Wednesday 3 August 2016

செவ்வாய் தோசம் ஓர் அலசல்

செவ்வாய் தோசம் ஒரு
விளக்கம்:
செவ்வாய் கிரகம்
ஒன்பது கிரகங்களில் ஓன்று
.இந்த கிரகம் சூரியனை
போன்று அதிக
வெப்பமான கிரகம் .எனவே
இக்கிரகம் ஜோதிட ரீதியாக
ஒருவரின் ஜாதகத்தில் என்ன
பலனைச் செய்யும்?
மேஷம்,விருசிகம்
ராசியில் செவ்வாய்
ஆட்சி,உச்சம் அமைப்பு
உள்ள யாராயினும்,
செந்நிறம்
கொண்டவர்களாக
இருப்பார்கள்.உஷ்ணமான
உடல் நிலை
உள்ளவர்கள்,முன் கோபி.
ஒரு சாதகத்தில் செவ்வாய்
1,2,4,7,8,12 –இல் இருந்தால்
தோசம் என்று சொல்ல
படுகிறது. இதில்
லக்னம்,ராசி,சுக்கிரன்
இம்மூன்று
கிரகங்களுக்கும் பார்க்கப்பட
வேண்டும் என்று சாத்திரம்
படைத்த நமது
முன்னோர்களின்
பிரமானம்,அல்லது கருத்து.
செவ்வாய்
நெருப்பின் தன்மை
கொண்டது .எனவே
செவ்வாய் 2-ம் இடத்தில்
இருந்தால், ஏழாம்
பார்வையாக 8-ஆம் இடத்தை
பார்க்கப்படும் .8-ஆம் இடம்
என்பது மனிதருடைய
உந்திகமல ஸ்தனமாகும்
.இந்த உந்திக்கமலத்தில்
இருந்துதான் ஒருவருக்கு
ஆரோக்கியமும்
,ஆரோக்கிய குறைவும்
எற்படுகிறது.
· செவ்வாய் 8-ல்
இருந்தாலும், 2-ல் இருந்து
8-ஆம் இடத்தைப்
பார்த்தாலும்,உடம்பில் அதிக
உஷ்ணம் உண்டாகி அதிக
உடல் உறவில்
ஈடுபடவைக்கும்.அதனால்
தானும் கெட்டு
கணவனுக்கோ
,மனைவிக்கோ இந்த உஷ்ணம்
(உடலுறவு மூலம்) பரவி
ஆரோக்கியத்திற்கும்
,ஆயுளுக்கும் கெடுதல்
உண்டாக்கும்.
· அடுத்து 7-ஆம் இடம் மர்ம
ஸ்தானம் என்பது, இந்த
ஸ்தானத்தை பார்த்தாலும்,
அதில் இருந்தாலும்
உஷ்ணதோசம் ஏற்பட
வாய்ப்புள்ளது, என்று
கருதி 7-ஆம் இட
செவ்வாயும் தோசம்
செய்யும் என்றார்கள்.
· 4-ஆம் இடச் செவ்வாய் 4-ஆம்
பார்வையாக 7-ஆம்
இடத்தைப் பார்ப்பதால்
தோஷம் என்றார்கள் .4-ஆம்
இடம் என்பது உடல்
சுகஸ்தானம் ,ஆகவே
உஷ்ணம் ஏற்பட வாய்புள்ளது
.அதனால் செவ்வாய் 4-ஆம்
இடத்தில் இருப்பதும் குற்றம்
என்றாகிறது.
· செவ்வாய் 12-ஆம் இடத்தில்
இருந்தாலும் தோசம் என்று
கூறியது. ஏனெனில், 12-
ஆம் இடம் என்பது
போகஸ்தானம் என்பதால்
இதுவும் மர்ம ஸ்தானத்
தன்மை உடையது .12- ல்
இருக்கும் செவ்வாய் 7ஆம்
இடத்தை பார்க்கும்
என்பதால் தோசம் என்று
கூறபடுகிறது .
மேலே
சொல்லிய 1, 2, 4, 7, 8, 12 -இல்
செவ்வாய் தோசம் என்று
கூறியதின்
உட்கருத்து.மேலே உள்ள
இடங்களில் இருக்கும்
செவ்வாய் உடம்பில் அதிக
உஷ்ணத்தை உண்டாக்கும்
தன்மை உடையது .அதனால்
இத்தோசம் இருவருக்கும்
இருந்தால் நல்லது என்றனர்.
இருவருக்கும்
இத்தோஷம் இருப்பின்
இருவருடைய உடல்
அமைப்பின் தன்மையில் சம
அளவான உஷ்ணமோ
அல்லது ஆணுக்குச் சற்று
அதிக உஷ்ணம் இருப்பது,
பெண்ணுக்கு அதை விட
சற்று குறைவான உஷ்ணம்
இருப்பது ,ஒருவரை ஒருவர்
கெடுக்க இயலாது என்ற
கருத்தில் செவ்வாய்
தோஷத்திற்கு செவ்வாய்
வேண்டும் என்ற கருத்தைக்
சொன்னார்கள் .
இந்த செவ்வாய்
தோசம் பெரும்பாலும்
நிவர்த்தி அடைவதற்கு
நிறைய
வாய்புள்ளது.செவ்வாய்
தோசம் இருந்து கீழேயுள்ள
காரணங்களால் நிவர்த்தி
அடைந்திருந்தால்
,செவ்வாய் தோசம்
நிவர்த்தியாகிறது.
இதை விடுத்து
சிலர், மேல்
எழுந்தவாரியாகப்
பார்த்தவுடன் 1,2,4,7,8,12 -இல்
செவ்வாய் இருந்தாலே
தோசம் தான் என்று
சொல்லுவதில் தவறுகள்
ஏற்பட வாய்ப்புள்ளது
.பொதுவாக அகரம் என்று
சொல்லபடுகின்ற ஒரு
மனிதனின் உடல் அமைப்பு
(ஆண்,பெண்)பார்த்தல்
சாமுத்திரிக லக்ஷணம்
மரபுப்படி விகாரம்
அடையாமல் இருந்தாலே
செவ்வாய் தோஷம் இல்லை
எனலாம் .விகாரம் பெற்று
இருந்தால் அதை செவ்வாய்
தோச ஆய்வுக்கு
உட்படுத்தலாம்
.அதனால்தான் இன்றளவும்
மாப்பிள்ளை அல்லது பெண்
பார்க்கும் படலம்
நடைபெறுகிறது.
செவ்வாய் தோச நிவர்த்தி
:
1. செவ்வாய் தனது சொந்த
வீடான மேஷம் ,விருச்சிகம்
ராசியில் ஆட்சிபெற்று
அல்லது மகரத்தில் உச்சம்
பெற்று இருந்தால் தோசம்
இல்லை.
2. சிம்மம் (அ) கடக லக்னத்தில்
ஜனனம்
ஆனவர்களுக்கு,செவ்வாய்
எங்கு இருந்தாலும் தோசம்
கிடையாது.
3. தனுசு,மீன ராசியில்
இருந்தாலும் தோசம்
கிடையாது.
4. குரு,சனி இவர்களுடன்
இருந்தோ(அ) பார்க்கப்
பட்டாலோ தோசம்
கிடையாது.
5. சூரியன்,சந்திரன்
பார்த்தால் தோசம் இல்லை.
6. ஆட்சி,உச்ச நிலையில்
இருந்தால் தோஷமில்லை
என்பதன் அடிப்படைக்
காரணம் என்ன என்பதை
நோக்குமிடத்து, கிரகங்கள்
பாபியாயினும்,
தன்னுடைய
சுபஷேத்திரத்தில்
இருக்கும்போது
பாபதன்மை குறைந்து,
சுபதன்மை
கூடிவிடுவதால் நற்செயல்
புரியும் வாய்ப்புகள்
அதிகம்.எனவே இது தோசம்
இல்லை என்று கூறினர்.
7. குரு பவான் வீடாகிய
தனுசு ,மீனம் இவற்றில்
செவ்வாய் இருந்தால்
தோசமில்லை என்பதின்
காரணம், குருவின் வீடு
நல்ல குளிர்ச்சி
பொருந்திய இடமாகும்
.செவ்வாய் உஷ்ணதன்மை
உடைய கிரகம் .அது
குளிர்ச்சியான இடத்தில்
இருக்கும்போது
உஷ்ணதன்மை மாறிவிடும்
என்பதால் தோச நிவர்த்தி
என்று கூறினர்.
8. அதுபோல குரு
பார்த்தாலும் தோசம்
இல்லை என்ற
கருத்தும்,குளிர்ச்சியான
கிரகம் என்றதால் ஏற்பட்டது
.ரிஷபம்,கன்னி என்ற
இரண்டு ராசிகளும் நீர்
தன்மை உடையது .இந்த
வீடுகளில் செவ்வாய்
இருந்தாலும் தோசம்
நிவர்த்தி ஆகிறது .
9. மகரமும் நீர் ராசி
என்பதால்,செவ்வாய் தோசம்
நிவர்த்தி ஆகிறது.
10. மேஷம் ,விருச்சிகம்
ராசியில் பிறந்தவர்களுக்கு
தோசம் இல்லை, காரணம்
லக்னாதிபதியாக வரும்
கிரகம் சாதகருக்கு
நன்மைதான் செய்வார்
என்பதால் தோசம் இல்லை.
11. மேலும் சூரியன்-
சந்திரன்
இரண்டும்,செவ்வாய்
இருக்கும் இடத்தை
பார்த்தால் தோசம்
இல்லை.காரணம்
சூரியனும்-
சந்திரனும்,இறைவன்-
இறைவி என்று
கருதப்படுகிறது.
12. குரு,சுக்கிரன்,புதன்
இவர்களால் நீக்க இயலாத
தோசத்தையும் சூரியன் -
சந்திரன் இவர்களால் நீக்க
முடியும் .எனவே
செவ்வாய்,சூரியன் -
சந்திரன் பார்வை
பெறுவது தோச நிவர்த்தி
ஆகிறது.

No comments:

Post a Comment