Thursday 24 November 2016

ராகு கேது

ராகு & கேது
நவ கிரகங்களில் நிழல் கிரகம் என
வர்ணிக்கப்படும் ராகு&கேது இருவருக்கு
சொந்த வீடு இல்லை. தங்கள்
இருக்கும் இடத்தையே சொந்த வீடாக
கொண்டு பலன் தருவார்கள்.
பொதுவாக ராகு பகவான்
தந்தை வழி தத்தாவிற்கு திடீர் வளர்ச்சி, தீய
பழக்க வழக்கம், வேறு சாதி, வேறு மதம்,
வயிறு கோளாறு, விபத்து, நவீன கரமான
செயல் போன்றவைக்கு காரகன்
ஆவார்.
ஜென்ம லக்கினத்திற்கு 12
பாவங்களில் ராகு&கேது இருந்தால்
உண்டாகும் பலன்கள்;-&
ஜென்ம லக்கினத்தில் ; ராகு
இருந்தால் முன் கோபம், வேகம், விவேகம்,
முரட்டுத்தனம் அகோர முகம் இருக்கும். கேது
இருந்தால் நிதானம், ஆன்மீக,
தெய்வீக எண்ணம், சோம்பேறித்தனம்
ஏற்படும்.
2ல் ராகு இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை
இல்லாத நிலை, பேச்சில் முரட்டுத்தனம், தன
நெருக்கடி, களத்திர தோஷம்
உண்டாகும். 2ல் கேது இருந்தால் ; பேச்சில்
நிதானம், குடும்ப வாழ்வில் ஈடுபாடு
இல்லாத நிலை, ஆன்மீக தெய்வீக
செயல்களில் ஈடுபாடு ஏற்படும்.
3ல் ராகு இருந்தால் எடுக்கும் முயற்சியில்
வெற்றி தைரியம் துணிவு
ஏற்படுமென்றாலும் சகோதர தோஷத்தை
தரும் 3ல் கேது இருந்தால் ; ஏற்றம், உயர்வு,
உடன் பிறப்பிற்கு தோஷம் என்றாலும்
பெண் உடன் பிறப்பு ஏற்படலாம்.
4ல் ராகு இருந்தால் கல்வியில் தடை,
தாய்க்கு தோஷம் கண்டம், சொந்த
வீடு வாகனம், அமையத் தடை, சுக வாழ்வு,
சொகுசு வாழ்வு பாதிப்பு
ஏற்படும் 4ல் கேது இருந்தால் ; தாய்க்கு
தோஷம், கல்வியில் தடை என்றாலும் மருந்து
கெமிக்கல் தொடர்புள்ள கல்வி,
பரந்த மனப்பான்மை உண்டாகும்.
ராகு 5ல் இருந்தால் உயர் கல்வியில் தடை,
பூர்வீக தோஷம், புத்திர தோஷம் வயிறு வலி
உண்டாகும். கேது 5ல் இருந்தால் ; வயிறு
கோளாறு, புத்திர தோஷம் என்றாலும்
பெண் குழந்தை யோகம் உண்டாகும்.
ராகு 6ல் இருந்தால் எடுக்கும் முயற்சி
வெற்றி, எதிரிகளை வெல்லும் அமைப்பு
தைரியம் துணிவு உண்டாகும். நிண்ட ஆயுள்
எதிர் பாராத பண வரவு உண்டு. கேது 6ல்
இருந்தால் ; புகழ், பெருமை, எடுக்கும்
முயற்சியில் அனுகூலம், வீண், வம்பு வழக்கு
ஏற்படும்.
ராகு 7ல் இருந்தால் களத்திர தோஷம், வே-று
மதம் பெண்ணை திருமணம்
செய்யும் நிலை, கூட்டாளிகளால்
அனுகூலம் இல்லாத நிலை ஏற்படும் கேது 7ல்
இருந்தால் ; காதல் திருமணம், மண
வாழ்வில் பிரச்சனை உண்டாகும். சுக
வாழ்வு பாதிப்பு.
8ல் இருந்தால் ; ராகு 8ல் இருந்தால்
ஆரோக்கியம் பாதிக்கும் நிலை, விபத்து,
விஷத்தால் கண்டம், களத்திர வழியில்
உறவினர்கள் பகை உண்டாகும்.கேது 8ல்
இருந்தால் ; உடல் நிலை பாதிப்பு,
உறவினர் பகை, விபத்து குடும்ப வாழ்வில்
ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகும்.
ராகு 9ல் இருந்தால் வெளியூர்
வெளிநாடு மூலம் அனுகூலம், தந்தைக்கு
கெடுதி, தந்தை வழி உறவினர் பகை,
தவறான பழக்க வழக்கம் உண்டாகும்.
பெண்னென்றால் புத்திர தோஷம்
உண்டாடும்.கேது 9ல் இருந்தால் ; தந்தைக்கு
தோஷம், தெய்வீக காரியம்,
பொது காரியங்களில் ஈடுபடும் நிலை,
பொருளாதார நெருக்கடி,
கஷ்டம் உண்டாகும்.
ராகு 10ல் இருந்தால் எதிர்பாராத
உயர்வு, ஏற்றம் நவீனகரமான
செயல் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு,
திடீர் தன வரவு ஏற்படும். கேது 10ல்
இருந்தால் ; பொதுக்
காரியங்களில் ஈடுபடும் நிலை, எதிலும்
நிதானம், நேர்மை இருக்கும்.
ராகு 11ல் இருந்தால் எதிர்பாராத
உயர்வு ஏற்படும். தொழில் சுய
முயற்சியால் வெற்றி,
ஸ்பெகுலேஷன் மூலம் உயர்வு
உண்டாகும். மூத்த சகோதர தோஷம் ஆகும். கேது
11ல் இருந்தால் ; எடுக்கும் முயற்சியில்
வெற்றி அனுகூலம், தொழில்
ரீதியாக லாபம் உண்டாகும். மூத்த
சகோதர தோஷம், சகோதரி வாய்ப்பு உண்டு.
ராகு 12ல் இருந்தால் கண்களில்
பாதிப்பு, கட்டில் சுக வாழ்வில் பிரச்சனை
என்றாலும் வெளியூர் வெளிநாடு
மூலம் அனுகூலம் உண்டாகும். கேது 12ல்
இருந்தால் ; ஸ்தல தரிசனம் உண்டாகும்.
மறு பிறவி இல்லை. கட்டில் சுக வாழ்வில்
ஈடுபாடு இல்லாத நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment