Saturday 23 July 2016

நட்சத்திரங்களின் கணம் பற்றிய ஒர் உண்மை


நட்சத்திரங்களுக்கு தேவம், மனுஷம்,
ராஜஸம என மூன்று வித கணங்கள்
உண்டு. இவை மனித மனதின் சுபாவத்தை
குறிப்பவை அல்ல. சந்திரன் சரீரத்தை
குறிப்பிடுபவர். சந்திரன் நின்ற நட்சத்திர
கணத்தின்படி ஒருவரின் தேக குணம் அமையும்.
தேவ கணத்தில் பிறந்தோரின் தேகம்
மென்மையாகவும் தன்மையுமாக
விக்கிரகம் போல் பாதுகாக்கப்பட வேண்டும்.
ராஜஸ கணத்தில் பிறந்தோரின் தேகம் வலுப்
பெற்றதாக அமைவதோடு
எதையும் தாங்குவதாக அமையும்.
மனுஷ கணத்தில் பிறந்தவர் தேகம் இவ்விரு
தன்மைகளும் உடையதாய் அமையும். மாறும்
தன்மை உடையது. அன்றைய நடசத்திரத்துக்கு
ஏற்ற தன்மையாக தேகம் உருமாறும்.
ராஜஸ கணத்தில் பிறந்தவர் தேகம்
எவ்வளவு வதைத்தாலும் தாங்கும்.
ஆனால் தேவ கணத்தில் பிறந்தவர் தேகம்
சீக்கிரம் ஓய்வை தேடும்.
ராஜஸ கணத்தில் பிறந்தவருக்கு
நாள்பட்ட போதை வஸ்து பழக்கங்கள் கூட
பெரும் பாதிப்பை தருவதில்லை.
ஆனால் தேவ கணத்தார் தேகம் சிறு
உணவு மாறுபாட்டைக் கூட தாங்காது.
போதை பக்கம் தலை வைக்கக்கூடாது.
மனுஷ கணத்தார் இரண்டும்
கலந்தவர்கள். உதாரணமாக ராஜஸ
கண நாளில் இவர்களுக்கு
ஒத்துக்கொள்ளும் அசைவம் தேவ கண
நாளில் ஒத்துக்கொள்ளாது.
திருமண பொருத்தத்தில் இது எவ்வித
முக்கியத்துவம் என்று புரிந்திருக்கும்.
ஜோதிடத்தின் திசை போன்ற சகலத்திற்கும் இதனை
புகுத்திப் பார்க்க சரீர ஆரோக்கியம் பற்றிய
உண்மை விளங்கும்.

No comments:

Post a Comment