Thursday 13 October 2016

நோய் தீர்க்கும் அமிர்த நாழிகை


🌼 நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம் என்பார்கள். மனிதனுக்கு
தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும்
ஒன்று. அதனால்தான்
🌼 கலையாத கல்வியும், குறையாத
வயதுமோர்
கபடு வாராத நட்பும், கன்றாத
வளமையுங்
குன்றாத இளமையும், கழுபிணி யிலாத
உடலும்
சலியாத மனமும், அன்பகலாத
மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத
கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள்
வாராத கொடையும்
தொலையாத நிதியமும் என்று
அம்பிகையையிடம் கேட்கும் அபிராமிபட்டரின்
வேண்டுதலில்
கழுபினியிலாத உடலும் என்ற வார்த்தை
இடம் பெறுகிறது.
🌼 இந்த ஆரோக்கியத்தை தரவல்லவர்
தன்வந்திரிபகவான். கல்விக்கு சரஸ்வதி,
செல்வத்திற்கு மகாலக்ஷ்மி,
வீரத்திற்கு பார்வதி என்று
சொல்வது போல், மருத்துவ கடவுள்
தன்வந்திரி பகவான்.
🌼 பாற்கடலில் அவரித்த பார்கவியோடு
தோன்றியவர். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு
அவதரித்தவர். நோய்க்கு மருதுண்ணும் போது,
தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி
அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே
மருந்துண்டால், வெகுவிரைவில் நோய்
குணமாகும்.
🌼 அதுமட்டுமல்ல, மருந்துண்ணவும் நேரம்
இருக்கிறது. மனித இனத்திற்கு மகான்கள்
கொடுத்த மகத்தான
கொடைதான் பஞ்சாங்கம். அது
வெறும் நல்லநேரம், கெட்ட நேரத்தை
சொல்வதோடு நின்று விடவில்லை, இந்த
காலக்கணிதத்தின் வாயிலாக சகலமும்
அறியலாம்.
🌼 அந்த ஆழ்கடலில் இருந்து நாம் எடுக்க
நினைக்கும் முத்து அமிர்தகடிகை அல்லது அமிர்த
நாழிகை. குறிப்பாக சொல்லப்
போனால் வியாதிக்கு மருந்துண்ணும் நேரம்.
இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.
🌼 மொத்தம் இருப்பது 27
நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு
நட்சத்திரம் வீதம் உதயமாகிறது. ஒரு
நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக
60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை
என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின்
துவக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து
தொடங்குகிறது.
🌼 அந்த வகையில் அமிர்த நாழிகையை
கணக்கிட அன்றைய சூரிய உதயம்
தெரிந்திருக்க வேண்டும். அதில் இருந்து
அமிர்த நாழிகை துவங்கும் நேரத்தை
மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற
வேண்டும்.
🌼 அவ்வாறு சரியான அமிர்த
நாழிகையில் நோய்க்கான மருந்தை
உண்பதால் பூரண குணமடைய முடியும்
என்பது கவிகாளிதாசர் எழுதிய
உத்திரகாலாமிர்தத்தில்
சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.
🌼 உங்கள் வசதிக்காக
இன்னொறு சுலப கணக்கை
சொல்கிறேன். மலேசியாவைப்
பொருத்தவரை சூரிய உதயம் என்பது
கிட்டத்தட்ட காலை 7.00 மணி என்றே வைத்துக்
கொள்ளலாம். இதில் முன்பின்
நேரங்களில் உதயநேரம் இருக்கிறது.
என்றாலும் 7.00 என்பது ஒத்துப் போகும்.
🌼 மருந்துண்ணும் நேரம் பெரும்பாலும்
நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல்
இருக்கிறது என்பதால் அமிர்த நாழிகை
துவக்கம் முதல் முடிவு வரை ஒன்னரை மணிநேரம்
இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி
விட்டால் கூட அதன் மத்திம நேரத்தில் மருந்து
உண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
🌼 இந்த இடத்தில் இன்னொறு
விஷயத்தையும் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும். அவசரகால
நிவாரணத்திற்கு இது
பொருந்தாது. ஒரு பாம்பு
தீண்டிவிட்டது.
🌼 அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த
நாழிகைக்காக காத்திருக்க முடியாது.
அதைப்போல் இன்றைய நவீன மருத்துவத்தில்
காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள்
மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம்
இருக்கிறது.
🌼 இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை
வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்டால்
அந்நோய் பூரணமாக குணமாகும்.
🌼 இனி அந்த நேரத்தைப் பார்ப்போம்.
உதாரணமாக மருந்துண்ணும் நாளில்
அசுவினி நட்சத்திரம் நடப்பில் இருந்தால் 21
நாழிகை முதல் 25 நாழிகைக்குள் மருந்து
உண்ண வேண்டும்.
🌼 1.அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள்
2.பரணி 30 முதல் 34 நாழிகைக்குள்
3.கிருத்திகை 50 முதல 54 நாழிகைக்குள்
4.ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள்
5.மிருகசீரிடம் 30 முதல் 34 நாழிகைக்குள்
6.திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள்
7.புனர்பூசம். 14 முதல் 18 நாழிகைக்குள்
8.பூசம். 16 முதல் 20 நாழிகைக்குள்
9.ஆயில்யம். 40 முதல் 44 நாழிகைக்குள்
10. மகம் 20 முதல் 24 நாழிகைக்குள்
11.பூரம். 30 முதல் 34 நாழிகைக்குள்
12.உத்திரம். 33 முதல் 37 நாழிகைக்குள்
13.அஸ்தம். 07 முதல் 11 நாழிகைக்குள்
14.சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள்
15.சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள்
💞16.விசாகம் 20 முதல் 24 நாழிகைக்குள்
💞17.அனுசம். 14 முதல் 18 நாழிகைக்குள்
💞18.கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள்
💞19.மூலம். 14 முதல் 18 நாழிகைக்குள்
💞20.பூராடம். 10 முதல் 14 நாழிகைக்குள்
💞21.உத்ராடம் 14 முதல் 18
நாழிகைக்குள்
💞22.திருவோணம். 20 முதல் 24 நாழிகைக்குள்
💞23.அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள்
💞24.சதயம். 20 முதல் 24 நாழிகைக்குள்
💞25.பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள்
💞26.உத்திரட்டாதி 18 முதல் 22
நாழிகைக்குள்
💞27.ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள்
🌼மருந்து உண்பதால் நோய்கள் பூரண
குணமாகிவிடும் சித்தர்கள் கண்ட ராஜ
வைத்தியம்.
🌼நீங்களும் இதை கடைபிடித்து
நோய்தாக்கத்தில் இருந்து விடுபட எல்லாம்
வல்ல தன்வந்திரி பகவானை
தொழுகிறோம். வாழ்க வளமுடன்,
வாழ்க நலமுடன்.

No comments:

Post a Comment