றிருக்கிறான்...” அவன் தவறு செய்தால் பரிகாரம் கிடையாது. சாபம் உண்டு..... : ''ஜயனே, அடுத்து வருபவள் ''விஜயலக்ஷ்மி அல்லவா?

அகத்தியர்: ''ஆம், ஐயனே! இவள் நம்முடைய இடது தொடையில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக. இடது தொடை எப்பொழுதும் மனைவிக்குதான் சொந்தம். ஆகவே மனைவியை விடுத்து, பிறன்மனை நோக்கினால் நம்மைவிட்டு விஜயலக்ஷ்மி அகன்று விடுகிறாள்.... ''துரியோதனை விட்டு விஜயலக்ஷ்மி அகன்றதால்தான் அவன் தோல்வியுற்றான்” என்கிறது இருடிகள் பாரதம்.

போகர்: ''ஜயனே, துரியோதனனை விட்டு விஜயலக்ஷ்மி அகன்றது எதனால்?
அகத்தியர்: ''பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டதில் அனைத்துச் செல்வங்களையும் இழந்து, அதோடு மட்டுமல்லாது திரௌபதியையும் பணயமாக வைத்து இழந்து, சபையில் வாயடைத்து நிற்கிறார்கள்... உடன் திரௌபதியும் நிற்கிறாள்... அப்பொழுது, துரியோதனன் திரௌபதியைப் பார்த்து ‘அமருவாய் என் மடியிலே’,என்று சொல்லித் தன் இடது தொடையைக் கையால் தட்டினான். பிறன் மனைவியைத் தன் மடியில் அமரத் தட்டியதால் விஜயலக்ஷ்மி அவனை விட்டுச் சென்று விட்டாள்... துரியோதனனும் போரில் தோற்றான்.......புரிந்ததா? அடுத்து வருபவள் ‘சந்தானலக்ஷ்மி’ இவள் மனிதனுடைய வலது துடையில் வசிக்கிறாள்

போகர்: ''ஐயனே, சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு எப்போது விலகுகிறாள்?
அகத்தியர்: ''நண்பனே. இங்குதான் திருமண வைபவத்தின்போது கன்னிகாதானம் செய்ய வேண்டிய முறையை பெரியவர்கள் விளக்குகிறார்கள்... கன்னியை அவளது தகப்பன் தானம் செய்து கொடுக்கும்போது அவளைத்தன் வலது துடையில் மட்டுமே அமர்த்திக்கொள்ள வேண்டும்.... இடது துடையிலோ அல்லது இரு துடைகளின் நடுவிலோ மணமகள் அமரக்கூடாது. ஆகவே, கன்னியை முறை மாற்றி தானம் செய்வதால்தான் சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள், புரிந்து கொண்டாயா...?

போகர்: ''புரிந்து கொண்டேன்,சுவாமி, புவிவாழ் மக்களுக்கு இது மிகவும் பயன்படும் அல்லவா?
அகத்தியர்: ''அடுத்து வருபவள் 'தான்யலக்ஷ்மி’. இவள் மனிதனுடைய வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக.

போகர்: ''ஜயனே, தான்யலக்ஷ்மி நம்மை விட்டு, எப்போது அகலுகிறாள்?
அகத்தியர்: ''ஊசிப்போன உணவு, எச்சில் உணவு, கல்லிருக்கும் உணவு இவைகளை ஏழைகளுக்கோ அல்லது கணவன்மார்களுக்கோ பெண்கள் படைத்தால், அவர்களை விட்டுத் தான்யலட்சுமி விலகி விடுகிறாள்... பொதுவாக மற்றவர்கள் வயிற்றில் நாம் அடிக்கும்போது நம்மை விட்டு தான்யலட்சுமி அகன்று விடுகிறாள்.
''ஜயனே, அடுத்து, நம் நெஞ்சுப்பகுதியில் வசிப்பவள் 'தைரியலக்ஷ்மி’ என்று நீ அறிய வேண்டும்... நெஞ்சிலே நஞ்சை வைத்து, பொய்யும், புறமும் பேசித் திரிபவரை விட்டு தைரியலட்சுமி அகன்று விடுகிறாள் பாரேன். ஆகவேதான் பெண்கள் மாங்கல்யம் அணிவதும், அணிந்த மாங்கலயம் நெஞ்சிலே தவழ்வதும் கனவனுடைய 'தைரியத்தை’ வளர்க்கும் என்கிறார்கள் பெரியவர்கள்....புரிந்ததா, போகா?

போகர்: ''புரிந்தது, நாதா!. 'மாங்கல்ய மகிமை’யைப் பற்றித்தான் தாங்கள் விரிவாகக் கூறியுள்ளீர்களே!'' (‘'மாங்கல்ய மகிமை’ என்னும் புத்தகத்தில் காண்க)

அகத்தியர்: “ஆம் ஜயனே, அடுத்து வருபவள் ‘வித்யாலக்ஷ்மி’.... இவள் நம் கழுத்துப்பகுதியில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக பொதுவாகவே, அனைவரும் கழுத்தில் ருத்திராக்ஷம் அணிந்துதான் தீரவேண்டும். அப்படி அணியவில்லை என்றால் வித்யாலட்சுமி நம்மை விட்டு விலகுகிறாள்.”

போகர்: ''பெண்களானால் குருவே!
அகத்தியர்: ''பெண்கள் பஞ்ச பூதங்களின் ஆசி பெற்று வந்த தாலிக்கயிற்றை அணிவதே உத்தமம். அடுத்து வருபவளோ, 'சௌபாக்யலக்ஷ்மி’ என்று நீ அறிவாயாக.
போகர்: ''எப்பொழுது குருவே, சௌபாக்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள்?”

அகத்தியர்: 'சொல்கிறேன் கேள்....பெண்கள் தங்கள் புருவங்களைச் சிரைக்கக்கூடாது. சிரைத்தால், கணவனுடைய ஆயுள் நிச்சயம் குறையும். அடுத்து, பெண்கள் (sticker) ஒட்டுப்பொட்டு வைக்கக்கூடாது. மேலும், மஞ்சளால் செய்த குங்குமத்தைத்தான் நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும். ஆகவே, மேற்கூறியபடி முகத்தைப் பேணாதவர்களை விட்டு சௌபாக்யலக்ஷ்மி அகன்று விடுகிறாள் என்று உறுதியோடு மக்களுக்கு அறிவிப்பாய் போகா''

போகர்: ''ஐயனே! பெண்கள் புருவத்தைச் சிரைக்கக்கூடாது என்றீர்கள்... ஆண்கள் சிரைத்தால் ...?
அகத்தியர்: ''ஆண்கள் சிரைத்தால்.தந்தைக்கு பிண்டம் போடும் நிலையில் தடங்கல் ஏற்படும். இதனால் சாபம் உண்டு என்று நீ அறிதல் வேண்டும்... இவையெல்லாவற்றிற்கும் காரணம் அறியாமையும், அறிந்த பெரியவர்களை நாடாமையுமே

போகர்: ''ஜயனே. இதைத்தான் 'தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்’ என்றார்களோ பெரியவர்கள்

அகத்தியர்: ''ஆம், ஐயனே! தவறுகளைத் தாராளமாகச் செய்து நம்முள் இருக்கும் லட்சுமிகளை நாமே விரட்டியடித்தபின் நம்மிடம் செல்வங்கள் எப்படிச் சேரும்?

No comments:

Post a Comment