ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு
நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது
குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவைகளை நாம் வெற்றி
சின்னங்களாகப்பய
ன்படுத்திக்கொள்ளலாம்.
எப்படியென்றால், நாம் வசிக்கும்
வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக
முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு
(Letter pad) இவைகளில் அவரவர்
ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை
சின்னங்களாக பயன்படுத்திவந்தால்
வாழ்க்கையில் எளிதில் வெற்றி
பெறலாம்.இதற்கு ஆதாரம்
ஏதாவது கிடைக்குமா என்பதை ஆய்வு
செய்தபோது ,புராண
இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை
அறிய முடிந்தது. அவைகளைப்பார்ப்போம்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம
நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி
நட்சத்திரத்தின் உருவம் தேராகும்.
ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து
பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில்
வெற்றி தேடித்தந்தார்.
பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம
நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம்
நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும்.
ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை
வெற்றி கொண்டார்.
பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம
நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம்
நட்சத்திரத்தின் உருவம் மூன்று
பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது.
ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய்
அளந்து மூன்றாவது அடியை மஹாபலி
சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன்
கர்வத்தை அடக்கினார்.எனவே
ஸ்ரீவாமனருக்கு உலகளந்த
பெருமாள் என்னும் நாமம் உண்டு.
ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம்
மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம்
சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும்
ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற
வடிவத்தில்தான் இருக்கும்.
ஸ்ரீருத்திரனின் ஜென்ம நட்சத்திரம்
திருவாதிரையாகும். திருவாதிரை
நட்சத்திரத்தின் உருவம் மண்டையோடு என ஜோதிட
நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீருத்திரன்
மண்டையோடுகளை மாலையாக
அணிந்திருப்பவன்.
மேற்கண்ட புராண, இதிஹாச
தகவல்களின் மூலமாக நாம்
அறிந்துகொள்வது
என்னவென்றால் நட்சத்திர
உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு
வெற்றிதரும் சின்னங்களாகும்.
அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய
உருவத்தை,தன்னோடு வைத்திருந்தால்
வாழ்க்கையில் எளிதில் வெற்றி
பெறலாம்.
Showing posts with label star simbols. Show all posts
Showing posts with label star simbols. Show all posts
Friday, 25 March 2016
வெற்றிதரும் நட்சத்திர குறியீடு
Subscribe to:
Posts (Atom)